தேசிய வழக்கறிஞர்கள் தினம்!
டிசம்பர் – 03, இன்றைய தினம்!
இன்று தேசிய வழக்கறிஞர்கள் தினம்!
இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களை நினைவு கூறும் வகையில் வழக்கறிஞர்கள் தினம் கொண்டாடப்படுகிறது…
இந்திய சுதந்திரப் போராட்டத்தி
ல் வழக்கறிகளின் பங்கு அளப்பறியது. கோகலே, சித்தரஞ்சன் தாஸ், மகாத்மா காந்தி, மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, ஜின்னா, வ.உ.சி என்று அந்த பட்டியல் மிக நீளம்..
ஒரு மணி நேரத்திற்கு பல லட்சம் கட்டணம் வாங்கும் வழக்கறிஞர்கள் உள்ள அதே வேளையில் அன்றாட ஜீவிதத்திற்கே கஷ்டப்படுகிற வழக்கறிஞர்களும் உள்ளனர் என்பதை சில ஆண்டுகளுக்கு முன்பு வறுமையில் வாடும் வழக்கறிஞர்கள் என்று ஜூனியர் விகடன் கவர் ஸ்டோரி வெளியிட்டது.
பரம்பரையாக இத்தொழிலில் உள்ளவர்களுக்கு இது ஒரு cake walk போல…ஆனால் முதல் தலைமுறையாக கிராமப் புற பின்னணியில் படித்து வழக்கறிஞர்களாக வருபவர்கள் மிகுந்த உழைப்பு, பொறுமை, பல சமயங்களில் அவமானங்கள் ஆகியவற்றையும் சுமந்துதான் நடுத்தர வயதிற்கு மேல் பிரகாசிக்க இயலும்…
இதில் சாதி மற்றும் பிற சமூக காரணிகளுக்கும் பிரதான பங்குண்டு..மேலும் கடும் போட்டியும் பொறாமையும் நிலவுகிற தொழிலும் கூட.
நேர்மையான முறையில் தன்னை நம்பி வருகிற கட்சிக்காரர்களிடம் உண்மை நிலையை எடுத்துச் சொல்லும் ஒரு வழக்கறிஞரை விடுத்து , பொய் வாக்குறுதிகளையும் நம்பிக்கைகளையும் தருகிற சில வழக்கறிஞர்களை நம்பிச் செல்கிற அளவு மட்டுமே விழிப்புணர்வு கொண்ட வர்கள் மத்தியில் உண்மையில் வழக்கறிஞர் தொழில் கடினமான ஒன்றே….
சட்டக் கல்லூரியில் வழக்கறிஞர்களை social engineers என்றும் privileged persons என்றும் சொல்லித் தருவார்கள். ஆனால் நடைமுறையில் வாடகைக்கு வீடு கிடைப்பதும், வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களில் அவர்களுக்கு கடன் கிடைப்பதும் குதிரைக்கொம்பே…
ஆனாலும் இன்றுவரை சமூகத்தின் அனைத்து போராட்டக் களங்களிலும் முன்கை எடுப்பவர்கள் வழக்கறிஞர்களாகவே உள்ளனர்.
நானிபல்கிவாலா குறிப்பிட்டது போல ஒரு வழக்கறிஞருக்கு ஒரு மரத்தில் எத்தனை இலைகள் இருக்கின்றன என்று கூட தெரிந்திருக்க வேண்டும்….
எனவேதான் அவர்கள் தங்கள் தொழிலை இறுதி வரை
“practice” என்றே சொல்கிறார்கள்..
Comments