காக்கை சிறகினிலே நந்தலாலா


எனக்கு பிடித்த இந்த பாரதியார் பாடல்
காக்கை சிறகினிலே நந்தலாலா






காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன் பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா - நின்றன் கீதம் இசைக்குதடா நந்தலாலா காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா நந்தலாலா... நந்தலாலா..
படம் : ஏழாவது மனிதன்
இசை : எல் வைத்தியநாதன்.
பாடியவர் யேசுதாஸ்
மகாகவி பாரதியார் இந்தப் பாடலை என்ன உணர்ச்சி நிலையில் பாடினாரோ ஒருவரும் அவ்வளவு சுலபமாக அதனைக் கையகப்படுத்திவிடமுடியாது. இந்தப் பாடலை கர்நாடக சங்கீத வித்வான்கள் முதல் சினிமா இசையமைப்பாளர்கள் வரை தங்களது கற்பனைக்கும், திரைக்காட்சிக்கும் பொருத்தமாக பாரதியின் இந்த அனாயாச அற்புத வரிகள் தகவமைக்கப்பட்டு டியூன் செய்யப்பட்டுள்ளது.
இவ்வளவு இருந்தாலும் 1981ஆம் ஆண்டில் வெளிவந்த ரகுவரன் நடித்த ஏழாவது மனிதன் திரைப்படத்தில் எல். வைத்தியநாதன் அமைத்த டியூன் உண்மையில் எந்த ஒரு ரசிகரையும் உணர்ச்சிமயத்தில் ஆழ்த்துவது.
இதில் "Pathos" - உடன் கூடிய ஒரு வித நவீன வகை டியூனாக இதனை எல்.வைத்தியநாதன் வடிவமைத்துள்ளார். மிகவும் அற்புதமான டியூன் நீங்கள் கேட்டிருப்பீர்கள், இருந்தாலும் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத மனதை வருடும், இதமளிக்கும் ஒரு பாடலாகும் இது.

எல். வைத்தியநாதன் இவர் நிறைய திறமைகள் இருந்து பெரிய அளவில் வெற்றி பெறாத ஒரு இசையமைப்பாளர். ஓரிரு படங்களிலேயே இவர் இசை அமைத்திருந்தாலும் ஏழாவது மனிதனில் இவர் போட்ட அத்தனை பாடல்களும் மீண்டும் ஒருமுறை மறு உற்பத்தி செய்ய முடியாதது.! மறைந்த ரகுவரனின் இளமைக்கோலத்தையும் நாம் மறக்க முடியாது!
யேசுதாஸ் அவர்களின் குரல் மனதை வருடுகிறது
என்ன இனிமை










Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி