இயக்குநர் சேரன்
இயக்குநர் சேரன் பிறந்த நாள் இன்று
தமிழ் சினிமா சினிமாவின் மறக்கமுடியாத இயக்குனர் “சேரன்” என்றே சொல்லலாம். இவர் இயக்கிய முதல் படத்தில் தனது முத்திரையை ஆழமாகப் பதித்து விட்டார். பாரதிராஜா வைப்போல் கிராமத்துப் பின்னணியில் படத்தை இயக்கும் ஆர்வம் கொண்ட இவர், கேஎஸ் ரவிக்குமார் அவர்களின் உதவி இயக்குனராக பணியாற்றினார். மூன்றுமுறை தேசிய விருதுகளை பெற்ற இயக்குனர் என்ற பெருமையையுடன் வளம் வரும் இயக்குனர் சேரன்.
சேரனின் ஆரம்பகால வாழ்க்கை
சேரன், மதுரையில் உள்ள பழையூர்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தார். இவரின் தந்தை “பாண்டியன்” அங்கு உள்ள திரையரங்குகளில் ப்ரொஜெக்டர் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இதனாலேயே இவருக்கு சினிமா மேல் ஆர்வம் அதிகரித்தது. இவரின் தாய் பெயர் “கமலா”. இவர்களைப் பிரிந்து சென்னைக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு வந்துள்ளார். ஆரம்பத்தில் கிடைத்த வேலைகளை செய்து வந்த இவர் “புரியாத புதிர்” படத்தில் உதவி இயக்குனராகவும், “சேரன் பாண்டியன்” “நாட்டாமை” போன்ற படத்தில் அசோசியேட் இயக்குனராக பணியாற்றினார்.
வாழ்க்கையை மாற்றிய படங்கள்
1997ஆம் ஆண்டு முரளி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் “பொற்காலம்” இந்த படத்தில் இயக்குனராக அறிமுகமான சேரன், அண்ணன் தங்கை பாசத்தை அற்புதமாக வெளிக்காட்டி இருந்தார். இதன் தாக்கத்தினால் இந்த திரைப்படம் தேசிய விருதை பெற்றது, அதே வருடம் “பாரதி கண்ணம்மா” என்ற படத்தையும் இயக்கினார். அதில் பார்த்திபன், மீனா நடித்திருந்தார்கள். இதுவும் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. 2000 வருடம் மிகப்பெரிய நிறுவனங்கள் ஏமாற்றம் தொழில் நடத்தி வந்த காலங்கள் அது, அதன் தாக்கத்தினால் “வெற்றிக்கொடிகட்டு” என்ற படத்தை இயக்கியிருந்தார். இதைத்தொடர்ந்து முதல்முதலாக “ஆட்டோகிராஃப்” என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார் சேரன். ஒரு மனிதனின் நான்கு கட்ட வாழ்க்கையை அற்புதமாக சொல்லி இருக்கும் படம் அது.
விருதுகள்
இவரின் படங்களின் மூலமாக ரசிகர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல், பல விருதுகளையும் அள்ளினார். கிட்டத்தட்ட 3 தேசிய விருதுகள், 5 தமிழக விருதுகள் மற்றும் ஏராளமான பிலிம்பேர் விருதுகளையும் பெற்றார்.
தந்தை-மகன் பாசத்தை ஓர் திரை நாவலாக வெளியிட்ட திரைப்படம்தான் “தவமாய் தவமிருந்து”. இதுவரை யாரும் எதிர்பார்க்காத முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தை கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் இது. ஓர் அச்சகத் தொழிலாளர் தனது குடும்பத்தை எப்படி வழிநடத்தி தனது வாழ்க்கையை முழுமை அடைய செய்கிறார் என்பதே இப்படத்தின் கதை. கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்குமேல் ஓடும் இந்த திரைப்படம் எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தது.
அதைத் தொடர்ந்து “பிரிவோம் சந்திப்போம்”, “ராமன் தேடிய சீதை”, “மூன்று பேர் மூன்று காதல்”, “யுத்தம் செய்” போன்ற படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டினார். கடைசியாக “திருமணம்” என்னும் படத்தை இயக்கினார். ஆனால் படம் வசூல் ரீதியாக வெற்றி அடையவில்லை. இதைத் தொடர்ந்து அவரின் அடுத்தப் படத்திற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.
மதிப்பைப் பெற்றுத் தந்த மகத்துவப் படைப்புகள்
‘பாரதி கண்ணம்மா’ சேரன் எழுதி இயக்கிய முதல் திரைப்படம். கிராமத்துச் சூழலில் பொருளாதார, சாதி வேறுபாடுகளைக் கடந்த காதலை உயிர்ப்புடனும் நிலப்பிரபுத்துவ விழுமியங்கள் கெட்டிதட்டிப்போன கிராமத்துச் சூழலில் சாதி கடந்த காதல் எதிர்கொள்ளும் துயர முடிவை முகத்தில் அடிக்கும் யதார்த்தத்துடனும் பதிவு செய்த அந்தப் படம் தலைசிறந்த படைப்பாளி ஒருவரின் வருகைக்குக் கட்டியம் கூறுவதாக அமைந்தது. ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பெரிதும் கொண்டாடப்பட்ட அந்தப் படம் சாதிய அமைப்புகளின் எதிர்ப்பைக் கடந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது சமூக மாற்றம் தொடங்கிவிட்டதற்கான அடையாளமும்கூட.
கிராமத்து யதார்த்தப் பின்னணியில் மாற்றுத் திறனாளிகளின் பிரச்சினைகளைப் பாசாங்கில்லாமல் ஒலிக்கச் செய்த ‘பொற்காலம்’ (1997), ஏழை எளிய மக்களின் பிரச்சினைகளைக் களையாமல் அவர்களை வெறும் வாக்கு வங்கியாகக் கருதும் அரசியல்வாதிகளைத் தோலுரித்த ‘தேசிய கீதம்’ (1998), ‘என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்’ என்ற மருதகாசியின் புகழ்பெற்ற திரைப்பாடல் வரிகளில் வெளிப்பட்ட உன்னதமான கருத்தை இயல்பான கதாபாத்திரங்கள், உயிரோட்டமுள்ள உணர்வுகளுடன் திரைப்படமாக விரித்த ‘வெற்றிக்கொடி கட்டு’ (2000), குடும்பப் பாசம், நட்பு, காதல் என மனித உறவுகளின் மகோன்னதத்தை நயமாக எடுத்துரைத்த ‘பாண்டவர் பூமி’ (2001) எனத் தொடர்ந்து தரமான படைப்புகளாய் கொடுத்து ரசிகர்கள் விமர்சகர்கள் மனங்களில் மதிப்புக்குரிய படைப்பாளுமையாக நிலைத்து நின்றார் சேரன்.
தேடிவந்த தேசிய அங்கீகாரங்கள்
அடுத்ததாக அவர் இயக்கிய ‘ஆட்டோகிராப்’ (2004), ’தவமாய் தவமிருந்து’ (2005) ஆகிய திரைப்படங்கள் சேரனை தேசிய அளவில் கவனம் ஈர்த்தன. இரண்டு படங்களும் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய காவிய அந்தஸ்தைப் பெற்றதோடு சேரனுக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தன. ‘ஆட்டோகிராப்’, கிராமத்தில் பிறந்து நகரத்தில் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட மனிதர்கள் கடந்து வந்த காதல்களின் நினைவோடையாக அமைந்தது.
‘தவமாய் தவமிருந்து’ கிராமத்து உழைப்பாளி தந்தைகளின் வலிகளையும் தியாகங்களையும் ரத்தமும் சதையுமாக உலவிவட்ட காவியப் படைப்பு. இவ்விரு படங்களிலும் சேரன் காண்பித்த வாழ்வியல் அனுபவங்கள், ரசிகர்கள் அனைவரின் மன ஆழங்களுக்குச் சென்று தாக்கம் செலுத்தின. இரண்டு படங்களும் தேசிய விருதையும் மாநில அரசு விருதையும் மற்றும் பல விருதுகளையும் வென்றன.
தொடர்ந்து ‘மாயக் கண்ணாடி’ (2007), ‘பொக்கிஷம்’ (2009), ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ (2015), ‘திருமணம்’ (2019) ஆகிய படங்களிலும் தன் தனித்துவ முத்திரையை வெளிப்படுத்தினார் சேரன்.
நடிகராகவும் நன்மதிப்பு பெற்றவர்
நடிகராகவும் ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்றிருப்பவர் சேரன். தங்கர் பச்சான் இயக்கிய ‘சொல்ல மறந்த கதை’ படத்தில் கதாநாயகனாக நடித்த சேரன் முதல் படத்திலேயே ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றார். அவரே இயக்கித் தயாரித்த ‘ஆட்டோகிராப்’ திரைப்படத்திலும் ‘தவமாய் தவமிருந்து’ திரைப்படத்திலும் சேரன் நடித்த விதம் ரசிகர்கள் அவரைத் தங்களில் ஒருவராகக் காண வைத்தது மனதுக்கு நெருக்கமான திரைப்பட ஆளுமை ஆக்கியது.
கரு.பழனியப்பனின் ‘பிரிவோம் சந்திப்போம்’, ஜெகனின் ‘ராமன் தேசிய சீதை’, மிஷ்கினின் ‘யுத்தம் செய்’, வசந்தின் ‘மூன்று பேர் மூன்று காதல்’ என முக்கியமான இயக்குநர்களின் படங்களில் நாயகனாக நடித்தார் சேரன். இவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான கதாபாத்திரத்தை ஏற்று அவற்றுக்கு ஒரு தேர்ந்த நடிகரின் பங்களிப்பை வழங்கி பாராட்டுகளைப் பெற்றார்.
தொடர்ந்து நடிகராகவும் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் இயங்கிக் கொண்டிருக்கும் சேரன், சரத்குமாரின் நூறாவது திரைப்படமான ‘தலைமகன்’ படத்துக்குத் திரைக்கதை எழுதினார். ’மிக மிக அவசரம்’ படத்தின் மூலம் பாடலாசிரியரானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்றார். சமூக ஊடகங்களில் சமூகப் பிரச்சினைகள் குறித்து காத்திரமான கருத்துகளைப் பதிவு செய்கிறார்.
தவிர்க்க முடியாத படைப்பாளி
கிராமத்துக் கதைகளானாலும் நகரத்துக் கதைகளானாலும் மண்ணின் முகங்களையும் மண்ணுக்கேற்ற கதைக் களங்களையும் வைத்து மனித உணர்வுகளை உயிரோட்டத்துடன் சமூக அக்கறையைப் பாசாங்கில்லாமல் வெளிப்படுத்திய படங்களே சேரனைத் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத படைப்பாளி ஆக்கியிருக்கிறது எனலாம். ஒரு நடிகராகவும் பல வகையான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களுக்குப் பல்சுவை விருந்து படைத்திருக்கிறார்.
சேரன் இன்னும் பல தரமான படங்களை இயக்கி, பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து, மேலும் பல விருதுகளையும், அங்கீகாரங்களையும் பெற வேண்டும் என்று அவருடைய பிறந்த நாளான இன்று மனதார வாழ்த்துவோம்.

Comments