. குண்டை தூக்கி போட்ட எல்.முருகன்.. குழப்பத்தில் அதிமுகவினர்..!

 அமித்ஷா இங்கு வந்து சென்ற பிறகும், கூட்டணி குறித்து எல்.முருகன் பேசிய பேச்சு அதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்து வருகிறது.

யார் முதல்வர் வேட்பாளர் என்ற பிரச்சனை அதிமுகவில் எழுந்


தது.. பிறகு ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பினரை அமைச்சர்கள் ஆளுக்கொரு பக்கம் சந்தித்து பேசி, அவர்களை சமாதானம் செய்து, இறுதியில் அந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தது.

இதையடுத்து எடப்பாடியார் தான் முதல்வர் வேட்பாளர் என முடிவானது.. இந்த சமயத்தில், அடுத்த பிரச்சனையை பாஜக கிளப்பியது.. கூட்டணி கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என்று வானதி சீனிவாசன் கூறினார்.. இவரை தொடர்ந்து பொன்.ராதா முதல் எல்.முருகன் வரை இதே கருத்தை வலியுறுத்தினர்.

இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடமும் கருத்து கேட்கப்பட்டது.. யார் சொன்னாலும் எடப்பாடியார்தான் முதல்வர் என்று ஸ்டிராங்காக சொல்லிவிட்டார்.. இப்படிப்பட்ட சூழலில்தான் அமித்ஷா இங்கு வந்திருந்தார்.. எப்படியும் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து பேச்சு எழும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

முதல்வர் வேட்பாளர் குறித்து எந்த பேச்சும் பேசவில்லை என்பது மட்டும் தெளிவானது. அதேசமயம் பாஜக - அதிமுக கூட்டணியும் முடிவானது.. எத்தனை சீட் ஒதுக்கப்படும் என்பது குறித்து கலந்து பேசி முடிவு சொல்வதாக அதிமுக தரப்பில் சொல்லப்பட்டதாக செய்திகளும் கசிந்தன.

இப்படிப்பட்ட சூழலில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், அதிமுகவினருக்கு மறுபடியும் ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார்.. செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நிவர் புயல் காரணமாக பாஜக சார்பில் நடைபெற்ற வேல் யாத்திரை ரத்து செய்யப்படுகிறது.. டிசம்பர் 4 -ம் தேதி அறுபடை வீடுகளில் வழிபாடு செய்தபின் டிசம்பர் 5-ம் தேதி திருச்செந்தூரில் நிறைவு நிகழ்ச்சி நிறைவுபெறும்.

முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் பாஜக தேசிய தலைமை தான் முடிவு செய்யும்" என்றார். இதுதான் மறுபடியும் அதிமுகவினர் தலையை சுத்த விட்டுள்ளது.. மறுபடியும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையா? முதல்வர் வேட்பாளரை யார் முடிவு செய்வார்கள் என்ற குழப்பமும் ஏற்பட்டு வருகிறது.

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி