ஸ்ட்ரெயிட்டா ஆட்சியே... லாஜிக்கே இல்லாத ரஜினி பேச்சால் ஷாக்

 

ஸ்ட்ரெயிட்டா ஆட்சியேதானாம்... லாஜிக்கே இல்லாத ரஜினி பேச்சால் ஷாக்கில்

சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு 10-15% ஓட்டு வாங்கி நான் தோற்கவிரும்பவில்லை என்று ரஜினிகாந்த் வெளிப்படையாக தெரிவித்ததால் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் அதிர்ந்து போயுள்ளனராம்.

சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று ரஜினி மக்கள் மன்றத்தின் 37 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் பங்கேற்று பல விஷயங்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

குறிப்பாக தமது உடல்நிலை குறித்து மனம் திறந்து மாவட்ட செயலாளர்களிடம் ரஜினிகாந்த் பகிர்ந்திருக்கிறார். ஏற்கனவே சிறுநீரக அறுவை சிகிச்சை செய்த காரணத்தால் இப்போதைய கொரோனா காலத்தில் டாக்டர்கள் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் செய்ய முடியும் என்று கூறி முதல் அதிர்ச்சியை கொடுத்தாராம் ரஜினிகாந்த்.

அடுத்ததாக அரசியல் கட்சி தொடங்குவது, தேர்தலில் போட்டியிடுவது பற்றி தன்னுடைய கருத்துகளை முன்வைத்திருக்கிறார். அப்போதுதான், மன்ற நிர்வாகிகள் பலரும் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுகின்றனர்; எனக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள் என வருத்தப்பட்டிருக்கிறார்.

இதன்பின்னர் அப்படியே நாம் தேர்தலில் போட்டியிட்டாலும் மிக அதிபட்சமாக 15% ஓட்டுகளை வாங்குவதாக வைத்துக் கொள்வோம். இப்படி 10-15% ஓட்டு வாங்குவதால் எந்த பயனுமே இல்லை. என்னைப் பொறுத்தவரையில் சினிமாவில் ஜெயித்திருக்கிறேன்.

அதனால் அரசியலுக்குப் போனாலும் தேர்தலுக்குப் போனாலும் ஜெயித்தாக வேண்டும். அது சாத்தியமே இல்லை என்கிற போது எப்படி கட்சியை தொடங்குவது? என கேள்வி கேட்டிருக்கிறார். ரஜினிகாந்தின் இந்த அடுத்தடுத்த லைவ் அதிர்ச்சி வைத்தியங்களால் ஆடிப் போய்விட்டனராம் மக்கள் மன்ற நிர்வாகிகள்.

ஆக ஸ்ட்ரெயிட்டா ஆட்சி?

எல்லாவற்றிற்கும் மேலாக, "அரசியல் கட்சி தொடங்குவது பற்றி நான் முடிவு எடுக்கிறேன்" என்று சொல்லி உள்ளது, வழக்கம்போலவே ரஜினியின் சாமர்த்தியமாகவே பார்க்கப்படுகிறது. அப்படியானால் அண்ணாத்தே படம் வெளியான பிறகுதான் கட்சி ஆரம்பிப்பாரா? அந்த படத்தையும் பழுதில்லாமல் கொண்டு செல்வதற்கான அச்சாரமா இந்த ஆலோசனை என்பதும் தெரியவில்லை. எப்போதுமே தன்னை பற்றின பேச்சு பரபரப்பாக இருப்பது போலவே பார்த்து கொள்வது ரஜினியின் வழக்கமான ஸ்பெஷல்.அவரது படம் ஏதாவது ரிலீஸ் ஆக கூடிய சந்தர்ப்பம் இருந்தால், நிச்சயம், அவரை பற்றின சலசலப்பு தமிழகத்தில் எதிரொலிக்கும்.. அதை அரசியல் களத்திலும் எதிரொலிக்க செய்துவிட்டு, அதன்மூலம் தன் படத்தையும் ஓடவைக்கும் இந்த மலிவான டெக்னிக் வருத்தமாக உள்ளது... இன்னமும் பால் பொங்கும் என்று ரசிகர்கள் நம்பி கொண்டிருக்கிறார்கள்.. பால் பொங்கும், ஆனால் பச்சை தண்ணி பொங்கவே பொங்காது என்பதை ரஜினி ரசிகர்களுக்கு சொல்லி புரிய வைப்பது யாரோ!?




Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி