உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது
உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது என்று ரஜினியை நடிகை கஸ்தூரி கிண்டல் செய்துள்ளார்.
‘உடல்நிலையை கருத்தில்கொண்டு கட்சியை ஆரம்பித்து அரசியலுக்கு வரமுடியவில்லை’, என நடிகர் ரஜினிகாந்த் நேற்று பரபரப்பு அறிக்கை வெளியிட்டார். இது அவரது அரசியல் வருகையை எதிர்நோக்கியிருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்த் இருப்பதை அறிந்துகொண்டு ரசிகர்கள் நேற்று மாலை அவரது வீட்டின் முன்பு திரண்டனர். அப்போது ‘அரசியலுக்கு வாங்க தலைவா’, என்று தொடர்ந்து கோஷங்கள் எழுப்பியபடி இருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், தான் கட்சி தொடங்கவில்லை என ரஜினிகாந்த் நேற்று அதிரடியாக அறிவித்தார். ரஜினியின் இந்த அறிவிப்புக்கு பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், இதுப்பற்றி நடிகை கஸ்தூரி டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது,
''கோடி பண நஷ்டத்தை விட கோடி மனக்கஷ்டம் பெரிது. உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது. ரஜினியின் முடிவுக்கு பாராட்டுக்கள். நீங்கள் பூரண நலத்துடன் நிம்மதியாக நீடூழி வாழ வேண்டும்.
எதிர்பார்த்தது தான். எத்தனையோ முறை நான் உட்பட பலரும் சொன்னது தான். எப்பவோ சொல்லியிருந்தால் ஏராளமானவர்களுக்கு வலியை தவிர்த்திருக்கலாம். வருடங்களை மிச்சப்படுத்தியிருக்கலாம். இப்பவாச்சும் சொன்னாரே. இப்ப இல்லை, எப்பவுமே இல்லை'' என பதிவிட்டுள்ளார்.
எதிர்பார்த்ததுதான்.
எத்தனையோ முறை நான் உட்பட பலரும் சொன்னதுதான். எப்பவோ சொல்லியிருந்தால் ஏராளமானவர்களுக்கு வலியை தவிர்த்திருக்கலாம். வருடங்களை மிச்சப்படுத்தியிருக்கலாம்.
நன்றி; தினத்தந்தி
Comments