செட்டிநாடு நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார்

 செட்டிநாடு நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார்

நவம்பர் 27, 2020 15:11

எலும்பு சாம்பார் ஒரு செட்டிநாடு அசைவ உணவுஆட்டு நெஞ்சு எலும்பில் செய்வார்கள். நெஞ்சு எலும்பும்முருங்கைக்காயும் சேர்த்து சமைக்கும்போதுவீடே மணக்கும்.




தேவையான பொருட்கள்:

 

எலும்பு   - 250 கி

முருங்கைக்காய் – 1

து.பருப்பு – 50 கி

வெங்காயம்– 1

இஞ்சி – பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி

தக்காளி – 2

மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி

தனியா தூள் –  4 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி

புளித் தண்ணீர் – 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

 

அரைத்துக் கொள்ள:

 

தேங்காய் – 2 மேசைக்கரண்டி

கசகசா  - 1 தேக்கரண்டி

மிளகு - தேக்கரண்டி

சீரகம் - தேக்கரண்டி

 

தாளிக்க:

 

பிரியாணி இலை – 1

பட்டை - சிறிய துண்டு

கல் பாசி – சிறிது

சோம்பு – 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய்   - 2

கறிவேப்பிலை – 1  கொத்து

நல்லெண்ணெய்  – 2 மேசைக்கரண்டி

 

செய்முறை:

 

வெங்காயம்தக்காளியை பொடியாக நறுக்கி கொள்.

 

முருங்கைக்காயை துண்டுகளாக வெட்டிக்கொள்.

 

எலும்பை நன்றாகக் கழுவி குக்கரில் போட்டு து.பருப்புஉப்புமஞ்சள்தூள் மற்றும் கப் தண்ணீர் சேர்த்து  3 விசில் விட்டு நிமிடங்கள் சிம்மில் வேக வை. 

 

கடாயில் நல்லெண்ணெய் விட்டுதாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொரிய விடு. 

 

பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கு. 

 

பின் தக்காளியைச் சேர்த்து கூழாகும் வரை வதக்கு. 

 

பிறகுகுக்கரில் உள்ள பொருட்களைச் சேர். 

 

பின்  மசாலா தூள் அனைத்தையும் சேர்த்து முருங்கைக்காய்தேவையான உப்பு சேர்த்துக் கலந்து கொதிக்க வை.

 

புளித் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் தேங்காய் விழுதைச் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கு.

 

சுவையானமணம் மிகுந்த செட்டிநாடு நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார் சாப்பிட தயார்



Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி