"மீண்டெழுதல்"

 "மீண்டெழுதல்" 

இக்கிகய்  தொடர்  பகுதி ( 5) 



இக்கிகய் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் பல நாம் பார்த்துக் கொண்டு வருகிறோம்.அப்படியாக இந்த வாரம் "மீண்டெழுதல்" பற்றி தான் பார்க்க போகிறோம்.


மீண்டெழுதல் பற்றி புத்தகத்திலிருந்து சில வரிகள் உங்களுக்காக...


"மிகத் தெளிவான இக்கிகய்யைக் கொண்டு இருப்பவர்கள் அனைவரிடமும் பொதுவாக இருக்கும் அம்சம் எது எப்படியிருந்தாலும் அவர்கள் தங்களுடைய வேட்கையைத் தொடர்வதை ஒருபோதும் நிறுத்துவதில்லை.உலகமே அவர்களுக்கு எதிராக திரண்டிருந்தாலும் தடைகள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து வந்து கொண்டிருந்தாலும் அவர்கள் ஒருபோதும் தங்களுடைய முயற்சிகளைக் கைவிடுவதில்லை."


மீண்டெழும் குணம் எல்லோரிடமும் இருப்பதில்லை.அப்படி இருப்பவர்கள் எச்சூழ்நிலையிலும் எதிர்மறை எண்ணங்களை பற்றி சிந்திப்பதே இல்லை.அவர்களின் தேவை எது ? அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் ? என்ன செய்ய போகிறார்கள்? என்பதில் எப்போதும் ஒரு தெளிவான சிந்தனையை வைத்துக் கொண்டிருப்பார்கள்.


ஜப்பானியர்கள் மீண்டெழுவதில் திறமையானவர்களாக இருப்பதால் தான் ஒவ்வொரு முறை அழிவுக்கு பின்னரும் எழுகிறார்கள். ‌.உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் நிற்கவும் செய்கிறார்கள்.


மனரீதியாக உடல்ரீதியாக பயிற்சிகள் தேவை என்கிறார்கள்.


"ஏழு முறை விழுங்கள் 

எட்டு முறை எழுங்கள்"


மீண்டெழும் தன்மை நம்மிடம் எந்தளவில் உள்ளதோ அந்த அளவிற்கு நாம் சிரமங்களையும் தடைகளையும் எதிர்க் கொள்ளும் நபராக இருப்போம்‌.ஆமாம், உண்மை தானே கீழே விழுகும் போது வலிக்கும் அந்த வலியை வழியாக மாற்றும் போது விழித்து கொள்ளுவோம்.

அவ்வளவு தான் வாழ்க்கை என்றொரு எண்ணம் நம்மிடம் இருந்து விட்டால் போதுமானது.


"அப்படி என்ன மோசமாக நடந்து விடும்"என்று ஸ்டோயிக் தத்துவத்தை மீண்டெழும் தன்மை உடையவர்கள் பின்பற்றுகிறார்கள்


அதானே,அப்படி என்ன தான் நடந்து விடும்...!


 எடுத்துக்காட்டாக நாம் அனைவரும் பயன்படுத்தும் தொலைபேசியை எடுத்துக் கொள்ளுவோம். 

தொலைபேசி இன்றி ஒருநாள் நாம் இருந்து தான் பார்ப்போமே என்று முதலில்  நினைத்து தான் பாருங்களேன்.நமக்கே தெரியவரும் எதுவும் மாற போவதில்லையென்று.நினைத்ததை அடுத்தநாள் செயல்முறைப்படுத்தி பாருங்களேன்‌.


அப்படி ஒன்றும் மோசமாக நடந்து விடாது என்ற எண்ணம் வந்து விடும்.அப்படி இந்த விதியை உங்கள் வாழ்க்கையில் நடக்கும் கஷ்டம் சிரமம் இவை அனைத்திலும் புகுத்தி வாழ்ந்து பாருங்கள்.ஒருகட்டத்தில் எதுவும் சரி தவறு என்றில்லை.நடக்க வேண்டுமென்று இருந்து இருக்கிறது நடந்து விட்டதென்ற எண்ணம் வந்துவிடும்.


"உங்களுக்கு என்ன நடக்கிறது என்பது முக்கியமில்ல,அதை நீங்கள் எவ்வாறு கையாள்கிறீர்கள் என்பது தான் முக்கியம் "என்று எபிக்டெட்டஸ் கூறுகிறார்.


நிகழ்கணத்தை மட்டுமே சிந்தியுங்கள்.இந்நொடியை இப்பொழுதை தவறவிட்டால் மீண்டும் கிடைக்குமா என்று சிந்தியுங்கள்.மீண்டும் கிடைக்காது என்பதை உணர்ந்தால் மீண்டெழுதல் என்பது பெரிய வித்தையாக தெரியாது.


மீண்டெழுந்து நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நிறைவானதாக இருக்கும்.நேர்மறை எண்ணங்களை மட்டும் பிறருடன் பேசும் போது பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தையும் கொண்டு வாருங்கள்.எதிர்மறை எண்ணங்கள் எப்படியும் தவறானவையாக தானே இருக்கும் அதை தெரிந்தும்  நாம் ஏன் அதை பிறரிடம் பகிர வேண்டும்.அப்படியே பகிர்ந்தாலும் அதன் மூலம் என்ன லாபம் என்று யோசித்தால் மிஞ்சி கிடைப்பது அவமரியாதையான பட்டம் மட்டும் தான்.


எனவே, நேர்மறை எண்ணங்களையும் நல்லதொரு சிந்தனைகளையும் எப்போதும் உங்களுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.மற்றவை தானாக நடக்கும்.



- கீர்த்தனா பிருத்விராஜ்

Comments

Suresh said…
"உங்களுக்கு என்ன நடக்கிறது என்பது முக்கியமில்ல,அதை நீங்கள் எவ்வாறு கையாள்கிறீர்கள் என்பது தான் முக்கியம் "

அருமை அருமை

மிக மிக அற்புதமான ஊக்கம் கொடுக்கும் கட்டுரை.

ஒவ்வொரு வரிகளும் பாடம்.

முதல் வரிசை மாணவனாக நான்

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி