முருகப்பெருமான் வரலாறு
சஷ்டி விரதம் ஆறாம் நாள்
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்
ஆணவம் கொண்ட சூரபத்மன் தேவர்களை சிறை வைத்தான்.
இவனது கொடுமைகளை சிவபெருமானிடம் முறையிட்டார் இந்திரன்.
சூரபத்மனை அழித்திட நெற்றிக்கண் தீப்பொறியிலிருந்து ஆறுமுகனை படைத்தார் சிவபெருமான்.
கார்த்திகைப் பெண்களிடம் முருகப்பெருமான் வளர்ந்தார்.
சூரபத்மனை அழித்திட முருகப் பெருமானிடம் சிவபெருமான் கட்டளையிட்டார்.
தந்தையின் கட்டளைக்கு அடிபணிந்தார் குமரன்.
அன்னை பார்வதி வேலாயுதத்தை தந்தார்.
சண்டை போடுவதற்கு முன் வீரபாகுவை சமாதானம் செய்ய தூது அனுப்பினார்.
சூரபத்மன், சமாதானத்துக்கு விரும்பவில்லை. அதர்மத்தை நிலைநாட்டினான்.
கந்தவேல் போருக்கு தயாரானார்.
சண்டைக்கு பயந்து மரமாய் மாறினான்.
முருகப்பெருமான் பார்வதி தந்த வேலாயுதத்தால் மரத்தைப் பிளந்தார்.
தான் செய்த தவறை உணர்ந்து திருந்தினான் சூரபத்மன்.
முருகப்பெருமான் சூரனுக்கு அருள் செய்து வேலுமயிலுமாய் ஆக்கினார்.
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்.
இந்த நிகழ்வு அடிப்படையில் முருகப்பெருமான் வரலாற்றை பாடலாக எழுதி இசைத் தொகுப்பு (Album ) தயாரித்து வழங்கியுள்ளார் திரு முருக.சண்முகம்
பாட்டுக்கு ஏற்றபடி பின்னணி காட்சிகளைத் தொகுத்து ஒளி வடிவம் (வீடியோ ) உமாகாந்தன் கொடுத்துள்ளார்.
பாடலுக்கு இசையமைத்து பாடியவர் கர்ணா மற்றும் குழுவினர்கள். மற்றும் ச. அனுஷநந்தினி குழுவில் பாடி உள்ளார்.
ஒரு பல்லவி நான்கு சரணம்
மொத்தம் 38 வரிகள் அடங்கிய பாடல்.
7.44 நிமிடம் வரும் முருகன் வரலாறு ஒலி, ஒளி வடிவில் பாருங்கள், கேளுங்கள்
Comments