கார்த்திகை தீபம் ஸ்பெஷல்
,கார்த்திகை தீபம் ஸ்பெஷல் !
கார்த்திகை தீபம் அன்று சொல்ல வேண்டிய ஸ்லோகம்/மந்திரம் ! அண்ணாமலைக்கு போகாமலே தீபம் தரிசித்த பலன் வேண்டுமா? தர்ம நூல்களில் கார்த்திகை தீபங்களை வைக்கும்போது சொல்லும்படி விதிக்கப்பட்டிருக்கும் மந்திரம்: கீடா பதங்கா மசகாச்ச வ்ருக்ஷா ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா:! த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா ஸுகின பவந்து ச்வபசா ஹி விப்ரா:!! மாலையில் விளக்கேற்றும் போதும், கோயில்களில் விளக்கு வழிபாடு செய்யும் போதும் இந்த ஸ்லோகத்தை அவசியம் வாசியுங்கள்.
பொருள்: புழுக்களோ, பறவைகளோ அல்லது கொசுவோ, நம் மாதிரி உயிருள்ள ஜீவனில்லை என்று நினைக்கப்படுகிற மரமோ, தண்ணீரிலும் பூமியிலும் எத்தனை வகையான ஜீவராசிகளோ, உயர்ஜாதி மனிதனோ, தாழ்ந்த குலத்தினனோ யாரானாலும் சரி...இந்த தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய சகல பாவங்களும் நிவர்த்தியாகட்டும். இன்னொரு பிறவி எடுக்காமல் பரமானந்த வடிவான அந்த இறைவனுடன் கலக்கட்டும்.
விளக்கேற்றிஇந்த ஸ்லோகத்தை சொல்லி வணங்கிய பின், "அண்ணாமலையாருக்கு அரோஹரா'' என்று மூன்று முறை சொல்லி திருவண்ணாமலை தீபத்தை மனதார நினைத்து வணங்க வேண்டும். இவ்வாறு செய்தால் அண்ணாமலை மகாதீபத்தை நேரில் தரிசித்த பலன் உண்டாகும். தீபத் திருநாளின் அருமை பெருமைகளை உணர்ந்து, விளக்கேற்றி வழிபட்டு, வாழ்வில் சகல வளங்களையும் பெற்று மகிழ்வோமாக! அண்ணாமலை எம் அண்ணா போற்றி! கண்ணாரமுதக் கடலே போற்றி !!
Comments