காற்று வெளியிடைக் கண்ணம்மா
இன்று பாரதியின் ஒரு காதல் பாடல்
காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் - அமுது
ஊற்றினை ஒத்த இதழ்களும் - நிலவு
ஊறித் ததும்பும் விழிகளும் - பத்து
மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் - இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக்
(காற்று)
நீயெனது இன்னுயிர் கண்ணம்மா! - எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்எனக் கொண்ட பொழுதிலே - என்றன்
வாயினிலே அமு தூறுதே - கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே
கண்ணம்மா ம்ம்ம்
கண்ணம்மா ம்ம்ம் - கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த்
தீயினிலே வளர் சோதியே - என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே! – இந்தக்
பாடல்: காற்று வெளியிடைக் கண்ணம்மா
படம்: கப்பலோட்டிய தமிழன்
வரிகள்: பாரதியார்
குரல்: பி.பி.ஸ்ரீனிவாஸ் - பி.சுசீலா
இசை: ஜி.ராமநாதன்
(காற்று)
நீயெனது இன்னுயிர் கண்ணம்மா! - எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்எனக் கொண்ட பொழுதிலே - என்றன்//
அற்புதமான வரிகள். அதிலும் பி.பி ஸ்ரீனிவாசரின் தேனான குரலில் - கேட்கும் போது மனது எங்கேயோ போய்விடும்!
/உயிர்த்
தீயினிலே வளர் சோதியே - என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே! - //
உயிர்த் தீயாம் !அதில் வளரும் ஜோதியாம்! ஆஹா!
கவிதை படைத்த பாரதிக்குக் கலைவாணியின் அருள் இல்லாவிடில் இப்படியெல்லாம் எழுத சாத்தியமே இல்லை. 'தெளிவுறவே மொழிந்திடுத்ல்,சிந்திப்பார்க்கே களிவளர உள்ளத்தில் ஆனந்தக்கனவுபல காட்டல் 'என்றவன் அல்லவா அவன்? படைத்தவனுக்கு என்றும் மனம் நெகிழ்ந்த நன்றி.
பாடலில் காதலின் ஆழம் பிரமிக்கவைக்கிறது.
சாதாரண காற்றா என்ன தென்றல் காற்றாய் என்றன் செவிஅருகே சாமரம் வீசும் 'எவர்க்ரீன் சாங் 'இது! இங்கு யாருக்கு நன்றி சொல்ல இசை அமைத்த ராமநாதனுக்கா
பாடிய பிபிஎஸ் பிஎஸ் இருவருக்கா நடித்தபோது கண்ணம்மாவாகவே மாறி நாணத்தில்'ம்ம்' என்று சொல்லிய சாவித்திரிக்கா
ஸ்ரீனிவாஸ் சாரும், சுசிலாவும் இழைந்த பாடல். ஜெமினி கண்ணம்மா என்று கூப்பிட,சாவித்திரி ம்ம் என்று பதில் சொல்ல
கண்ணம்மா பாடல் உருக்கம்.விண்ணவனாகப் புரிபவள்.
Comments