உலகத் தொலைக்காட்சி தினம்

 உலகத் தொலைக்காட்சி தினம் ( WORLD TELEVISION DAY, November 21 ) ஒவ்வொரு வருடமும் நவம்பர் 21ம் தேதி கொண்டாடப்படுகிறது. தொலைக்காட்சியின் முக்கியத்துவம் இந்தத் தினத்தில் எடுத்துச் சொல்லப்படுகிறது.1996 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி நடைபெற்ற அனைத்துலகத் தொலைகாட்சிக் கருத்தரங்கின் விதந்துரைப்பின் படி ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 21ம் தேதியை உலகத் தொலைக்காட்சி தினமாக அறிவித்தது. இதன்படி முதல் தொலைக்காட்சி தினம் 1997ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி கொண்டாடப்பட்டது.


உலகின் தொழிநுட்ப வளர்ச்சியின் பரிமாணத்தில் பல மின்சாதனப் பொருட்கள் மனிதர்களிடத்தில் முக்கியத்துவம் பெற்றது. ஆனால் அவை ஒவ்வொன்றும் மனிதனின் ஒவ்வொரு தேவையை ப+ர்த்தி செய்வதற்காகவும் பயன்படுத்தப்பட்டது. அந்த வகையில் மனிதனை ஓரிடத்திலிருந்து உலகில் மூலை முடுக்கெங்கும் கொண்டு சென்று கண் முன்னே உள்ள தொழிநுட்ப சாதனம் மூலம் காட்டுவதே தொலைக்காட்சி ஆகும்.

இந்த தொலைக்காட்சி கண்டு பிடிக்கப்பட்டதிலிருந்து இன்றைய இப்பொழுது வரை மனிதனுக்கு முக்கியத்துவம் வாயந்த சாதனங்களில் ஒன்றாக நிலை பெற்றுள்ளது. பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரை அனைவரையும் தன்பால் ஈர்த்து அவர்கள் இலகுவில் அணுகக்கூடிய ஒரே தொலைத்தொடர்பு சாதனங்களில் தொலைக்காட்சிதான் முன்னிலை வகிக்கின்றது.

1920 ஆம் ஆண்டு ஜோன் லொகி பெயாட் தொலைக்காட்சயை கண்டுபிடித்தார். அன்று முதல் இன்று வரை பல தொழிநுட்ப வளர்ச்சிகளுக்கு ஈடுகொடுத்து தொலைக்காட்சி பல பரிமாணங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுவருகிறது. அதன் காரணமாக காலத்திற்கு காலம் மக்களின் வாழ்க்கையுடன் ஒன்றிணைந்த சாதனமாக விளங்கும் தொலைக்காட்சி உலகையே ஆட்சி செய்யும் தொலைத்தொடர்பு சாதனமாக உருவெடுத்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் ஊடகத்துறையில் மிகவும் செல்வாக்குமிக்க சாதனமாக தொலைக்காட்சி காணப்படுகிறது. அதனூடாக வெளியிடப்படும் புகைப்படங்கள், காணொலிகள், புதிய ஆலோசனைகள் மற்றும் வடிவமைப்பு போன்றவை மக்களை அதிகளவில் கவர்கின்றன. தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறையின் மிகவும் குறிப்பிடத்தக்க ஊடகமாக தொலைக்காட்சி வளர்ச்சியடைந்துள்ளது. அதற்கு பிரதான காரணம் உலகளாவிய ரீதியில் மிகவும் குறைந்த வசதியில் தொலைக்காட்சியை நாடமுடியும் என்பதால் அதற்கான ரசிகரகளும் உலகளாவிய ரீதியில் அதிகமாக காணப்படுகின்றனர். சமூக வேறுபாடு வயது வேறுபாடு மற்றும் தேசிய வேறுபாடு ஆகியவற்றை களைந்து அனைவர் மத்தியிலும் பொதுவான விருப்பத்திற்கு உரிமையுடைய சாதனமாக தொலைக்காட்சி காணப்படுகிறது. தொலைக்காட்சியில் ஒளிரபப்பாகும் காணொலிகளிளை புரிந்துகொள்வதற்கு மேலதிக அறிவு தேவையில்லை. இதனால்; கல்வியறிவு குறைந்தவர்களும் அதனை பயன்படுத்துவதில் ஆர்வம செலுத்துகின்றனர்.

தற்போது மனித உணர்வுகளை நேரடியாகவும் அவர்களின் நிலைமையை விளக்கிக்கூறும் பலம்மிக்க சாதனமாக தொலைக்காட்சி காணப்படுகிறது. இதனால் உலக தொலைக்காட்சி தினத்தை அனுஷ்டிப்பதில் யுனெஸ்கோ அமைப்பு முன்னிலை வகிக்கின்றது. கருத்து சுதந்திரத்தை மேம்படுத்தல், ஆற்றல்களை வெளிப்பாடு மற்றும் சிறந்த காணொளிகள் என்பது யுனெஸ்கோ திட்டங்களுக்கு அவசியம் என்பதால் தொலைக்காட்சி தினம் யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்டது. உலகில் இடம்பெறும் வன்முறைகள் மற்றும் கலாசார சீர்கேடுகள் என்பன தொடர்;பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் சாதனமாக தொலைக்காட்சி பயன்பத்தப்பட வேண்டுமென யுனெஸ்கோ தெரிவித்திருந்தது. இதன்மூலம் சிறுவர்கள் மாத்திரமன்றி இளைஞர்களையும் தெளிவுபடுத்த முடியுமென நம்பிக்கை வெளியிடப்பட்டது.

இது போன்ற ஊடகத் தொழிலை ஊக்குவிப்பதன் மூலம் வன்முறைகளை குறைக்கலாம். அந்த வகையில் குறித்த செயற்பாட்டை செய்யும் பெரிய பங்கை தொலைக்காட்சி வகிக்கின்றது. இந்நிலையில் உள்ளுர் சமூகங்களின் முக்கியத்துவம் மற்றும் கலாசாரங்களின் கௌரவம் அவற்றின் பாதுகாப்பு என்பவற்றை வெளிப்படுத்தும் வகையில் தொலைக்காட்சி படைப்புகள் அமைய வேண்டுமென யுனெஸ்கோ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தொலைக்காட்சி புரட்சிக்கு 1925-ல் வித்திட்டவர் இங்கிலாந்து நாட்டின் ஜான்லோகி பெயர்டு என்ற அறிவியலாளர். 27.01.1926-ல் தான் கண்டறிந்த கருவியைபுகழ்பெற்ற அறிவியல் அறிஞர்கள் மத்தியில் இயக்கிக் காட்டினார்.

அவரைத் தொடர்ந்து அறிஞர்கள் பலரும் ஆராய்ச்சியில் ஈடுபட்டதன் விளைவாக, 1936-ம்ஆண்டு இங்கிலாந்து நாட்டில் தொலைக்காட்சியில் கருப்பு வெள்ளை ஒளிபரப்பு நடைமுறைக்கு வந்தது.

'Television' என்பதற்கு தமிழில் பட ரேடியோ, வானொளி என்று பெயர்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், இச்சொல் தொலைவில் உள்ளதை காண்பது என்ற பொருள் தந்ததால், தொலைக்காட்சி என்பதே நிலைபெற்றது.

நவீன தொலைக்காட்சி பெட்டிகள்

உலக நிகழ்வுகளை வீடுகளுக்குள் கொண்டு வந்து காட்சிப்படுத்திய, தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பானது ஆன்டெனாவில் தொடங்கி, தற்போது டிஷ், கேபிள், இணையம் என பல்வகை ஊடகங்களில் நிலைபெற்று விட்டது.

அறிவியல், தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கேற்ப நெகிழ்வுதன்மையுடன் காணப்படுவதால், ஒளிபரப்பு பல்வகை ஊடகங்களுக்குள் ஊடுருவி நிலை நிறுத்திக்கொண்டுள்ளது. சிறிய பெட்டி வடிவில்கருப்பு வெள்ளை திரையுடன் தயாரிக்கப்பட்டு, பின்னர் பெரிய அளவிலும், வண்ணத்திரையுடனும் தயாரிக்கப்பட்டு, 20 ஆண்டுகளுக்கு மேலாக காட்சியளித்த தொலைக்காட்சிகள், 2010-க்கு பிறகு எல்இடி,எல்சிடி என அதிநவீன தொழில்நுட்பத்தில் சிறியது முதல் பெரிய திரைகளுடன்தயாரிக்கப்பட்டு, வீடுகளை அலங்கரித்து வருகின்றன.

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி