’ஞாயிறு திரை மலர்
’ஞாயிறு திரை மலர் 20/12/2020
******************************************************************************************
சிவாஜியுடைய முதலாவது கார்.
எதிர்பாராதது’ படத்தில் சிவாஜி வழக்கம்போல பத்மினியின் காதலனாக வருகிறார். சந்தர்ப்பவசத்தால் சிவாஜியின் தகப்பன் நாகய்யாவுக்கு பத்மினி மனைவியாகி விடுகிறார். காதலன் இப்போது மகன் முறை. சிவாஜி ஒரு சமயம் பத்மினியை பழைய நினைவில் அணுகியபோது பத்மினி கன்னத்தில் ஒரு அறை கொடுக்கிறார். படம் எடுத்தபோது அந்த நேர உணர்ச்சி வேகத்தில் பத்மினி நிஜமாகவே அறைந்துவிடுகிறார். சிவாஜியுடைய கன்னம் வீங்கிப்போய் மூன்று நாட்களாக அவர் படப்பிடிப்புக்கு வரவில்லை. மூன்றாவது நாள் சிவாஜியைப் பார்க்க அவர் வீட்டுக்கு பத்மினி வருகிறார். அப்பொழுது ஒரு பியட் கார் வாங்கி சிவாஜிக்கு பரிசு கொடுத்தார். அதுதான் சிவாஜியுடைய முதலாவது கார்.
நெஞ்சம் மறப்பதில்லை
தொடர்
------மோகன்
பாடல் : அம்மம்மா கேளடி தோழி!
பாடியவர் : லூர்துமேரி ராஜேசுவரி (என்கிற)
எல்.ஆர்.ஈசுவரி!
ரசிகர்களின் இதய சிம்மானத்தில் தனியிடம் பிடித்துக் கொண்ட தமிழச்சி!!!
This song is Undoubtedly a A Masterpiece from LR Eswari
எல் ஆர் ஈஸ்வரியின் குரல் வளமும், பாடும் ஸ்டைல்ம் வேறு யாரும் காப்பி அடிக்க முடியாத ஒன்று.
வெளிநாட்டில் பிறந்திருந்தால் உலகப் புகழ் பெற்றிருப்பார்.
ஆணின் விரகதாபத்தை தியாகராஜ பாகவதர் பாடிய "மன்மத லீலையை வென்றார் உண்டோ" என்று பாடியிருந்த அதே சாருகேசி ராகத்தில், பெண்ணின் விரகதாபத்தை உனர்த்தும் பாடலாக இந்த பாடலை இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி
கருப்பு பணம் என்ற படத்தில் அமைத்தனர்
அதே படத்தில்
"ஆட வரலாம்" என்ற பாடல் எல் ஆர் ஈஸ்வரி க்கு பெருமை சேர்த்தது என்ற நிலையில் இந்தப் பாடல் ரசிகர்களால் ஏற்று கொண்டாட சற்று நேரம் பிடித்தது
ஆனால்அந்தப் பாடலை போலவே இன்றும் ரசிக்கக் கூடிய பாடலாக இது இருக்கிறது....
SPB போலவே முறையான இசைபயிற்சி இல்லாமலேயே இந்த உயரத்தை எட்டியவர்
அன்னக்கிளியில் ஜானகி உச்சம் தொட்ட தாலும் இளையராஜாவின் வாணிக்கு இவர் பாடும் பாடல் பாணி பொருந்தாது என்ற நினைப்பிலும் இவரது கலை உலக வாய்ப்புகள் குறைந்து போனது
இருப்பினும் கல்யாண வீடுகளில் வாராயோ தோழி வாராய் பாடலும் ஆடி மாதத்தில் அம்மன் பாடல்களின் மூலமாக இன்றும் இவர் தான் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார்!
சரி பாடலுக்கு வருவோம்
பாடலை சற்றும் விரசம் கட்டாமல் அதே நேரத்தில் சரியான உணர்வை வெளிப்படுத்தும் விதமாக பாவத்துடன் பாடியிருக்கிறார்
ஈஸ்வரி ஒவ்வொரு வார்த்தைகளையும் தனித்தனியாக ஸ்பஷ்டமாக உச்சரிப்பதில் சீர்காழி கோவிந்தராஜனக்கு நிகர் இவரே...
இந்த பாடலில் வரிகளுக்கு கொடுத்திருந்த அழுத்தமும் உச்சரித்த விபரமும் ரசிக்கத்தக்கவை
உதாரணமாக அம்மம்மா என்ற வார்த்தையில் அவர் காட்டியிருந்த அழுத்தம் சிறப்பானது
அம்மம்மா என்ற வார்த்தையை பாடல் முழுதும் பல இடங்களில் வந்தாலும் முதல் தடவை உச்சரித்ததுபோன்றே கடைசிவரை ஒரு தனித்துவத்துடன் உச்சரித்திருக்கிறார்....
என்னால் சரியாக விளக்க முடியவில்லை
கேட்டுப்பாருங்கள் புரியும் ....
"தன்னாலே பேச வைத்தானே
முள் மீது தூங்க வைத்தானே" என்ற வரிகளில் சரியான பாவத்தை காட்டியிருக்கிறார்.
மேலும் கீழும் ஏற்ற இறக்கத்துடன்,
பாடல் முழுதும் ஒரு அலையடிப்பதைப்போல பாடியிருக்கிறார்.
The emotions are brought out with effortless ease by her ...
ஈஸ்வரி இந்த பாடலை பாடிய விதம் என்றும் ரசிக்கத்தக்கது
தன்னாலே பேச வைத்தானே
முத்தாரம் சரியவைத்தானே
என்ற வரிகளில் எல்லாம் அவர் கொண்டு வந்திருக்கிற அந்த baaவம் அந்த வரிகளுக்கு உரிய சரியான baaவம்...
In those days (1962?) this song was an experimental song.
பெண்களின் விரகதாபத்தை "உன்னை கண் தேடுதே" போன்ற பாடலின் மூலம் ஏற்கனவே அப்போது வந்து இருந்தாலும், இது போன்ற style இல் ஒரு கர்நாடக ராகத்தை இணைத்து கொடுத்த முயற்சி ஒரு புது முயற்சி
பாடலின் ஆரம்பத்திலேயே மெல்லிய saxophone நம்மை ஈர்க்கிறது . பாடல் முழுதும் வரிகள் அழுந்திவிடாமல் இசைகருவிகளின் பக்கவாத்தியம் பக்காவாக அமைந்துவிட்டது
இந்த tuneனில் உள்ள உணர்வை கண்ணதாசன் வரிகளில் அழகாக கொண்டு வந்துவிட்டார்....
கொஞ்சம் அசந்தாலும் விரசமாக ஆகிவிடக் கூடிய விஷயத்தை அவர் தேர்ந்த கலைஞனாக சிறப்பாக கையாண்டிருக்கிறார்
முத்தாரம் சரிய வைத்தானே
முள் மேலே தூங்க வைத்தானே
நூலாக இளைக்க வைத்தானே
பாலாக வெளுக்க வைத்தானே
என்று நாயகியின் நிலையை கூறும் கவியரசர்,
தொடர்ந்து
தன்னாலேபேச வைத்தானே
பன்னீரை கொதிக்க வைத்தானே
தள்ளாடி நடக்க வைத்தானே
எல்லோரும் சிரிக்க வைத்தானே!
என நிறைவு செய்யும் போது சபாஷ் போட தோன்றுகிறது!
பாடலில் இன்னுமொரு சிறப்பு ..... தற்போது Rap என்று சொல்லப்படும் இசை யுக்த்தியை 50 வருடங்களுக்கு முன்னரே இந்தப் பாடலில் உபயோகப்படுத்தி இருக்கிறார்கள்
(That whispering between interludes...👇🏽
அய்யய்யோ பாவமே
அணையாத மோகமே
அனுபவம் கொஞசமே
அலையுது நெஞ்சமே)
பாட்டு ரொம்ப சாஃப்ட் ஆக ஆரம்பித்து soft ஆகவே ஈஸ்வரி பாடலை நிறைவு செய்யும்போது, (அம்மம்மா என்ற வரிகளை7 வினாடிகள் ஒருவித echo effect உடன் fadeout ஆகும் போது) "நாம் எப்பேர்ப்பட்ட பொற்காலத்தை காலத்தை கடந்து வந்திருக்கிறோம் "என்ற எண்ணம்தான் மேலோங்கி நிற்கும்!
கேளுங்கள். இரவு வரை ரிப்பீட் mode இல் இந்த பாட்டு உங்களுக்கு கேட்கும்.
இன்று இரவு தூங்க போகும் முன் இன்னும் ஒருமுறை கேளுங்கள்.!
Such a simple tune which is fresh even after 60 years. !
மீண்டும் சந்திப்போம் /வணக்கம்
---மோகன்
Comments