கலர்புல் திருஷ்டி
கோவை: தோட்டத்தில் பயிர்களுக்கு மத்தியில்,வைக்கோல் பொம்மை தயார் செய்து நட்டு வைத்த காலம்,மலையேறி விட்டது. காரமடை அருகே,கண்டியூர் தக்காளி தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள கலர்புல் திருஷ்டி பிளக்ஸ் பேனரில், கண்ணடிக்கிறார், மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். இதைப்பார்க்கும் ஒரு சில விவசாயிகள், தாங்களும் சோளக்காட்டு பொம்மைக்கு பதிலாக, இது மாதிரியான படங்களை வைப்பதாக கூறிச் சென்றுள்ளனர் என அந்த விவசாயி கூறினார்.
Comments