ரமணமகரிஷி (24)

 ரமணமகரிஷி (24)  

பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர் :  

பகுதி 24





 பகவான் ஸ்ரீ ரமணர் "அட்சரமணி  மாலை" பாட ஒரு சுவையான பின்னணியும்  இருக்கிறது. அவர் விருபாட்ச  குகையில் வாழ்ந்த காலத்தில் அவருடைய சீடர்கள் "பிட்சை"க்கு போகும் போது" அற்புத விக்ரக அமராவதீஸ்வரர்"

(ஆதிசங்கரர்           இயற்றியது) என்ற "அட்சரமண மாலையை "ப்  பாடுவார்கள்.  பகவானின் சீடர்கள் வருவதறிந்து வீட்டில் உள்ளவர்கள் சுத்தமான ஆகாரம் அளித்து வந்தனர். அந்த ஆகாரத்துக்கும்  போட்டி வந்தது. ஊரில் உள்ள பிற  சாதுக்கள் சிலர் தாங்களும் அதே சுலோகங்களை பாடிக்கொண்டு ஆசிரம பக்தர்களுக்கு முன்பே பிச்சை வாங்கி கொண்டு சென்றுவிடுவார்கள். தாங்கள் ஏமாற்றப்பட்டதறிந்து வீட்டுக்காரர்கள் வருந்துவார்கள். பழனி  சுவாமி இப்பிரச்சனைக்கு முடிவு கட்டவும், வீட்டுக்காரர்களின் சங்கடத்தை போக்கவும் வேறு பாடல்கள் வேண்டும் என்று

 பகவானிடம் கேட்டுக்கொண்டார் அப்படி பகவான் அருளியது தான் "அட்சரமணமாலை". பகவானின் சீடர்கள் அது  முதல் "அட்சரமண மாலை" பாடிக்கொண்டு "பிட்சை"க்கு போவார்கள்.


 ஸ்ரீரமணரைப் போல அண்ணாமலையிடமும் அண்ணாமலையாரைப்  போல ஸ்ரீரமணரிடம் ஆழ்ந்த அன்பு வைத்தவர்களுக்கு இப்பதிவுகள் உள்ளார்ந்த தத்துவங்கள் நிறைந்த  புலனாகும் நாம் கேட்பதைக் கொடுக்கும் இறைவனைப் போற்றித் துதிப்பதும்,  வாட்ட முற்று சோதனைகளுக்கு உட்பட்டு வருந்தும் நிலையிலும் அவனை மறவாது இருப்பதே சிறப்பு அண்ணாமலையாரைத்  துதிப்பவர்கள் துன்பத்திலும் இன்பம் காணும் தூய ஆன்மாக்கள் என்கிறார் பகவான் ஸ்ரீ ரமணர்.


 "அட்சரமணி மாலை"  பாடல்களை படிக்கும் போது  படைத்த பரம்பொருளாகிய இறைவனுடன்  இம் மணி மாலை படைத்த ஸ்ரீ ரமணரும் நம் உள்ளத்தில் இருப்பார்கள் என்பது உறுதி.


 ஸ்ரீ அருணாசல "அட்சரமணமாலை" யில் உள்ள  சில பாமாலைகளை  நாம் பார்ப்போம்.


 காப்பு பாமலை 

------------====---------

 அருணாச்சல வரற்கு ஏற்ற அட்சரமணமாலை சாற்றக் கருணாகர கணபதியே கரம் அருளிக் காப்பாயே.



" அருணாசல சிவ அருணாசல சிவ அருணாசல சிவ அருணாசலா!"


 "அருணாசல சிவ அருணாசல சிவ அருணாசல சிவ அருணாசலா!"



 அருணாசலம் என அகமே நினைப்பவர் அகத்தை வேரறுப்பாய் அருணாசலா!



 அழகு சுந்தரம் போல் அகமும் நீயும் முற்று அபின்னமாய் இருப்போம் அருணாசலா!


 அகம் புகுந்து ஈர்த்து உன் அக குகை சிறையாய்  அமர் வித்து என்கொள்  அருணாசலா!


 ஐம்புலக் கள்வர் அகத்தில் புகும்போது அகத்தில் நீ இலையோ அருணாசலா!



 கண்ணுக்கு கண்ணாய் கண் இன்றிக்  காண் உனை  காணுவது எவர் யார்  அருணாசலா!


 காந்தம் இரும்பு போல் கவர்ந்து எனை விடாமல் கலந்து என்னோடு இருப்பாய் அருணாசலா!


 அன்போடு உன் நாமம் கேள் அன்பர் தம் அன்பருக்கு அன்பன்  ஆயிட அருள் அருணாசலா!


 மெய்யகத்தின் மென் மலர் அனையில் நாம் மெய் கலந்திட அருள் அருணாசலா!


 மலை மருந்து இட நீ மறைத்திடவோ அருள் மலை மருந்தாய் ஒளிர் அருணாசலா!


 நோக்கியே கருதி மெய் தாக்கிய பக்குவம் ஆக்கி நீ ஆண்டு அருள் அருணாசலா!


 சொல்லாது சொலி நீ சொல்லற நில் என்று சும்மா இருந்தாய்  அருணாசலா!



இப்பாமாலை  வரிகள் மூலம் அவர் அருணாச்சலத்தை மட்டுமா அழைக்கிறார். அருணாச்சலத்திடம்  வந்து சேரும்படி நம்மையும் அல்லவா அழைக்கிறார்.


 அறமும் பொருளும் சிவம்

 ஆனந்தம் தருவது சிவம்


 மனமொன்றி வேண்டுவதும் சிவம்


 மாசில்லா இறைவனே சிவம் அல்லவா


 பகவான் ஸ்ரீ ரமணர், தன்னுடைய வாழ்நாளில் திருவண்ணாமலையில்  ஒரே ஒருவர் வீட்டுக்கு மட்டும் சென்று விருந்து உண்டார்,  இதன் விவரம் நாளைய பதிவில்.






Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி