கார்த்திகை பொரி உருண்டை

 கார்த்திகை பொரி உருண்டை


தீப நாளில் மட்டுமல்லாது என்றுமே, புற இருளை போக்குவதோடு மட்டுமல்லாமல் நம் அக இருளையும் நீக்குவதில் நாம் கவனம் கொள்ள வேண்டும். கார்த்திகை தீபத்தன்று வகை வகையான விளக்கேற்றுவதுடன் நம் மனம் நிறைய நல்லெண்ணங்களையும் நல் சொற்களையும் நிறைக்க வேண்டும். எல்லோர் வீட்டிலும் இன்று பொரி எனும் இனிப்பு வகை களை கட்டும். சிலர் கடைகளில் வாங்கி கடவுளுக்கு படைத்து வழிபடுவார்கள். நாம் வீட்டிலேயே சுவையாக பொரி உருண்டை செய்து கடவுளுக்கு படைக்கலாம் . தேவையான பொருள்கள்:- நெல் பொரி- 4 கப் வெல்லம் பொடி செய்தது - கால் கப் சுக்கு பொடி - ஒரு டீஸ்பூன் ஏலக்காய் - 1 கொப்பரை தேங்காய் பொடியாக நறுக்கியது - தேவையான அளவு நெய் - சிறிதளவு செய்முறை:- நெல் பொரியை நன்கு சுத்தம் செய்யவும், நெல் தோல் மற்றும் தூசி நிறைய இருக்கும். எல்லாவற்றையும் எடுத்துச் சுத்தப்படுத்தவும். அடி கனமான பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து, அது மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் சேர்த்து சூடுபடுத்தவும். வெல்லம் கரைந்ததும், ஒரு வடிகட்டியில் ஊற்றி வடிகட்டவும். பாத்திரத்தைக் கழுவிவிட்டு (அடியில் மண் இருக்கும்) மறுபடியும் வடிகட்டிய வெல்லப் பாகை கொதிக்க வைக்கவும். பாகு நுரைத்து வரும்போது, ஒரு சிறிய கிண்ணத்தை வைத்து, அதில் சில துளிகளை ஊற்றி விரலால் எடுத்து உருட்டும் பதம் வரும் வரை காய்ச்சவும். (பாகு உருண்டை இலகுவாக இருத்தல் வேண்டும்) பொரியைக் கொட்டி அத்துடன் சுக்கு, ஏலக்காய், தேங்காய் சேர்த்து கிளறி நெய்யைக் கையில் தடவிக்கொண்டு உருண்டை பிடிக்கவும். முற்றிய பாகில் உருண்டை பிடித்தால், இன்னும் அதிக பாகு தேவைப்படும். பொரி உருண்டைக்கு, எப்போதும், மிருதுவான உருண்டை பாகு பதம்தான் ஏற்றது. காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் நமத்துபோகாமல் இருக்கும்.


வை.ஜான்சி ராணி சென்னை.

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி