திங்களன்று நாடு தழுவிய போராட்டம்
விவசாயிகள் மத்திய அரசின் வரைவு திட்டங்களை நிராகரித்தனர். திங்களன்று நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கங்கள் எச்சரித்து உள்ளன
வேளாண் துறையை சீர்திருத்தும் நோக்கில் 3 புதிய சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. ஆனால் இந்த சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை, மண்டி அமைப்பு உள்ளிட்டவை அழிந்து, வேளாண்துறை தனியார்வசம் சிக்கிவிடும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர். எனவே இந்த சட்டங்களை திரும்ப பெற அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
வேளாண் துறையை சீர்திருத்தும் நோக்கில் 3 புதிய சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. ஆனால் இந்த சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை, மண்டி அமைப்பு உள்ளிட்டவை அழிந்து, வேளாண்துறை தனியார்வசம் சிக்கிவிடும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர். எனவே இந்த சட்டங்களை திரும்ப பெற அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு உள்ளனர். புராரி மைதானம் மற்றும் திக்ரி, சிங்கு, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைகளில் கடந்த 26-ந் தேதி முதல் விவசாயிகள் நடத்தி வரும் இந்த போராட்டங்களால் டெல்லி முடங்கி வருகிறது.
அரியானா, உத்தரபிரதேசம் போன்ற அண்டை மாநிலங்களுக்கு செல்லும் பிரதான சாலைகளை விவசாயிகள் ஆக்கிரமித்து இருப்பதால், இந்த சாலைகள் அடைக்கப்பட்டு உள்ளன. இதனால் தலைநகர் போக்குவரத்து நெரிசலால் திணறுகிறது. இதனால் மாற்று சாலைகளை பயன்படுத்த போக்குவரத்து போலீசார் டெல்லிவாசிகளுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் இந்த போர்க்கோலம் இன்று 14-வது நாளாக கொட்டும் பனியிலும் தொடருகிறது. சுமார் 40 விவசாய அமைப்புகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் குழுமி உள்ளனர். டெல்லியில் திறந்த வெளியில் அவர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது.
விவசாயிகளின் இந்த போராட் டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் அவர்களுடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி நாடு தழுவிய முழு அடைப்பு நேற்று அமைதியாக நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 14வது நாளை எட்டியிருக்கும் நிலையில், விவசாயிகளுடனான ஆறாம் கட்டப் பேச்சுவார்த்தையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விவசாயிகள் சங்கத் தலைவர்கள் டெல்லியில் நேற்று இரவு 8 மணியளவில் நடத்தியப் பேச்சுவார்த்தையில் முக்கிய முன்னேற்றம் எதுவும் ஏற்படாத நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 40 சதவீத விவசாய சங்கப் பிரதிநிதிகள் புதன்கிழமை பங்கேற்கவிருந்த மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆறாம்கட்ட பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்று நடைபெறவிருந்த ஆறாம் கட்டப் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டிருப்பதாக மத்திய வேளாண்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.
புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகள் கொண்டுள்ள ஆட்சேபனைகளை திறந்த மனதுடன் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக மத்திய அரசு கூறியது. புதிய பண்ணை சட்டங்களை திருத்துவதற்கான மத்திய அரசு வரைவு முன்மொழிவை வெளியிட்டது.
அதில் பயிர்களுக்கான ஆதரவு விலைகள் இருக்கும் என்று எழுத்துப்பூர்வ உத்தரவாதம் வழங்கப்படும், துணைப்பிரிவு மாஜிஸ்திரேட்டுக்கு பதிலாக, சச்சரவுகள் ஏற்பட்டால் விவசாயிகள் நீதிமன்றத்திற்கு செல்ல முடியும், விவசாயிகள் எதிர்த்த மின்சார திருத்த மசோதா ரத்து செய்யப்படும் என்பன உள்பட பல அதில் இருந்தது
விவசாயிகளின் கவலைகளை திறந்த மனதுடன், நாட்டின் விவசாய சமூகத்திற்கு மரியாதை செலுத்த அரசாங்கம் முயன்றது. விவசாய சங்கங்கள் தங்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது.
இதை தொடர்ந்து சில மணி நேரங்களிலேயே, விவசாய சங்கங்கள் இந்த திட்டத்தை நிராகரித்தன. 12 ந்தேதி திங்களன்று நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கங்கள் எச்சரித்து உள்ளன
அரசாங்கத்தின் எழுத்துப்பூர்வ திட்டங்கள் வருவதற்கு முன்பு சிங்கு எல்லையில் நடைபெற்ற கூட்டத்தில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தொடர முடிவு செய்தனர். சட்டங்களில் எந்த திருத்தத்தையும் நாங்கள் ஏற்கவில்லை, மொத்த சட்டத்தையும் ரத்து செய்ய நாங்கள் விரும்புகிறோம் என்று விவசாயிகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையை டிசம்பர் 12 க்குள் மறிப்போம் என்று விவசாயத் தலைவர்கள் புதன்கிழமை தெரிவித்தனர். அரசாங்கத்தின் திட்டங்களை நாங்கள் நிராகரிக்கிறோம் டெல்லி-அரியானா எல்லை ," சிங்குவில் கிராந்திகாரி கிசான் யூனியனின் தலைவர் தர்ஷன் பால் கூறினார்.
Comments