யோகி இராம்சுரத்குமார்

 யோகி இராம்சுரத்குமார் பிறந்த நாள் இன்று நவம்பர்1

வாரணாசிக்கு அருகில் உள்ள நார்தாரா கிராமத்தில் டிசம்பர் 1, 1918-இல்(அதாவது காளயுக்தி ஆண்டு கார்த்திகை மாதம் 11-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை சுவாதி நட்சத்திரத்தில்) பிறந்தார்.

ராம்தத் குவார் - குசும்தேவி தமபதியினருக்கு இரண்டாவது திருமகனாக அவதரித்தார். இவருக்கு மரைக்கன் குவார் மற்றும் ராம்தகின் குவார் ஆகிய இரு சகோதரர்கள் உண்டு. குழந்தைப் பருவத்தில் யோகிகளையும், துறவிகளையும் சந்திப்பதில் மிகுந்த ஆவல் கொண்டவர். காசியில் ஓடும் கங்கை ஆற்றாங்கரையில் உலாவுவதும், அங்கு குடிசையில் வாழும் யோகிகள், துறவிகள் மற்றும் சந்நியாசிகளிடம் நட்புடன் பழகுவதுமாக காலம் கழித்தார்.
வளர்ந்த பின்பு இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்தாலும் ஆன்மிகப் பசியுடன் குருவைத் தேடியலைந்து, ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இரமண மகரிஷியின் ஆசிரமத்திற்கும் அடிக்கடி சென்று அம்மகான்களை தரிசித்து ஞான யோகத்தையும் தவத்தையும் கற்றார். பின்னர் கேரளாவில் உள்ள சுவாமி இராமதாசரின் ஆசிரமத்திற்கு சென்று பக்தி யோகத்தை கற்றார்.
ஸ்ரீஅரவிந்தரிடமிருந்து ஞானத்தையும், இரமண மகரிஷியிடமிருந்து தவத்தையும், சுவாமி இராமதாசரிடமிருந்து பக்தி நெறியையும் கேட்டுத் தெளிந்தார். குரு இராமதாசரிடமிருந்து “ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய்ராம்” எனும் மந்திர தீட்சை பெற்றார். யோகி ராம்சுரத்குமார் இறக்கும் வரை இந்த மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருந்தார்.
ஞானம் அடைந்ததற்கு பிந்தைய வரலாறு

யோகி இராம்சுரத்குமார் 1952 முதல் 1959 வரை இந்தியா முழுவதையும் சுற்றி வந்தார். இறுதியாக 1959-இல் திருவண்ணாமலையை அடைந்தார். துவக்க காலத்தில் யோகி தன்னை மறைத்துக் கொண்டு ஒரு பிச்சைக்காரராக வாழ்ந்தார்.பின்பு திருவண்ணாமலைக்கோயிலுக்கு அருகில் உள்ள சன்னதி தெருவில் ஒரு சிறிய வீட்டில் தங்குவதற்கு சிலர் உதவினர். பின்னர் சிலகாலம் கழித்து அவரது சீடர்களின் வற்புத்தலின் பேரில் திருவண்ணாமலையில் அக்கிரகாரக் கொல்லை எனுமிடத்தில் அமைந்த ஆசிரமத்தில் தங்கி மக்களுக்கு பக்தியையும், இறை ஞானத்தையும் முக்தி அடையும் வரை அருளிக்கொண்டிருந்தார்

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி