சுக்கு அதிமதுர சூப்!
- Get link
- Other Apps
சுக்கு அதிமதுர சூப்!
சென்னை போன்ற பெருநகரங்களில் பெய்துவரும் மழையின் காரணமாக சளி, இருமல், தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள் இந்த அதிமதுரம் சுக்கு சூப் செய்து பருகலாம். அகன்ற பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்ததும் பாத்திரத்தைக் கீழே இறக்கிவிடவும். அந்த வெந்நீரில் அதிமதுரம் பொடி அரை டீஸ்பூன், சுக்குப்பொடி அரை டீஸ்பூன், திப்பிலி பொடி கால் டீஸ்பூன், நறுக்கிய பாதாம் பருப்பு ஆறு ஆகியவற்றை சேர்த்து இரண்டு நிமிடங்கள் பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும். நீராவியில் பொடிகள் அனைத்தும் வெந்ததும், நன்றாக கலக்கி சூட்டோடு பருகவும். பருகும் போதே பாதாமை மென்று சாப்பிட்டால் கசப்பு தெரியாமல் இருக்கும். சிறப்பு மேற்கண்ட பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். மொத்தமாக வாங்கி வைத்துக்கொண்டு தேவையானபோது பொடி செய்து பயன்படுத்தலாம். பெரியவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து வயதினருக்கும் மழை மற்றும் குளிர்காலங்களுக்கு ஏற்றது இந்த சூப்.
- Get link
- Other Apps
Comments