தேசிய மாசு தடுப்பு தினம்

 தேசிய மாசு தடுப்பு தினம் இன்று!


1984-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி இரவு மற்றும் 3-ம் தேதி அதிகாலைப் பொழுதில் மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் மீத்தைல் ஐசோ சயனைடு என்ற நச்சுவாயு விபத்தால் 2,500 பேர் இறந்தனர். கண் எரிச்சல், மயக்கம், மூச்சுத்திணறல் போன்ற உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டதோடு ஆயிரக்கணக்கானோர் கண்பார்வையையும் இழந்தனர். இந்த விபத்து உலகளவில் தொழிற்சாலை மாசால் நிகழ்ந்த மாபெரும் பேரிடர்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த விபத்தில் மரணம் அடைந்தவர்களின் நினைவாக இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 2-ம் தேதி தேசிய மாசு தடுப்பு தினம் (National Pollution Prevention Day) அனுசரிக்கப்பட்டு வருகிறது.
தொழிற்சாலைக் கழிவுகளாலும், மனித அலட்சியத்தாலும் உருவாகும் மாசுகளைத் தடுத்தல். தொழிற்சாலைப் பேரிடர்களைத் தடுப்பது, அவற்றை சரியான முறையில் கையாள்வது குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்வது.
சட்டரீதியிலான மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடமும், தொழிற்சாலை நிர்வாகத்திடமும் ஏற்படுத்துதல் போன்றவையே இந்த தினத்தை அனுசரிப்பதன் முக்கிய நோக்கம். மனித நடவடிக்கைகளால் உண்டாகும் பலவிதமான மாசுகளால் நீர், நிலம், காற்று, காடு போன்ற இயற்கை வளங்கள் தற்போது பெருமளவில் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றன.
ஆகவே, சுற்றுச்சூழல் மாசுபாடுகளைக் குறைக்க வேண்டியது அவசியம்.


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி