இதய நோய் வராமல் தடுக்கும் வேர்க்கடலை
இதய நோய் வராமல் தடுக்கும் வேர்க்கடலை
டிசம்பர் 13, 2020 10:00
வேர்க்கடலையில் நல்ல கொழுப்புகள் உள்ளதால், உடலுக்கு தீங்கு விளைவிக்காது. இது ஆன்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு, இதய வால்வுகளைப் பாதுகாப்பதோடு, இதய நோய் வராமல் தடுக்கிறது.
வேர்க்கடலைக்கு ஆயுட்காலத்தையே நீட்டிக்கும் ஆற்றல் உடையது.
* இதில் நல்ல கொழுப்புகள் உள்ளதால், உடலுக்கு தீங்கு விளைவிக்காது.
* இதிலுள்ள வைட்டமின் பி மற்றும் சி சத்துக்கள் சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கிறது.
* இதனை சாப்பிட்டால் மனஅழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.
* இது கர்ப்பிணிகள் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க உதவுகிறது.
* நியாசின்’-நிலக்கடலையில் அதிகமாக உள்ளதால், நினைவாற்றல் அதிகரிக்கிறது.
* பெண்களின் கர்ப்பப்பை சீராகச் செயல்படவும், கட்டிகள், நீர்க்கட்டிகள் வராது தடுக்கும் வல்லமை இதற்குண்டு.
* இது ஆன்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு, இதய வால்வுகளைப் பாதுகாப்பதோடு, இதய நோய் வராமல் தடுக்கிறது.
* நிலக்கடலையில் உள்ள ‘பீட்டா கௌமரிக்’ என்ற அமிலம் குடலில் நச்சுப் பொருள் சேருவதைத் தடுக்கிறது. இதனால் குடல் புற்றுநோய் வருவதும் தடுக்கப்படுகிறது.
* விட்டமின் ‘பி’ சத்து சார்ந்த ‘பயோட்டின்’ என்னும் வேதிப்பொருள் முடி வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கிறது; முடி உதிர்வதையும் தடுக்கிறது.
* இதனை வேக வைத்து, வளரும் குழந்தைகளுக்குக் கொடுத்தால், ஊட்டச்சத்து அதிகரித்து, சீரான வளர்ச்சி கிடைக்கும். மூளையும் சிறப்பாக செயல்படும்.
|
Comments