சார்க் என்றழைக்கப் படும் அமைப்பு உருவாக்கப்பட்ட தினம்
தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு அல்லது சார்க் என்றழைக்கப் படும் அமைப்பு உருவாக்கப்பட்ட தினம் இன்று SAARC (South Asian Association for Regional Cooperation) இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாளம், மாலத்தீவு, பூட்டான் ஆகிய, ஏழு நாடுகள் இணைந்து, தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு என்ற, 'சார்க்' அமைப்பை, 1985 டிச., 8ல் துவக்கின.
வங்கதேச தலைநகர் டாக்காவில், அதிகாரபூர்வமாகத் துவக்கப்பட்டது.
பின், அந்த அமைப்பில், ஆப்கானிஸ்தான் இணைத்துக் கொள்ளப்பட்டது.
இந்நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு, பிராந்திய ஒத்துழைப்பு, கலாசார பகிர்வு உள்ளிட்ட பிணைப்புகளை ஏற்படுத்துவது தான், இந்த அமைப்பின் நோக்கம்.
சீனா, ஈரான் நாடுகள், இந்த அமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்தன.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட, ஒன்பது நாடுகள், 'சார்க்' அமைப்பின் பார்வையாளர்களாக உள்ளன. துவக்கத்தில், ஆண்டுதோறும் நடந்த, 'சார்க்' கூட்டம், அதன் பின், இரண்டு மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்து வருகிறது. அந்த 'சார்க்' அமைப்பு துவக்கப்பட்ட நாள் இன்று!
Comments