இகிகாயை அடைவதற்கான சில உடற்பயிற்சிகளை
இகிகாய் ( பகுதி 4)
இகிகாய் பற்றி பார்த்தோம்.இகிகாய் சார்ந்து புத்தகங்களை பற்றி நிறைய தெரிந்து கொண்டோம்.மேலும்,இகிகாய் புத்தகத்தில் குறிப்பிட்ட சில குறிப்புகளை பற்றி பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.அவற்றில்,சென்ற வாரம் "திளைத்திருக்கும் நிலை" பற்றி பார்த்தோம்.
அதன் தொடர்ச்சியாக இன்றைய வாரத் தொடரில் இகிகாயை அடைவதற்கு சில உடற்பயிற்சிகளை பற்றி பார்ப்போம்.
இரண்டாம் உலகப்போருக்கு முன்னரே ஜப்பானில் இருந்து வரும் "ரேடியோ தாய்ஸோ"பற்றி பார்ப்போம்."ரேடியோ தாய்ஸோ" - ன் முக்கிய பண்பு பயிற்சியில் கலந்து கொள்பவர்கள் அனைவரிடத்திலும் ஏற்படுத்தும் ஒற்றுமை உணர்வு.ஏனென்றால்,இந்த உடற்பயிற்சி எப்போதும் ஒரு குழுவாகவே நடைபெறுகிறது.
அதென்ன "ரேடியோ தாய்ஸோ" என்ற கேள்வி அனைவரிடமும் இருக்கும்.ஆரம்பங்காலத்தில் இப்பயிற்சி ரேடியோ மூலமாகவே கற்றுக் கொள்ளப்பட்டது.பின்பு, தொலைக்காட்சியில் கற்றுக் கொடுக்கப்பட்டது.இப்படியே ரேடியோ மூலமாகவே ஆரம்பித்தால் "ரேடியோ தாய்ஸோ" என்ற பெயர் ஏற்பட்டது.
பள்ளிக் குழந்தைகள் வகுப்பு தொடங்குவதற்கு முன்பாக, அலுவலகத்தில் வேலைப் பார்ப்பதற்கு முன்பாக செய்கின்றனர்.30% ஜப்பானிய மக்கள் இப்பயிற்சி மூலமாகவே தங்களது நாளைத் தொடங்குவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
"ரேடியோ தாய்ஸோ" உடற்பயிற்சி செய்வதன் மூலம் புத்துணர்வு பெற முடிகிறது என்கிறார்கள்.இப்பயிற்சியை செய்து முடிக்க ஐந்திலிருந்து பத்து நிமிடங்கள் போதுமானது என்கிறார்கள்.
மேலும், இப்பயிற்சியின் நோக்கம் நம் உடலுக்கு தேவையான அசைவை கொடுப்பது தான்.கைகளை நாம் மேலே தூக்குவது என்பது பத்தில் ஒரு பங்கு கூட இல்லை.எப்போதும் கைகளை நாம் கீழே தான் தொங்க விடுகிறோம்.கை மேலேயும் செல்லும் என்பதை மறந்துவிடுகிறோம்.
கால் மூட்டுகளுக்கு முடிந்த அளவு இயக்கம் கொடுப்பது இப்பயிற்சியின் மற்றைய நோக்கம்.
உடலின் அனைத்து விதமான அடிப்படை இயக்கங்களையும் நாம் பயிற்சி செய்ய ரேடியோ தாய்ஸோ உதவுகிறது.
"ரேடியோ தாய்ஸோ" - ன் உடற்பயிற்சியின் வடிவங்களை கீழ்க்கண்டவாறு இணைத்துள்ளோம்.அனைவரும் பார்த்து செய்து பயன் பெறுங்கள்.
- கீர்த்தனா பிருத்விராஜ்
Comments