முட்டை தோசை!

 முட்டை தோசை முதல் கொத்து ரொட்டி வரை ரோட்டு கடை உண்வுகளின் ருசி எப்போதுமே வேற லெவல் தான். டின்னர்க்கு முட்டை தோசை இது போல ஒரு முறை செய்ங்க. தினமும் புது புது சுவையில் செஞ்சி அசத்துங்க.முட்டையை தினமும் சாப்பிட்டால் புரதச்சத்து நிறைவாக கிடைக்கும் என்று சொல்வார்கள்


முட்டை தோசை செய்ய தேவையான பொருள்கள் :

தோசை மாவு _ 1 கப்
முட்டை – 1
மிளகு தூள் – சிறிதளவு
வெங்காயம் – 1
எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை :

முதலில் வெங்காயத்தை எடுத்து பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்பு பாத்திரத்தில் முட்டையை எடுத்து சிறிது உப்பு சேர்த்து நன்றாக அடித்து வைக்கவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து நன்கு சூடானதும் அதில் தோசை மாவை ஊற்றி, அதன் மேலே அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி, வெங்காயத்தை தூவவும். பின்பு வேகவைத்த தோசையை சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி இரண்டு புறமும் திருப்பி போடவும்.

இறுதியில் மிளகுத்தூள் தூவி பரிமாறினால் சுவையான முட்டை தோசை தயார். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ரொம்ப பிடிக்கும்

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி