புரூஸ்லி பிறந்த நாள்
புரூஸ்லி பிறந்த நாள் இன்று நவம்பர் 27
புரூஸ் லீயைப் பற்றிய இந்த 7 உண்மைகள் உங்களுக்குத் தெரியுமா? -
இளமைப் பருவத்தில் அனைத்து உலக இளைஞர்களின் ஆதர்சமாக இருக்கும் புருஸ் லீயின் நினைவுநாள் இன்று. இன்றும் நாம் புருஸ் லீயைக் கொண்டாட பின்வரும் காரணங்கள் சின்ன சாம்பிள்!
1. புரூஸ்லி தன்னுடைய டீன் வயதில் 'Tigers Of Junction Street' என்ற பெயரில் இயங்கிவந்த ஹாங்காங்கின் கேங்ஸ்டர் குழுவில் இணைந்தார். எங்கே சண்டை என்றாலும் சும்மா தேடித் தேடிவந்து இந்தக் குழு உறுப்பினர்களைத்தான் மொத்தியிருக்கிறது மற்ற பெரிய சைஸ் குழுக்கள். இதுக்கும் மேலயும் பாடி தாங்காது என்ற உண்மை உறைத்த பிறகுதான், தன் தாயிடம் சொல்லி கராத்தே வகுப்பில் சேர்ந்திருக்கிறார்.
2. கத்தி, சைக்கிள் செயின் சகிதம் வளையவந்த லீ, ஒருசமயம் லோக்கல் கவுன்சிலரின் மகனை பெண்டு நிமிர்த்திவிட்டார். தொடர்ச்சியாக நிறைய வம்புகளில் மாட்டிவந்த லீயை அமெரிக்கா அனுப்பிவிட பெற்றோர் முடிவு செய்தனர். அவர்மீதான சில சில்லறை வழக்குகளுக்காக போலீசாருக்கு 'கப்பம்' கட்டி வெற்றிகரமாக விசாவை சேஸ் செய்தனர்.
3. புரூஸ்லி சண்டை போட்டு பார்த்திருப்பீங்க, பஞ்ச் பண்ணி பார்த்திருப்பீங்க, டான்ஸ் ஆடி பார்த்திருக்கீங்களா... பார்த்திருக்கீங்களா?
கராத்தே வகுப்புக்குச் சென்ற அதேநேரத்தில், 'காதலியை கரெக்ட் பண்ண உதவும்’ என்ற ஒரே காரணத்துக்காக புரூஸ் லி 'சா சா' நடனமும் கற்றிருக்கிறார். 18- வயதில் அவர் ஹாங்காங்கின் 'சா சா' சாம்பியன். அமெரிக்காவுக்கு வண்டி கட்டியபோது அவரிடம் இருந்தது 100 டாலர்கள் மட்டுமே. உடன் பயணித்த பயணிகள் சிலருக்கு சா சா நடன உத்திகளை சொல்லிக்கொடுத்து ஃப்ளைட் தரைதொடும் முன்னே சில எக்ஸ்ட்ரா டாலர்களை சம்பாதித்தார்.
4. அமீர்கானை அறைந்தால் ஒரு லட்சம், அந்த சவால் விட்டவரை அறைந்தால் பதிலுக்கு ஒரு லட்சம் என இங்கே கும்மியடிப்பதுப் போல ஒரு சவால் புரூஸ் லீக்கும் வந்தது. சீனர்களுக்கு மட்டுமே உரிய குங்ஃபூவை அமெரிக்கர்களுக்கு கற்றுத் தந்த புரூஸ் லீயிடம் சீன பழமைவாத குரூப் ஒன்று உரண்டை இழுத்தது. தங்களுடன் புரூஸ் லீ சண்டையிட்டு தோற்றால், சீனர்களைத் தவிர வேறு யாருக்கும் குங்ஃபூவை கற்றுத்தரக்கூடாது என்பதுதான் போட்டியின் முடிவு. போட்டிக்கான நாள் குறித்தனர். களத்தில் லீயும் எதிராளியும். போட்டி ஆரம்பிப்பதற்கான நேரம் தோராயமாக காலை பத்து மணி என்று வைத்துகொள்வோமே. பத்து மணி மூன்று நிமிடங்களில் அடுத்தடுத்த தன்னுடைய குங்ஃபூ வகுப்புகளுக்கு அமெரிக்ககர்களிடம் சந்தா வசூலிக்க ஆரம்பித்தார் லீ. விளம்பர இடைவேளைக்குக்கூட நேரம் தராமல் போட்டியை முடித்துவிட்டார் லீ.
5. 'உத்யோகம் புருஷ லட்சணம்' என்ற பழமொழிக்கு இணையான சீன பழமொழி ஒன்றையும், மேலும் சில புத்திமதிகளையும் சொல்லித்தான் லீயை வேலைத்தேடச்சொல்லி அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தனர் பெற்றோர். லீ பார்த்த வேலை என்ன தெரியுமா? அமெரிக்காவின் பெரும் பணக்காரர்கள், நடிகர்கள் என பலருக்கும் குங்ஃபூவை சொல்லிக் கொடுத்தார். 'உத்யோகம் புருஷ லட்சணம்' என்பது 'உதையோகம் புரூஸ் லீ லட்சணமா'கிற அளவுக்கு பிரபலமானார்.
6. 'என்டர் த ட்ராகன்' படத்தில் லீ ஹீரோ. 'யெஸ் பாஸ்' என்று சொல்லி ஹீரோவிடம் அடிவாங்கும் ஸ்டன்ட் ஆர்ட்டிஸ்ட் கேரக்டரில் ஜாக்கி சான். ஒரு சண்டை காட்சியில் கையில் இருக்கும் தடியால் சானின் முகத்தில் விழுகிறது ஒரு கும்மாங்குத்து. 'கல்லானாலும் திருச்செந்தூரில் கல்லாவேன், அது பஞ்ச்சானாலும் புரூஸ் லீ கையால் பஞ்சராவேன்' என்று லீ புகழ் பாடிச்சென்றார் சான்.
7. புரூஸ் லி இறந்தபோது 'கேம் ஆஃப் டெத்' என்ற படம் நிறைவடையாமல் இருந்தது. லீயின் பழைய படங்களில் இருந்து சில காட்சிகள், நிறைய டூப்கள் என ஒருவழியாக படத்தை எடுத்து முடித்து வெளியிட்டபோது வாங்கிக்கட்டிக்கொண்டது தயாரிப்பாளர் தரப்பு. காரணம், புரூஸ் லியின் இறுதி ஊர்வலத்தில் இடம்பெற்ற சில உண்மை காட்சிகளையும் படத்தில் இணைத்து வசூல் செய்யப் பார்த்ததால்!
உலகம் எப்போதும் மிஸ் செய்யும் நபர்கள் பட்டியலில் புரூஸ் லீக்கு எப்போதும் இடம் இருக்கும்!
- சீலன்
நன்றி: விகடன்
Comments