ஒரு வாழ்வியல் செய்தி

 ஒரு வாழ்வியல் செய்தி



புத்தாண்டுக்கு நிறைய வாழ்த்து சொல்லுவாங்க

..நான் உங்களுக்கு ஒரு வாழ்வியல் செய்தி அறிவிக்கிறேன்

. வேறொன்றும் இல்லை , இந்த கசப்பான ஆண்டு விட்டு சென்ற தடத்தின் நீட்சியாக இருக்க விருக்கும் பெரும் சவாலான வரவு - செலவு திட்டமிடுதல் சம்பந்த பட்டதே..


இதற்கு ஜப்பானியர்களை துணைக்கு அழைத்து கொள்கிறேன்.. அவர்களின் கூட்டு வெற்றிக்கு தனிப்பட்ட பொருளாதார திட்டமிடுதல் முக்கிய பங்காற்றுகிறது.. அதை காகீபோ முறை (Kakeibo method) என அழைக்கிறார்கள்..


அதை நீங்கள் இணையத்தில் தேடினால் ,கொட்டிகிடைக்கும் உங்களுக்கான வழிகாட்டல்கள்..


அதில் முக்கியமான நான்கு பயிற்சிகளை மட்டுமே குறிப்பிடுகிறேன்.


அ. உங்கள் செலவுகளை நான்கு தலைப்புக்குள் அடக்குங்கள் . வாழ்வியல் அத்தியாவசிய செலவுகள் , சமூக & கல்வி செலவுகள், பொழுதுபோக்கு செலவுகள் மற்றும் இதர செலவுகள் என..

நான்கு செலவுகளையும் அடிக்கடி பரிசீலனைக்கு உட்படுத்துங்கள் , கடைசி இரண்டையும் கொஞ்சம் அதிகமாகவே ..


ஆ. உங்கள் வருமான பணத்தில் முதல் பங்கு சேமிப்பாக இருக்கட்டும்.அதை ஒரு சுப செலவுகணக்காகவே கணக்கில் கொள்ளவும் . 


இ. உங்கள் வருமானங்கள் , சேமிப்புகள், செலவினங்களை ஒரு நோட்டு புத்தகத்தில் தினசரி எழுதி வைக்கவும்.. கணனியில் பதிப்பதை விட நோட்டில் எழுதி வைப்பது மனதில் அச்சாணி போல பதியும் என்பது உளவியல் கூற்று.


ஈ.செலவுகளை முடிந்த வரை பணமாக செலவு செய்யுங்கள், இணையம் வழியோ , கடன் அட்டைகள் வழியோ செலவழிக்கிற போது நமக்கு எந்த உறுத்தலும் இருக்காது ..கைவிட்டு செலவழிக்கிற போது ஒரு பொறுப்புணர்வு தன்னாலே வெளிப்படுவதாக அதே உளவியல் கட்டியம் கூறுகிறது..in fact , வேறொரு பதிவில் நான் இந்த கருத்தை வலியுறுத்தி சொல்லி இருந்தேன், என்பது எதேச்சையான ஒற்றுமை.



ஆக , சிம்பிளாக சொல்லபோனால் ,கடந்த இருபது வருடத்தில் உருவான கலாச்சார மற்றும் மென்நுட்ப தொழில் புரட்சியை, உங்கள் தனிப்பட்ட பொருளாதார திட்டமிடுதலில் தவிர்த்தாலே ,

 வரும் வருடம் நீங்கள் ராசி பலனுக்கு அப்பாற்பட்டு சிறப்பாகவே வாழலாம்..


--நாகராஜ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி