யார்க்கர்மன்னன்'நடராஜன்,
யார்க்கர்மன்னன்'
நடராஜனைப் புகழ்ந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்!*
தமிழகவீரர் நடராஜன், டி.என்.பி.எல், ஐ.பி.எல் ஆகியவற்றில், சிறப்பாக ஆடியதன் காரணமாக, இந்தியஅணியில்இடம்பெற்றார். தொடர்ந்து, ஆஸ்திரேலியாவிற்கு எதிரானமூன்றாவது ஒருநாள் போட்டியில், அறிமுகமான அவர், 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தொடர்ந்து, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதலாவது20 ஓவர்போட்டியில், அறிமுகமான நடராஜன், மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றி, இந்தியாபோட்டியை வெல்வதற்குக் காரணமாகஅமைந்தார்.
இந்தநிலையில், 20 ஓவர்போட்டியில்நடராஜன் எடுத்த விக்கெட்டுகளை, யூ-ட்யூபில் பதிவேற்றியுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட்வாரியம், அவரை'யார்க்கர்கிங்' எனக் குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே, நடராஜனின் பந்து வீச்சையும்,யார்க்கர்வீசும்திறமையையும் கபில்தேவ், வார்னர்உள்ளிட்ட பலர் புகழ்ந்தநிலையில், தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட்வாரியம், அவரை 'யார்க்கர்மன்னன்' எனப் புகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments