அவல் இனிப்பு பணியாரம்!
அவல் இனிப்பு பணியாரம்!
தேவையானவை:
பச்சரிசி - 1 கப், அவல் - அரை கப், வெல்லம் - ஒன்றரை கப், நல்லெண்ணெய் - சுடுவதற்கு, ஏலக்காய் - கால் டீஸ்பூன்.
செய்முறை:
அவலையும், அரிசியையும் நன்றாகக் கழுவி தனித்தனியாக ஊற வைக்கவும். இரண்டையும் ஒன்றன் பின் ஒன்றாக தண்ணீர்விட்டு நைசாக அரைத்து பிறகு வெல்லத்தைப் போட்டு இட்லி மாவு பதத்துக்கு அரைக்கவும். பிறகு ஏலக்காய்ப் பொடி சேர்த்து கலந்து வைக்கவும். பணியாரச் சட்டியில் நல்லெண்ணெய்விட்டு சூடாக்கி, ஒவ்வொரு குழியிலும் முக்கால் பாகம் அளவுக்கு மாவை ஊற்றவும். மாவு அடிப்பகுதியில் வெந்ததும், ஸ்பூனை வைத்து திருப்பிவிட்டு நன்றாக வெந்ததும் எடுக்கவும்
Comments