நிவா் புயல் காரணமாக கண்ணகி சிலை சேதமடைந்தது.

 

நிவா் புயல் காரணமாக கண்ணகி சேதமடைந்தது.

 


மெரீனா கடற்கரையில் தமிழக அரசு சார்பில் உழைப்பாளா் சிலை, கண்ணகி சிலை மற்றும் மகாத்மாகாந்தி சிலை உள்ளிட்ட பல்வேறு மறைந்த தலைவா்கள், பிரபலங்களின் சிலைகள் நிறுவப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. 

 

இந்தநிலையில் திமுக முதல் முறையாக ஆட்சிக்கு வந்த போது முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையால் 1968-ம் ஆண்டு மெரீனா கடற்கரையில் நிறுவப்பட்டுள்ள கண்ணகி சிலை திறந்து வைக்கப்பட்டது. இதன் பின்னர் 2001-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது அகற்றப்பட்டது. பின்னர் 2006-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மறைந்த திமுக தலைவர் கருணாநிதியால் மீண்டும் அதே இடத்தில் கண்ணகி சிலை நிறுவப்பட்டது. 

 

தற்போது நிவர் புயல் கரையை கடந்த போது வீசிய சூறாவளி காற்று மற்றும் கனமழையால் இந்த சிலையின் பீடம் மற்றும் மார்பிள் கற்கள்  கடுமையாக சேதம் அடைந்துள்ளது. இதையறிந்த மாநகராட்சி மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகள் சிலையின் சேதமடைந்த பகுதியைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். மேலும், மெரீனா கடற்கரையில் நிறுவப்பட்டுள்ள மற்ற சிலைகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்

 

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி