ரமணமகரிஷி (6)
ரமணமகரிஷி (6)
பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர் :
பகுதி (6)
ஸ்ரீ ரமணர் திருவண்ணாமலையில் உள்ள நந்தவனத்திற்கு இடம் பெயர்ந்தார்.
அலரிச் செடிகள் அங்கே புதிராய் மண்டிக் கிடந்தன. பத்து பனிரெண்டு அடி உயர செடிகள்,இங்கு சுவாமி பரவச நிலையில் மூழ்கிவிடுவார். பின்னர் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடம் சென்றுவிடுவார். விழிப்புறும் போது எப்படி அவ்விடம் வந்தோமென்பது அறியாமல் போகும் அவருக்கு.
சில சமயத்தில் கோயில் எல்லைக்குட்பட்ட சாலையோர மரத்தின் கீழ் அமர்வார் அல்லது மங்கை பிள்ளையார் கோயிலில் இருப்பார்.
ஆண்டு தோறும் தீபத்திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கில் மக்கள் வருவதுண்டு. அந்த ஆண்டு தான் இளைய சுவாமியை முதல் முதலில் பார்க்கவும் கூட்டம் வந்தது. அப்போது தான் சுவாமிகளின் முதல் பக்தரான உத்தண்டி நயினாருக்கு அவரிடம் நெருக்கம் ஏற்பட்டது. ஆன்மீகத்தில் நிறையக் கற்ற நயினார் அமைதியற்றவராய் இருந்தார்.
சுவாமிகள், தேகம் பற்றிய சிந்தனையின்றி தொடர்ந்து சமாதி நிலையிலேயே இருக்கக் கண்ட நயினார்க்கு தான் தேடியது கிடைக்கும் இடம் இதுவேயென்று புரிந்தது. சுவாமிகள் பணிவிடை செய்கிற விருப்பம் நிறைய இருந்தாலும் அங்கே அவர் செய்யக்கூடிய வேலை மிகக் குறைவாக இருந்தது. சுவாமிகளை பார்க்கவரும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார் குறும்பு செய்யும் பையன்களை விரட்டியடித்தார்.
பக்தி நூல்களை தினமும் பாராயணம் செய்து வந்த நயினார் சுவாமிகளிடம் உபதேசம் பெற விரும்பினார்.ஆனால்சுவாமிகளோ ஒருபோதும் பேசியதில்லை. தாம் முதலில் பேசவோ மௌனத்தில் குறுக்கிடவோ நயினா ரும் நினைக்கவில்லை.
அண்ணாமலை தம்பிரான் என்பவர் ரமணரை பார்த்தார். தனிமையில் அமர்ந்து இருக்கும் தவ அழகு அவரைக் கவர்ந்தது. தினமும் அவ்வழியே சீடர்களுடன் துதிப் பாடல்களைப் பாடிச் செல்கிறவர் அவர். அடியவர்கள் வழங்கும் பொருட்களை சேகரித்து எளியவற்கு அன்னதானம் செய்வார். ஸ்வாமிகளை பார்த்த முதல் அவரை வணங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
பகவான் ஸ்ரீ ரமணரின் தனித்தன்மையில் இதுவும் ஒன்று.அவர் தனது கண்களாலேயே, எதிரில் இருப்பவரின் நிலையை உணர்ந்தி விடுவார்.அவரது கண்கள் திறந்திருக்கும் போது.கண்ணில் படும் எந்த பொருள் மீதும் அவர் நாட்டம் இல்லாதவராயும் இருப்பார்.
எதையும் இழக்க தயாராக இல்லாதவன், பரமாத்மாவை அனுபவிப்பதற்கு ஒரு போதும் வாய்ப்பில்லை. ஏதும் இல்லாதவன் மீது அதாவது எந்த பொருள் மீது ஆசை கொள்ளாதவரிடம் பரம்பொருள் நெருங்கி வருவதை உணர்ந்தார்.
நான் என்ற எண்ணம், அகந்தை விட்டொழிக்கப்பட வேண்டும்.
அறிபவனை அறிவது தான் உண்மையான ஞானம். ஏதும் அற்றவனாய், எதையும் எதிர்ப் பார்க்காதவனாய் இருப்பவர்களிடம் சுமைகள் ஏதுமில்லை,
ரமண சுவாமி அவர்கள், கல்வி கற்றவர் என்பதும், எழுதப் படிக்கத் தெரிந்தவர் என்பதும் அவருடைய பக்தர்களுக்கு பெருவியப்பு. அவர்களில் ஒருவர் வெங்கட்ராம ஐயர். வட்டாட்சியர் அலுவலகத்தில் தலைமை கணக்கர் வேலை பார்ப்பவர். சுவாமியின் பூர்வீகம் பற்றி அறிய விரும்பினார். ரமணர் மௌனத்திலே இருந்தபடியால் ஒரு காகிதத்தையும் பென்சிலையும் அவர் முன்வைத்து ஊர் பெயர் விவரங்களை தெரிவிக்க கூறினார்.
சுவாமி அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கவும் கணக் கருக்கு வருத்தம். தாம் விரும்பிய தகவலை அறிகிற வரை உணவு உண்ணப் போவதுமில்லையென்றும் அலுவலகம் போவதில்லை என்றும் அறிவித்துவிட்டார்.
பகவான். தனது பெயரான வெங்கடராமன்,, ஊர் திருச்சுழி என்று ஆங்கிலத்தில் எழுதினார். சுவாமிகளுக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தது என்பதால் பக்தர்களுக்கு கூடுதல் வியப்பை ஏற்படுத்தியது.
ஸ்ரீ ரமணர் அவர்கள் கடந்தகால விவரங்கள் குறித்து தெரிவித்ததால் பிறரு க்கு ஆச்சரியம்
தன் மகன் வேங்கட்ராமன் தற்போது ஸ்ரீரமணர் ஆகி மாறி இருப்பதன் விவரம் தெரிந்த தாயாரின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும், தமது திருக்குமாரனைப் பார்க்க ஆவல், அந்த ஆனந்தத்திற்கு அளவில்லை.
பெற்றவள், பகவான் ராமணரைப் பார்த்து பெற்றது என்ன என்பது நாளைய பதிவில்.
Comments