கோடீஸ்வரர்களில் ஒரு கோபுரம்
கோடீஸ்வரர்களில் ஒரு கோபுரம்
கோவை சாந்தி கியர்ஸ் உரிமையாளர்
சுப்ரமணியன் அவர்கள் இன்று (11/12/20) இயற்கை எய்தினார்
ஒரே ஒரு லேத் கொண்டு உழைத்து முன்னேறி சாந்தி கியர்ஸ் என்ற இந்தியாவின் முன்னணி Gearbox நிறுவனத்தை நடத்திய சுப்ரமணியன் அவர்கள் இன்று இயற்கை எய்தினார். 🙏🙏
கோவை சிங்காநல்லூரில் இருக்கும் இவரது சாந்தி சோசியல் சர்வீஸ் என்கிற (சுருக்கமாக SSS என்றும், சாந்தி என்றும் பொது மக்கள் அழைப்பார்கள்) உணவகத்தில் 2017 க்கு முன்பு வரை முழு சாப்பாடு (Unlimited Meals) ரூ.25 க்கும் டிபன், காபி வகைகள் ரூ.5 முதல் 10 வரை மலிவு விலையில் கொடுத்தார்கள்.
ஒரே ஒரு கண்டிஷன் : சாதாரணமாக மூன்று முறை சாதம் கொடுப்பார்கள். பின்னர் கேட்டாலும் தருவார்கள். ஆனால் சாப்பாட்டை வீணாக்க கூடாது.
ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட போது வரியை மக்களிடம் திணிக்காமல் இவர்களே ஏற்றனர்.
சில நாட்களில் விலையை மாற்றி முழு சாப்பாடு ரூ.10க்கும் டிபன் வகைகள் ரூ.5 க்கும் விற்று ஆச்சரியப்படுத்தினார்கள்.
பின் குறிப்பு:
பொது மக்கள் இங்கு வந்து அமர்ந்து தான் சாப்பிட முடியும்.
"பார்சல்" யாருக்கும் "கிடையாது".
உணவில் மட்டுமல்ல, கல்வி, பெட்ரோல், டீசல், பார்மஸி, டயாலிஸிஸ் சேவை, ரத்த வங்கி சேவை, கண் கண்ணாடி கடை, ரேடியோலஜி சேவை, ஆய்வு மையம், எரிவாயு எரியூட்டு மையம் என்று "சாந்தி கியர்ஸின்" சேவைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இந்த நிறுவனத்தில் மருத்துவ ஆய்வகத்தில் எடுக்கப்படும் ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்டவை மற்ற மையங்களைவிட, 50 முதல் 70 சதவிகிதம் குறைவு. ஏழை மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி, அரசுப் பள்ளிகளில் புதிய கட்டிடங்கள் கட்டிக் கொடுத்தல், ஆசிரியர்கள் குறைவாக உள்ள பள்ளிகளுக்கு தன் செலவில் ஆசிரியர்களை பணியில் அமர்த்தல் என்று எண்ணற்ற சேவை .
பணம் வைத்திருப்பவர்களில் விளம்பரம் இன்றி எந்த சுயலாபமும் இன்றி சமூக சேவை செய்தவர்களில் முதன்மையானவர்களில் ஒருவரை தமிழகம் இழந்தது.
புகழின் உச்சியில் இருந்த சாந்தி கியர் பாக்ஸ் நிறுவனத்தை ராணே என்கிற நிறுவனம் வாங்கி விட்டது.
பஸ் ஸ்டாப்: சாந்தி
ஏழை எளிய மக்களுக்காக சமூக பணியில் ஈடுபடுவோருக்கு "இவர் ஒரு ரோல் மாடல்"
Comments