விவசாயிகள் போராட்டம் எதிரொலி: டாக்சி-க்கள் இயங்காது

 

விவசாயிகள் போராட்டம் எதிரொலி: டாக்சி-க்கள் இயங்காது




மத்திய அரசின் வேளான் மசோதாவுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் வலுவடைந்துள்ளது. பஞ்சாப், ஹரியான உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று மத்திய வேளாண் துறை அமைச்சர் விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்நிலையில் டெல்லிக்குள் பல்வேறு மாநில விவசாயிகளும் போராட்டத்தில் கலந்து கொள்ள வருவதால் எல்லைகள் மூடப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் மத்திய அரசு விவசாய சங்கங்களுடன் எதிர்வரும் 3ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிவித்திருந்தது. அதற்கு முன்னதாக இன்று பிற்பகல் 3 மணியளவில் விக்யான் பவனில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் டோமர் விவசாய சங்கங்களிடம் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். 
 
மேலும் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் குறித்து மத்திய அமைச்சர்கள் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா வீட்டில் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனிடையே விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அகில இந்திய டாக்சி சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது. 
 
இது குறித்து டாக்சி சங்கத்தின் தலைவர் பல்வந்த் சிங், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு பிரதமர், உள்துறை, வேளாண் அமைச்சர்களுக்கு இந்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 
 
விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாவிட்டால் 3 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் டாக்சி டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்படப்போவதாக அறிவித்துள்ளனர். 

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி