தொடர்மழையினால் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளுக்கு காவல் ஆணையாளர் சென்று ஆய்வு

 *நிவர் புயல் காரணமாக சென்னையில் பெய்து வரும் தொடர்மழையினால் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளுக்கு காவல் ஆணையாளர் சென்று ஆய்வு செய்து , மழைநீர் அகற்றும் பணியினை பார்வையிட்டு , ஒருங்கிணைப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார் (24.11.2020).*




சென்னை பெருநகர , காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால் , இ.கா.ப. , அவர்கள் உத்தரவின்பேரில் , வடகிழக்கு பருவமழையையொட்டி , மழை வெள்ளம் குறித்த அவசர காலங்களில் பொதுமக்களுக்கு உதவிடவும் , மீட்பு பணிகளில் ஈடுபடவும் , சென்னை பெருநகர காவல் , ஆயுதப்படை உதவி ஆய்வாளர்கள் தலைமையில் , ஆயுதப்படை காவலர்கள் கொண்டு 12 பேரிடர் மீட்பு குழுக்கள் இடர் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர் .

 இந்நிலையில் , வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நிவர் புயல் உருவாகியுள்ளதால் , சென்னை மற்றும் சுற்று வட்டாரங்களில் அதிகளவு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் , சென்னை வாழ் பொதுமக்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் பாதுகாப்பு அளித்திடவும் , சாலைகளில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றிடவும் , விபத்து இல்லாமல் பராமரிக்கவும் , பொதுமக்களுக்கு தேவையான அவசர அழைப்பின் மூலம் வேண்டிய உதவிகள் செய்திடவும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால் , இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டதின்பேரில் , சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .

 இந்நிலையில் , நேற்று ( 23.11.2020 ) முதல் நிவர் புயல் காரணமாக சென்னையில் பெய்து வரும் தொடர்மழையினால் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் , உரிய வழிகாட்டுதலின்பேரில் , சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் காவல்துறை அதிகாரிகள் , பெருநகர சென்னை மாநகரட்சி , மின்சார வாரியம் மற்றும் மெட்ரோ வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இணைந்து சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றி எவ்வித அசம்பாவிதங்கள் நடக்காமலும் , சீரான போக்குவரத்துக்கும் வழிவகுக்கும் வகையில் செயல்படவும் , மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி மற்றும் அவசர அழைப்புக்கு உதவி செய்ய ஒருங்கிணைப்பு செய்து , தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டதன்பேரில் , சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் தலைமையிலான காவல் குழுவினர் , சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றல் மற்றும் இதர நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகின்றனர் . 

இதன் தொடர்ச்சியாக , சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால் , இ.கா.ப. , அவர்கள் இன்று ( 24.11.2020 ) காலை , எழும்பூர் , மாண்டியத் சாலை பகுதிக்கு சென்று அங்கு தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியினை பார்வையிட்டு , அங்கு பாதுகாப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து , துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கினார் .

venkatesh-our reporter

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி