கண்களுக்கு ஆரோக்கியம்

 கண்களுக்கு ஆரோக்கியம்



உடலில் அதிக வேகமாக செயல்படும் உறுப்புகளில் கண்களும் ஒன்று.


வாரத்தில் குறைந்தது இரண்டு முறையாவது நாம் உண்ணும் உணவில் கீரையைச் சேர்த்துக் கொண்டு வந்தால், முதுமையில் ஏற்படும் கண் பார்வை கோளாறுகளை தடுக்கலாம்.


இன்றும்கிராமங்களில் வசிக்கும் வயது முதிர்ந்தவர்கள் பலர் கண்ணாடி அணியாமல்படிப்பதைக் காணலாம். அதற்குக் காரணம் ரசாயனம் கலக்காத இயற்கை உணவுகளே..


ஆனால் இன்று இரண்டு மூன்று வயது குழந்தைகள் கூட கண்ணாடி அணிந்திருப்பதைப்பார்க்கிறோம். அவசர கதியில் தயாரிக்கப்படும் இன்ஸ்டன்ட் உணவுகள், சத்தில்லா உணவுகள், மற்றும் கண்களை பாதிக்கும் தொலைக் காட்சிப் பெட்டி, கணினி... என பட்டியல் நீளும்.


கண்பார்வைக் கோளாறு ஏற்படக் காரணம்...


உறவினர் முறையில் திருமணம் செய்பவர்களின் குழந்தைகளுக்கு கண்பார்வைக் குறைபாடு ஏற்படுகின்றது.


கருவிலிருக்கும் போது குழந்தைக்குத் தேவையான ஊட்டச் சத்து குறைபாட்டாலும் பார்வைக் கோளாறு ஏற்படுகின்றது.


சரியான உணவு உண்ணாமல் இரத்தச் சோகை ஏற்பட்டாலும் பார்வைக் குறைபாடு உண்டாகும்.


தூக்கமின்மையாலும், மங்கிய ஒளி அல்லது கண் கூசும் அளவு வெளிச்சம் உள்ளஇடங்களில் வேலை செய்பவர்களுக்கும் கண் பார்வைக் குறைபாடு உண்டாகும்.


தற்போதைய கணினி உலகில் கண்களுக்குத் தான் அதிக வேலை உண்டாகிறது. இரவுகண்விழித்து கணினி முன் அமர்ந்து அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கு கண்குறைபாடு எளிதில் உண்டாகும்.



ஈரல் பாதிக்கப்பட்டு பித்தம்அதிகரித்தால் முதலில் தாக்கப்படுவது காண் பார்வை நரம்புகளே...


இதனால்தான் காமாலை நோய்களின் அறிகுறி கண்களில் தெரியவரும்.


மது, புகை, போதைப் பொருள்கள் உண்பவர்களின் கண்கள் எளிதில் பாதிப்படையும்.


தொலைக்காட்சியின் முன் அமர்ந்து அதிக நேரம் தூக்கமில்லாமல்நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்களின் கண்கள் வறட்சி கண்டு கண்பார்வை குறைபாடுஉண்டாகும்.


நீரிழிவு நோய்க்காரர்களுக்கும் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் கண் பார்வைக் குறை அவ்வப்போதுலைவலி்போதுலைவலிலைவலி, தலைச்சுற்றல், கிறுகிறுப்பு உள்ளவர்களுக்கும் பார்வைக் குறைபாடு உண்டாகும்.


வரும்முன் காக்க....


சர்க்கரை வள்ளிக் ‌கிழங்கு ‌கிடைக்கும் காலங்களில் அதனை அவித்தோ அல்லது உணவில் சமைத்தோ சாப்பிட்டு வரலாம். 


இதில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வையில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை தடுக்கிறது..


கண்களில் ஏதேனும் தூசு விழுந்தாலோ அல்லது வலி, ஏற்பட்டாலோ கண்மருத்துவரை அணுகுவது நல்லது.

 

மருத்துவரின் ஆலோசனை யில்லாமல் கண்களுக்குமருந்துகள் இடக் கூடாது.


அதிக வெயிலில் அல்லது வெப்பமான பகுதிகளுக்குச் செல்ல நேர்ந்தால் குளிர் கண்ணாடி அணிந்துகொள்ள வேண்டும்.


ஒரு நாளைக்கு 6 மணி நேரமாவது தூங்க வேண்டும். நல்ல தூக்கமே கண்களைப் பாதுகாக்கும்.


கணினியில் வேலை செய்பவர்கள் அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலைசெய்யக் கூடாது.


அவ்வப்போது குறைந்தது 5 நிமிடமாவது விழிகளை சுழலவிட்டுபின் கண்களை மூடி சிறிது நேரம் தியானம் செய்வதுபோல் இருக்க வேண்டும்.


உணவில் தினமும் கீரைகள், காய்கறிகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். காரட் கண்களுக்கு மிகவும் சிறந்தது.


எளிதில் சீரணமாகக்கூடிய உணவுகளை சாப்பிட்டு மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


மது, புகை, போதை போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.


உடல் சூடு அடையாமலும், பித்த மாறுபாடு அடையாமலும் இருப்பதற்கு வாரம் ஒருமுறையாவது எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.


தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது.


மங்கலான ஒளியில் படிப்பதைத் தவிர்க்க வேண்டும்.


அதிக வெயில் இருக்கும்போது சூரியனைப் பார்க்கக்கூடாது.


நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அடிக்கடி கண் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.


அதிக மன அழுத்தம், டென்ஷன் கூட பார்வை நரம்புகளைப் பாதிக்கும். எனவே மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


வைட்டமின் ஏ அடங்கிய பழங்களையும், தயிரையும் காலை உணவில் செர்த்து கொள்வதனால், கண் பார்வையை ‌சீராக வைத்துக் கொள்ளலாம்.


பால், மீன், முட்டைகோசு, கேரட், கீரை, மாம்பழம் போன்றவற்றில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.

 

எனவே இவற்றை உண்டு வந்தால் கண் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்குக் கூட பார்வைத் ‌திறன் அதிகரிக்கும். 


குளுகோமா நோயைத் தவிர்க்கலாம்.


காய்கறிகள், பழங்கள், ‌கீரைகளை அதிகம் உணவில் உட்கொள்வது கண்ணுக்கநல்லது

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி