புதிய நாடாளுமன்றத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை நடத்தலாம்

 வரும் 10-ம் தேதி புதிய நாடாளுமன்றத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை நடத்தலாம் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோரட் இன்று அனுமதியளித்தது.


சென்ட்ரல் விஸ்டா' திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்ற கட்டிடம், மத்திய தலைமைச் செயலகம் ஆகியவை கட்டப்பட உள்ளன. புதிய நாடாளுமன்ற கட்டிடம் இப்போதுள்ள கட்டிடத்தின் அருகே அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள கட்டிடம் வட்ட வடிவில் அமைந்துள்ளது. ஆனால் புதிய கட்டிடம் முக்கோண வடிவில் அமைக்கப்படவுள்ளது. 

இந்தப் புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான பூமி பூஜை வரும் 10-ம் தேதி டெல்லியில் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் மோடி பங்கேற்று புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டுகிறார்.

இந்நிலையில் மத்திய அரசின் விஸ்டா திட்டத்துக்கு எதிராக பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இது தொடர்பான மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான மத்திய அரசின் மத்திய விஸ்டா திட்டத்துக்கு எந்தவிதமான தடையும் இல்லை எனவும்   அடிக்கல் நாட்டுவதற்கும் தடை இல்லை என சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.

அதேவேளையில்,  விஸ்டா திட்டத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான முடிவை எடுக்கும் வரை, எந்தவிதமான கட்டுமானத்தையும் இடிக்கமாட்டோம். கட்டுமானம் ஏதும் கட்டப்படாது என்று மத்திய அரசு உறுதியளித்தது.

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி