ரமணமகரிஷி (7)
ரமணமகரிஷி (7)
பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர் :
பகுதி (7)
பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர்:
வேங்கடராமன் வீட்டிலிருந்து வெளியேறியது குடும்பத்தினருக்கு பெரும் திகைப்பையே தந்தது. எங்கெங்கோ தேடினார்கள். யார் யாரிடமோ விசாரித்தார்கள். பலன் ஒன்றும் கிடைக்கவில்லை.
எல்லோரையும் விட மானாமதுரையில் வசித்து வந்த அவனுடைய தாயாருக்கு தான் ரொம்ப வருத்தம். அவள் தன்னுடைய உறவினர்களான சுப்பையரையும், நெல்லையப்பரையும் அனுப்பி எப்படியாவது பையனைக் கண்டு பிடித்துக் கொண்டு வாருங்கள் என்றாள்.
பையன் திருவனந்தபுரம் நாடகக் கம்பெனியில் சேர்ந்திருக்கலாம் என்று யாரோ சொன்னார்கள். நெல்லியப்பர் நாடக கம்பெனி ஒன்று விடாமல் ஏறி இறங்கி விட்டார். தாயார் அழகம்மாளுக்கு நம்பிக்கை இருந்தது. எப்படியும் பிள்ளையை கண்டுபிடித்து விடலாம் என்று.
இரண்டாவது சுற்று தேடலில் தாயாரும் சேர்ந்து கொண்டாள். திருவனந்தபுரத்தில் வேங்கடராமனைப் போல ஒரு பையனை பார்க்கவும் செய்தாள். அது தன்னுடைய மகன் தான் என்று என்று அந்தப் பேதை மனம் முடிவு கட்டிய போது நெருங்கிச் சென்றவளுக்கு கிடைத்தது ஏமாற்றமே. ஏனோ வேண்டுமென்றே மகன் தன்னை விட்டு விலகி சென்ற காரணம் தெரியாமல் தவித்தாள். விரக்தியுடன் வீடு திரும்பினாள்.
சுப்பையர் அவர்கள் 1898 இறந்துபோனார். அவனுடைய ஈமச் சடங்கில் கலந்து கொள்ள நெல்லியப்பர் சென்றிருந்த போது காணாமல் போனவர்கள் பற்றி அங்கு வந்த ஒரு இளைஞனிடம் இருந்து தகவல் கிடைத்தது. மதுரையில் தான் சந்தித்த அண்ணாமலை தம்பிரான் என்பவர், திருவண்ணாமலை உள்ள இளைய சுவாமிகள் சிலாகித்து பேச்சுக்கு தாகவும் அவன் தெரிவித்தான். அந்த சுவாமி திருச்சுழிக் காரர், பெயர் வேங்கடராமன் என்ற விபரந்தான் தன்னை வியப்புறச் செய்தது என்று அவன் விவரித்தான்.
நெல்லியப்பர் சற்றும் தாமதிக்காமல் தன் நண்பருடன் திருவண்ணாமலை புறப்பட்டுச் சென்றார். தனக்கு கிடைத்த தகவல் உண்மையாக இருக்கும் என்ற எண்ணம். அவர்கள் சுவாமி இருக்குமிடம் கண்டறிந்தாலும், மாந்தோப்பு நாயக்கர் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்தார். காரணம் சுவாமி எதையும் பேசமாட்டார் தொந்தரவு செய்யாதீர்கள் என்று சொல்லிவிட்டார்.
நெல்லையப்பர் ரொம்ப கேட்டுக்கொண்டதன் பேரில் யார் என்ற விபரத்தை ஒரு காகிதத்தில் எழுதி உள்ளே அனுப்பி வைத்தனர்.
சுவாமிகளும் அவர்களை தம்மிடம் அனுப்பி வைக்கப் பணித்தார். நெல்லையப்பரும் அவருடைய நண்பரும் சுவாமியின் எதிரே அமர்ந்தனர்.
சுவாமி மௌனமாய் இருப்பது பற்றியோ துறவு மேற் கொண்டது பற்றியோ யாரும் குறை படவில்லை.ஆனால் அவர் தன் அருகில் இருந்தால் போதும் உறவுக்காரர்கள் விருப்பமும் மானாமதுரையில் வந்து இதைப் போல தங்கி கொள்ளட்டும் என்றும், அங்கு சுவாமிககாண என்னென்ன தேவைகள் அனைத்தையும் கவனிக்கப்படும் என்றார்கள்.
அவர்களின் எண்ணங்களுக்கான அனுமதியை மறுத்தார்.
சுவாமிகளை கட்டளை எதுவோ அதன்படி நடக்கட்டும். எப்படியோ வேங்கடராமனைக் கண்ட பின் நெல்லையப்பருக்கு ஆனந்தம் ஏற்பட்டது.
நெல்லையப்பர், வேங்கடராமன் திருவண்ணாமலையில் இருப்பது குறித்து அவரது தாயாருக்கு கடிதம் எழுதினார்,
நெல்லையப்பர் அளித்த தகவல் அடிப்படையில் வேங்கடராமனின் தாயார் திருவண்ணாமலைக்கு வந்தார்.
தன் மகனின் நிலையைக் கண்டு அதாவது மக்கள் கூட்டம் அவரைப் போற்றி மிக உயர்ந்த நிலையில் வைத்திருப்பதை நினைத்து பூரிப்பு அடைந்தாள். ஒரு வகையில் அவள் பெற்றது பேரின்பமே. இன்னொரு வகையில் நம்மோடு இல்லையே என்றும் வருத்தப்பட்டுள்ளார்.
பெற்ற தாயின் மனது
ஒரு போராட்டம் கண்டது.
தனது தாயார் எழுதிக் கொடுத்த ஒரு துண்டு சீட்டு சுவாமியிடம் அனுப்பப்பட்டது.
சாமியோ பொதுப்படையான கருத்து ஒன்றை அதில் எழுதினார். அவரவர் ஊழ்வினைப் படியே விதி வேலை செய்யும். எது நடக்கக்கூடாது என்று விதிக்கப்பட்டதோ அதை தடுத்து போட யாராலும் ஆகாது இது உறுதி.
தாயார் புரிந்துகொண்டார். எல்லாம் விதிப்படி என்பதை உணர்ந்தாள். மானாமதுரைக்கு பயணமானார்.
பகவானின் மௌனம் தனக்குள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து பால் பிரண்டன் கூறும் கருத்து நாளைய பதிவில்.
முருக. சண்முகம்
Comments