சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்
சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்
இந்தியாவில் ஒரு வேலையை முடிக்க 2ல் ஒருவர் லஞ்சம் கொடுத்திருக்கிறார்’ என்று டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பின் ஆய்வு தெரிவிக்கிறது.
உலகம் முழுவதும் லஞ்ச, ஊழல் மற்றும் வெளிப்படையான நிர்வாகம் பற்றி ஆண்டுதோறும் விரிவான ஆய்வு நடத்தி டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அறிக்கை வெளியிடுகிறது.
ஜெர்மனியை சேர்ந்த அரசு சாரா சமூக நல அமைப்பான அது, ‘சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை’ முன்னிட்டு கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.(ப்ளீஸ் செக் & அப்டேட்)
அதில்,”கடந்த ஆண்டில் உலகம் முழுவதும் 4ல் ஒருவர் லஞ்சம் கொடுத்துதான் தனது வேலையை முடித்துள்ளார். ஆனால், இந்தியர்களில் இரண்டில் ஒருவர் தங்கள் வேலையை முடிக்க லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது.” என்று கூறப் பட்டுள்ளது
ஆய்வில் பங்கேற்ற இந்தியர்களில் இது 54 சதவீதம். கடந்த 3 ஆண்டுகளில் லஞ்ச, ஊழல் உலகம் முழுவதும் அதிகரித்துள்ளதாக 10ல் 6 பேர் கருத்து தெரிவித்தனர்.
ஒவ்வொரு 9 நிறுவனங்கள், அரசு துறைகளில் ஏதாவது ஒரு சேவையை பெற நான்கில் ஒருவர் லஞ்சம் கொடுத்துள்ளது ஆய்வில் தெரிய வந்தது.
இது சுகாதாரம் முதல் வரி வசூலிப்பு துறை வரை நீண்டது. லஞ்சம் பெற்ற துறைகளில் போலீஸ் முதலிடத்தில் உள்ளது.
ஆய்வில் பங்கேற்றவர்களில் 29 சதவீதத்தினர் போலீசுக்கு லஞ்சம் கொடுத்ததாக தெரிவித்தனர்.
லஞ்சம் கொடுத்து வேலையை சமாளித்த இந்தியர்களில் பாதி பேர் பிரச்னைகள், பின்விளைவுகளை சந்திப்பதை தவிர்க்க அதை செய்ததாக கூறினர்.
மீதி பேர் வேலையை விரைவாக முடித்துக் கொள்ள லஞ்சம் அளித்ததாக தெரிவித்தனர். 2006ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் போலீசுக்கு லஞ்சம் இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறது. நீதித் துறை, பதிவு மற்றும் உரிமம் ஆகிய துறைகளிலும் லஞ்சம் கடந்த 5 ஆண்டுகளை விட அதிகரித்துள்ளது.
இந்நிலையில் லஞ்சம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதற்கு எதிராக போராடவும் ஐ.நா. சார்பில் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் டிசம்பர் 9ம் தேதி அனுசரிக்கப்படுது.
Comments