பத்துமலை திருக்குமரன்

 

உலகில் பல நாடுகளில் இந்துக் கோயில்கள் பிரசித்தி பெற்று விளங்குகின்றன.

 


 குறிப்பாக ஆறுமுகக்  கடவுளுக்கு,  மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில்  பத்துமலைக் குகை   செல்வதற்கு முன்னே,  மிகவும் பிரமாண்டமாக முருகனாகிய முத்துக்குமரன் நின்ற கோலத்தில் இருக்கும் திருக்காட்சி, பக்தியுடன் பார்ப்பவர்களின் மனதை மிகவும்

ஆனந்தப்படுத்தும்.

 

 அந்த தெய்வீக தரிசனம்,  மலேசிய நாட்டிற்கே  தனிப் பெருமையாக அமைந்துள்ளது

 

 உலகில் இதுபோல் மிக உயரமான முருகன்சிலை வேறெங்குமில்லை எனலாம்.

 

  முருகப்பெருமானை,  உலகெங்கிருந்தும் மக்கள் வந்து பக்தியுடன் வணங்கி செல்கிறார்கள்.

 

 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் தைப்பூச திருநாளில், காவடி எடுத்தும்,  வேல் குத்தியும்,  தங்களது வேண்டுதலை நிறைவேற்றி  பக்தர்கள் வந்து  முத்துக்குமரனை வணங்குகிறார்கள்

 

 கோலாலம்பூர் முத்துக்குமரனை பற்றி ஒரு பாடல் எழுதிய நண்பர் திரு முருக. சண்முகம் அதனை எனக்கு அனுப்பியிருந்தார்


என் மனதில் இந்த பாடலுக்கான வீடியோ காட்சியை  சேர்க்கலாம் எண்ணி

சில காட்சிகளை இணைத்தேன்

.

முருக. சண்முகம்

 இந்தப் பாடலுக்கு இசை அமைத்தவர் V.  தஷீ அவர்கள் பாடலைப் பாடியவர் டேவிதார் அவர்கள்,  ஆல்பத்தை அவரது  சகோதரர் முருக.சங்கர் அவர்கள் தயாரித்துள்ளார்.

கார்த்திகைத் தீபத்திரு நாளான இன்று கோலாலம்பூர் முத்துக்குமரனை பற்றிய பாடல்களை  கேட்டும்,  பார்த்தும் நீங்கள் நிச்சயம் ஆனந்தப்படுவீர்கள் என நம்புகிறேன்.

அனைவருக்கும் கார்த்திகைத் தீபத்திருத்திருநாள் வாழ்த்துகள்

உமாகாந்தன்


நிர்வாக ஆசிரியர்

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி