கொழுப்பு நல்லது

கொழுப்பு நல்லது


 




 

கொழுப்புச்சத்து என்ற வார்த்தையை அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். கொலஸ்ட்ரால் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இந்த கொலஸ்ட்ரால் என்றால் என்ன என கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.
கொலஸ்ட்ரால் என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள். அது இயற்கையாக நமது உடலில் உருவாக்கப்படுகிறது. லிபிட் எனப்படும் ஒரு வேதிப்பொருளும் ஸ்டீராய்டு எனும் வேதிப்பொருளும் இணைந்து கொழுப்பு உருவாகிறது.

நம் உடலில் உள்ள கொழுப்பில் 80% நம்முடைய கல்லீரலால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதை எண்டோஜெனஸ் (Endogenus cholesterol) என்பார்கள். மீதமுள்ளவை நாம் உண்ணும் உணவின் மூலம் உடலில் சேர்கிறது. இதை எக்ஸோஜெனஸ் (Exogenus cholesterol) என்பார்கள். அசைவ உணவுகளில் இருந்தே பேரளவில் கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது. சைவ உணவுகளில் அவகேடா, நட்ஸ் போன்றவற்றைத் தவிர எதிலும் கொலஸ்ட்ரால் இல்லை. நாம் சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்துக்கள் ரத்தத்தில் கலக்கின்றன. அப்போது கொலஸ்ட்ரால் குடலினால் உறிஞ்சப்பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. கல்லீரல்தான் தேவைப்படும்போது கொலஸ்ட்ராலை வெளிவிடவும், அல்லது உற்பத்தி செய்யும் உறுப்பாகவும் செயல்படுகிறது.

கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு, எல்லா செல்களுக்கும் வடிவம் கொடுத்து, அவற்றுக்குச் சுவராக இருந்து, இயங்கச் செய்கிறது. முக்கியமாக மூளையின் வளர்ச்சிக்கும், செல்களின் செயல்பாட்டுக்கும் இந்த கொலஸ்ட்ரால் இன்றியமையாததாக இருக்கிறது. கல்லீரலில்  இருந்து பித்தநீர் சுரக்க கொழுப்பு தேவைப்படுகிறது. இந்த பித்தநீர்தான்  உணவிலுள்ள கொழுப்பையும் கொழுப்பில் கரையும் வைட்டமின்களான A,D,E,K முதலியவற்றையும் குடலில் ஜீரணமாக்கி, ரத்தத்தில் கலக்கச் செய்கிறது.

கொலஸ்ட்ரால், நம் உடலுக்குத் தேவையான முக்கியமான ஹார்மோன்களான உடல் வளர்ச்சி ஹார்மோன் (Growth hormone), ஈஸ்ட்ரஜன் (Estrogen) டெஸ்டோஸ்டிரான் (Testosterone) போன்றவை சுரப்பதற்கு தேவைப்படுகிறது. நம் உடலிலேயே தயாராகும் வைட்டமின் ‘ஈ’உற்பத்திக்கு கொலஸ்ட்ரால் மிகவும் தேவைப்படுகிறது. கொழுப்பில் இரண்டு வகை உள்ளன. இவற்றை நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு என்று பிரிக்கிறார்கள். LDL என்பது கெட்ட கொலஸ்ட்ரால். HDL என்பது நல்ல கொலஸ்ட்ரால். LDL ரத்தத்தில் அதிகமாக அளவு இருந்தால் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த LDL  ரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர்களில் படிமங்களாகப் படிந்து ரத்த ஓட்டத்தை நாளடைவில் தடைப்படச் செய்கிறது. இதற்கு அத்தேரோஸ்க்ளிரோசிஸ் (Atherosclerosis) என்று பெயர். ஆனால், HDL இப்படிப்பட்ட கொலஸ்ட்ரால் படிமங்கள் உருவாவதைத் தடுக்கிறது. ரத்தத்தில் கொலஸ்ட்ரால் எப்போதும் புரதச்சத்தின் துணையுடன்தான் இருக்கும். இதனை லிப்போபுரோட்டீன் என்பார்கள்.

நம் உடலில் மொத்தம் 200 mgm % கொழுப்புச்சத்து இருக்கிறது. இதில் LDL Cholesterol எனப்படும் குறை அடர்த்திக் கொழுப்பு புரதம் < - >100 mgm%, VLDLCholesterol எனப்படும் மிகக்குறை அடர்த்திக் கொழுப்புப் புரதம் < - >30 mgm%, ட்ரைக்ளிஸ்ரைட்டுகள் < 130 mgm%, மிக அடர்த்திக் கொழுப்புப் புரதம் எனப்படும் HDLP Cholesterol < 50 mgm % உள்ளன. மொத்த கொலஸ்ட்ரால் அளவு 200 mgm% க்கு மேலே சென்றால் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம். 10% அதிகமானால் 30% அதிக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. மாரடைப்பு வந்தவர்கள் இதன் அளவை 180 mgm% க்கு குறைவாக வைத்துக்கொள்வது நல்லது. குறை அடர்த்தி கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 100 mgm% அதிகமானால் 5 மடங்கு அதிகமாக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. இவர்களுக்கு பாரிச வாயு நோய் வர வாய்ப்புகள் அதிகம்.

ட்ரைக்ளிஸ்ரைட்டுகள் (TGL) நாம் உண்ணும் கொழுப்பு உணவிலிருந்து கிடைக்கிறது. மேலும், எந்தக் கொழுப்பையும், சர்க்கரையையும்கூட நம் கல்லீரல் முக்கிளிசரைடுகளாக மாற்றும் சக்தி கொண்டுள்ளது. ஆதலால் 150 mgm% அளவுக்கு மேற்பட்டால் பன்மடங்கு அதிக அளவில் மாரடைப்பு வர வாய்ப்புண்டு. மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 35mgm% கீழே இருந்தால் மட்டுமே மாரடைப்பு வர வாய்ப்புள்ளது. இதன் அளவு 50 mgm% க்கு மேலே அதிகமாக இருந்தால் மாரடைப்பைத் தடுக்கின்றது. இரத்தக் குழாயில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்டிராலை, அப்புறப்படுத்தி இரத்தக்குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கவும் செய்கிறது. இனி என்னென்ன கொழுப்பு வகைகள் எந்தெந்த உணவுகளில் அதிகம் இருக்கின்றன என்பதைப் பார்ப்போம்.

நிறைவுற்ற கொழுப்பு அமிலம் (Saturated fatty acid) : எந்த எண்ணெய் குளிர வைக்கும் பொழுது உறைந்து விடுகிறதோ, அதில் மிக அதிக அளவு நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. உதாரணம்,நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய். ஐஸ்கிரீம் கேக், குக்கீஸ், சாக்லேட், இனிப்புப் பண்டங்கள் ஆகியவற்றிலும், முட்டை யின் மஞ்சள் கரு, கோழி இறைச்சி, மாட்டுஇறைச்சி, ஆட்டு இறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் உறுப்பு இறைச்சி களான கல்லீரல்,
மண்ணீரல், மூளை போன்றவற்றில் இந்தக் கொழுப்பு அதிகமாக உள்ளது.

இந்த உணவு வகைகளை அதிகமாக உட்கொள்வதால், இதிலுள்ள கொழுப்பு நம் கல்லீரலில் அதிவேகமாக கொலஸ்ட்ராலாக மாறி, முக்கியமாக கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் LDL-cholesterol BP ஆக இரத்தத்தில் கலந்து 100 mgm% அளவைவிட மிகுதியாகிறது. இதனால் இவை ரத்தக் குழாய்களில் படிந்து (Atherosclerosis) மாரடைப்பு, மூளை பாதிப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்பட காரணமாகிறது. ஒற்றை நிறைவுறா கொழுப்பு அமிலம் (Mono unsaturated fatty acid  MUFA) கடலை எண்ணெய், ஆலிவ் எண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் உள்ளது. பன்மை நிறைவுறா கொழுப்பு அமிலம் (Poly unsaturated fatty acid -PUFA) சூரியகாந்தி எண்ணெய், சோயா எண்ணெய், சோளம் எண்ணெய் ஆகியவற்றில் உள்ளது. இந்த உணவுகளை அளவோடு சாப்பிட்டால் கெட்ட கொலஸ்ட்ரால் (LDL cholesterol) அதிகரிப்பதைத் தவிர்த்து நல்ல கொலஸ்ட்டிரால் (HDL Cholesterol) அளவை அதிகரிக்கும்.

நிறைவுறா கொழுப்பு அமிலம் அதிகம் உள்ள எண்ணெயைக் கொதிக்க வைக்கும்போது, அதிலுள்ள நற்குணங்களை இழந்து, நிறைவுற்ற கொழுப்பாக (Saturated fatty acid) மாறுகிறது. இந்த முறையில் தயாராகும் உணவுகளான அப்பளம், வடை, சிப்ஸ், பிரெஞ்ச் ஃபிரைஸ் முதலியவற்றை அதிக அளவு உண்டால் ரத்தத்தில் கெட்ட கொரஸ்ட்டிரால் கூடி ரத்தக் குழாய்களை அடைக்கும். ஒரே எண்ணெயைப் பல முறை காய்ச்சிப் பயன்படுத்தும்போது இந்தத் தீமை பலமடங்கு உயர்கிறது.
ஒமேகா 3, ஒமேகா 6 என்பவை அதி முக்கிய கொழுப்பு வகைகள் ஆகும் (Essential fatty acid). இவற்றை நம் கல்லீரல் உற்பத்தி செய்ய முடியாது. உணவின் மூலமே இவை நமக்கு கிடைக்கிறது. இவை ரத்தத்தில் உள்ள முக்கிளிசரைடுகள் குறைத்தும், நல்ல கொழுப்பை கூட்டியும், இரத்தம் உறையாமல் தடுத்தும், மாரடைப்பு வரும் வாய்ப்பையும் குறைக்கிறது. ரத்தத்தில் ஒமேகா-3 ஒருபங்கு என்றால், ஒமேகா-6 இரு மடங்காக இருக்கும்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி