நவீன வசதிகளுடன் உருவாகிறது புதிய நாடாளுமன்றம்
நவீன வசதிகளுடன் உருவாகிறது புதிய நாடாளுமன்றம்
நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தின்போது மக்களவையில் 1,224 பேரை அமர வைப்பதற்கான வசதிகள் இடம்பெற்று இருக்கும்.
டெல்லியில் தற்போதைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அருகில் நவீன வசதிகளுடன் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட உள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு இன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. பிரதமர் மோடி, அடிக்கல் நாட்டி, பூமி பூஜையையும் நடத்தி வைக்கிறார்.
ரூ.971 கோடி செலவில் கட்டப்படும் இந்தப் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்பு அம்சங்களாவன:
# தற்போதைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அருகில், முக்கோண வடிவில் 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நாடாளுமன்றம் உருவாகிறது.
# நாட்டின் ஜனநாயக பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் பிரமாண்ட அரசமைப்புச் சட்ட அரங்கம் மற்றும் எம்.பி.க்கள் ஓய்வு எடுக்கும் பகுதி, நூலகம், நிலைக்குழுக்களின் அறைகள், சாப்பிடும் பகுதி, வாகன நிறுத்துமிடம் ஆகியவை இடம்பெற்று இருக்கும்.
# மக்களவையில் 888 இருக்கை வசதிகளும், மாநிலங்களவையில் 384 இருக்கை வசதிகளும் இருக்கும்.
# நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தின்போது, மக்களவையில் 1,224 பேரை அமர வைப்பதற்கான வசதிகள் இடம்பெற்று இருக்கும்.
# இந்திய கலாச்சாரம், பிராந்திய கலைகள், கைவினைப் பொருட்கள் மற்றும் கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் வகையில் புதிய நாடாளுமன்றம் அலங்கரிக்கப்படும்.
# எரிசக்தி சேமிப்பு, பாதுகாப்பு வசதி உள்ளிட்ட சிறப்பு அம்சங்களும் இடம் பெற்றிருக்கும். |
Comments