கந்தபுராணம்
சஷ்டியின் ஆறாவது நாளான நேற்று திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெற்றது.
இன்று முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம்.
இந்நாளில்" கந்தபுராணம்" குறித்து பதிவு மேற்கொள்கிறேன்.
பதினெண் புராணங்கள் வடமொழியில் உள்ளவை. இதிலொன்று ஸ்கந்தபுராணம்.
காஞ்சிபுரத்தில் இருக்கும் குமரக் கோட்டத்தில் பணி செய்யும் அர்ச்சகர் காளத்தியப்ப சிவாச்சாரியார். இவரது குமாரரே கச்சியப்ப சிவாச்சாரியார்.
காஞ்சி குமரக் கோட்டத்தில் உள்ள முருகக் கடவுளுக்கு பணி செய்யும்நாள் தோறும் பூஜை செய்து, முருகனிடம் அளவு கடந்த பக்தி கொண்டவர்.
முருகப்பெருமானுக்கு தன் வாழ்நாளில், அருள் கடவுளாக இருக்கும் இறைவனின் புகழை தமிழ் மக்களுக்கு பக்தியுடன் நூல் வடிவில் தரவேண்டிய எண்ணம் இருந்தது.
இதற்காக ஸ்கந்த புராணத்தின் வடமொழி நூலை திறம்பட படித்தார்.
கச்சியப்ப சிவாச்சாரியார் தம் மீது கொண்டுள்ள பக்தியாலும், முருகப்பெருமான் அவள் கனவில் வந்து கந்த புராணம் பாட அருளினார்.
தானே முதல் செய்யுளையும் எடுத்துக் கொடுத்தார்.
அந்தச் செய்யுளின் பொருள் கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு விளங்கவில்லை. அதன்பின் முருகப்பெருமான் உரிய விளக்கம் தந்தார்.
முருகப்பெருமானின் ஆசியால், தூய உள்ளத்தோடு பக்தியினால்
கச்சியப்ப சிவாச்சாரியார், முருகப் பெருமானின் வரலாற்றை முறையாகவும், முழுமையாகவும் 91 படலங்களில் 10345 பாடல்களாக எழுதி முடித்தார்.
இந்நூலுக்கு கந்தபுராணம் என்று பெயரிட்டார்.
அதன்பின் காஞ்சிபுரம் குமரக் கோட்டத்திலேயே, அரசர்கள், பிரபுக்கள் கல்வி வேள்விகளில் சிறந்த முன்னோர்கள் முன்னிலையில் கந்தபுராணம் அரங்கேற்றினார்
கற்றறிந்தவர்கள் சபையிலே முருகப்பெருமான் அடியெடுத்துக் கொடுத்த முதல் பாடலை படிக்க ஆரம்பித்தார்.
" திகட சக்கரச் செம்முக மைந்துளான்
சகடச
சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர வின்மணி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவோம்."
சிவந்த முகங்கள் ஐந்தும் அவற்றிற்கு ஏற்றால்போல் திகழும் தச கரம் என்னும் பத்து கரங்களை உடைய சிவபெருமான் என்று பொருள் என உரைத்தார் கச்சியப்ப சிவாச்சாரியார் அவர்கள்.
கற்றறிந்த சான்றோர் களின் கூட்டத்திலிருந்த ஒருவர்,
திகழும் தசகரம் என்று கவியில் எங்கே வருகிறது.
திகட சக்கரம் என்று தானே
வருகிறது என்றார்.
திகட சக்கரம் எப்படி திகழ் தசக்கரம் ஆகும் என்றார்.
திகழ் + தசக்கரம் புணரும் போது திகடச் சக்கரம் ஆகும் என்றார் கச்சியப்ப சிவாச்சாரியார்.
அச்சபையில் கற்றறிந்த சான்றோர்களில் ஒருவர் அதாவது ழகரமும் தகரமும் சேர்ந்து டகரமாக மாறும் என்கிறீர்கள்.
இப்படியொரு புணர்ச்சி விதி தொல்காப்பியம் அல்லது பின் வந்த இலக்கிய நூல்களில் உண்டா என்று கேட்டார்.
கச்சியப்ப சிவாச்சாரியார் திகைத்துப் போனார் ஆமாம் இப்படி ஒரு புணர்ச்சி விதி தொல்காப்பியத்தில் இல்லை தான். எப்படி எழுதினீர்கள் என கேட்டதற்கு முதலடி தமிழ் கடவுள் முருகன் தந்தது என்றார்.
அவையில் இருந்தவர்கள் ஆச்சரியப்பட்டனர். இதில் உள்ள இலக்கணத்தை நான் ஆராயாமல் விட்டு விட்டேன்.
முதல் பாடலிலேயே, சொல்லப்போனால் முதல் அடியிலேயே இலக்கணம் முட்டுமானால் இந்நூல் அரங்கேறுவது எப்படி என்று சிந்தித்தார்.
கொடுத்தது கந்தன் விடுப்பதும் அவனாகத்தான் இருக்க முடியும். இடையில் நாம் என முடிவுக்கு வந்தார் கச்சியப்ப சிவாச்சாரியார்.
கற்றறிந்த சபையிலே கச்சியப்ப சிவாச்சாரியார், பெரியவர்களின் கேள்விக்கு விடை தர வேண்டியது என் கடமை.
இலக்கண நூல்களை ஆராய வேண்டும். கந்தவேல் அருளால் இதற்கு பொருள் இயம்ப நாளை கூடுவோம் என அச்சபையை கலைத்தார்.
காஞ்சி கச்சியப்ப சிவாச்சாரியார், மறு நாள் கற்றறிந்த சபையினை இலக்கண விதிப்படி மேற்கோள் காட்டி பொருள் தந்தார்.
காஞ்சி குமரக் கோட்டத்தில், கந்தபுராணம் அரங்கேறியது, என்பது குறித்த ஒரு இசைத் தொகுப்பு, பாடலை எழுதியவர் எனது சகோதரர் "வெண்பாக் கவிஞர்" முருக. சம்பத்து அவர்கள், இசை தஷி அவர்கள் நானும் எனது இளைய சகோதரர் முருக. சங்கர் தயாரித்த இசைத்தொகுப்புக்கு ஒளி வடிவம் (video) கொடுத்தவர் உமாகாந்தன் அவர்கள்.
காஞ்சி குமரக்கோட்டம் பாடல் கேளுங்கள்.
Comments