வேலை மன அழுத்தம்

 வேலை மன அழுத்தம் (Work Stress)?


 ---


 


ஒருவர் தன்னுடைய பணிசூழலுடன் சகஜமாக இருக்க முடியாவிட்டால், பணி சுமை  மற்றும் வேலையினால் மனஅழுத்தம் ஏற்படும்


வேலை மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்?


- கொடுக்க பட்டுள்ள வேலையை முடிபதற்கான திறன் தன்னிடம் இல்லை என்ற உணர்வு வரும் போது


-வேலை செய்யும் இடத்தில் தன்னால் எந்த ஒரு முடிவுகளையும் சுயமாக எடுக்க முடியவில்லை என்ற எண்ணம் தோன்றும் பொழுது


-பணியிடத்தில் சக ஊழியர்களிடமிருந்து எந்த ஆதரவும் இல்லை என்று நினைக்கும் போது


-செய்கின்ற வேலை திருப்தி அளிக்கவில்லை என்று அடிக்கடி நினைப்பது


-சக ஊழியற்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படுவது, அவர்களுடன் ஒன்றாக வேலை செய்ய முடியாத சூழல் ஏற்படும் பொழுது

 

-மன உளைச்சல் ஏற்படும் அளவிற்கு மிகுந்த பணி சுமை இருப்பது

 

-திட்டமிடப்பட்ட நேரத்தில் வேலையை முடிக்க வேண்டும் என்ற அழுத்தம் அடிக்கடி ஏற்படும் நிலை


 - ஷிப்ட் வேலை (தூக்கம் இன்மை, குடும்பத்தினருடன் நேரம் செலவிட இயலாமை)


 -வேலை பாதுகாப்பின்மை (எப்பொழுது வேண்டும் என்றாலும் வேலையில் இருந்து எடுத்து விடுவார்கள் என்ற நிலையின்மை)


ஊழியர்கள் வேலை அழுத்தத்தினால் பாதிக்கப்படுவது ஒட்டுமொத்த நிறுவனத்தையும் பாதிக்கும் (முதலாளிகளையும் உட்பட)


வேலை மன அழுத்தம் - அறிகுறிகள்?

 

 இப்பிரச்சினை மனம், உடல், செயல்திறன் மற்றும் அறிவாற்றல் ஆகிய அனைத்தையும் பாதிக்கும்

 

- சிறிய பிரச்சினைகளுக்கு தேவையில்லாத பதற்றம் அடைதல்


- சிந்திக்கும் சமையம் எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது


-  சோகமாக இருப்பது


-  தலைவலி


- உடல்வலி


- உடல் சோர்வடைதல்


- தனிமையை விரும்புதல்


- சாதாரண விஷயங்களுக்கு மிகுந்த கோப ப்படுதல்


- சிறிய வேலை செய்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுதல்


- கவனம் குறைவது


- மது, புகை போன்ற பழக்கங்கள் அதிகரிப்பது


வேலை மன அழுத்தத்தினால் நிறுவனத்திற்கு ஏற்படும் பாதிப்புகள்:


- ஊழியர்கள் தேவையில்லாமல் அதிக லீவ் எடுப்பது.  இது தனிப்பட்ட காரணங்கள், நோய், அதிக பணிசுமை, மது பழக்கம் அல்லது சக ஊழியர்களிடம் கருத்து வேறுபாடு என்ற காரணங்களினால் இருக்கலாம்


- சில ஊழியர்கள் வேலை மன அழுதத்திலும் சரியாக நிறுவனத்திற்கு வருவார்கள்; அவர்களின் உடல் மட்டும் தான் அங்கு இருக்கும், மனம் இருக்காது


- வேலையின் தரம் குறைவாக இருக்கும்


- ஊழியர்கள் வேலையில் ஈடுபாடு இல்லாமல் இருப்பது


- வாடிக்கையாளர்கள் அடிக்கடி புகார் அளிப்பது


- நிறுவனத்தின் நற்பெயர் கெடும்


- இதனால் வருவாயும் பாதிக்கும்


வேலை மன அழுத்தத்தை எப்படி சமாளிப்பது?


ஒவ்வொரு மனிதனும்  வேலை செய்யும் இடத்தில் எதிர்பார்ப்பது


- தன்னுடைய திறைமையை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற இடமாக இருக்க வேண்டும்


- தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக இருக்க வேண்டும்


- தன்னை மரியாதையுடன் நடத்த வேண்டும்


- வளர்ச்சி பாதையில் இருபதற்கேற்ற வேலையை நாடுவார்கள்


இந்த மன அழுத்தப்பிரச்சனையை சமாளிக்க முதலாளிகளும் தொழிலாளிகளும் சேர்ந்து செயல் பட்டால் மட்டுமே சரி செய்ய முடியும்


ஊழியர்கள் செய்ய கூடியவை?


- சத்தான உணவு


- சரியான தூக்கம்


- உடற்பயிற்சி


- சக ஊழியர்களுடன் நல்ல உறவைப் பேணுங்கள்


- சக ஊழியர்களை ஏளனம் செய்ய கூடாது


 - உங்களுக்கு மன குழப்பம் ஏற்பட்டால், உங்கள் குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மற்றவர்களிடம் உங்கள் பிரச்சினைகளை சொல்லும் போதே வேதனை குறையும்


 - நம்பத்தகாத உயர் எதிர்பார்ப்புகளைத் தவிர்க்கவும்


 - நம்பிக்கையுடன் சிந்திக்க கற்றுக்கொள்ளுங்கள்; எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கவும்


 - கட்டுப்படுத்தக்கூடிய பிரச்சினைகளை பற்றி மட்டுமே சிந்தியுங்கள்; சில பிரச்சினைகளை என்ன செய்தாலும் நம்மால் கட்டுப்படுத்த முடியாது, அதை பற்றி சிந்திகாதிர்கள்


 - நகைச்சுவை உணர்வோடு பேச பழகுங்கள்


 - பிரச்சினைகளுக்கு உணர்ச்சிவசப்பட்டு முடிவு எடுக்காதீர்கள்; பிரச்சினை என்ன என்று தீர ஆராய்ந்து முடிவு எடுங்கள்


 - ஆல்கஹால் மற்றும் புகைப்பழக்கத்தை தவிர்பது நல்லது


முதலாளிகள் செய்ய கூடியவை?


- ஊழியர்களுக்கு சரியான ஓய்வு நேரம் இருப்பதை உறுதி படுத்த வேண்டும்


- ஊழியர்களின் பிரச்சினைகளை கேட்டு அறிந்து தீர்வு காண வேண்டும்


- ஊழியர்களின் திறமைக்கு ஏற்ப சவாலான வேலைகளை கொடுங்கள்; அதிக பணி சுமை கொடுக்காதீர்கள்


- ஊழியர்களின் வேலையைப் பற்றி பின்னூட்டங்களைக் கொடுங்கள்,  அவர்கள் தவறுகளை திருத்திக்கொள்ள நல்ல வாய்ப்பாக அமையும்


- ஒவ்வொரு ஊழியருக்கும், தனக்கு கீழ் என்னென்ன வேலைகள் இருக்கிறது என்பது தெளிவாக இருக்க வேண்டும்; இதனால் தேவை இல்லாத குழப்பங்களை தவிர்க்கலாம்


- ஊழியர்களின் திறமையை மேம்படுத்த அவ்வபோது பயிற்சிகள் அளிப்பது அவசியம்


- வேலை செய்யும் நேரத்தில் சிறு இடைவெளி அளித்தால், மன அழுத்தம் குறையும்


- வேலை இடத்தில் எல்லோரும் நண்பர்களாக இருக்கும் சூழலை உருவாக்குங்கள்


- வேலையை திறமையாக செய்து முடித்தால் பாராட்டுகள் மற்றும் வெகுமதி அளியுங்கள்


- அனைத்து ஊழியர்களையும் மரியாதையுடன் நடத்துங்கள்; அவ்வாறு செய்தால் ஒவ்வொருவரும் சக ஊழியர்களையும் மரியாதையுடன் நடத்துவார்கள்


- ஊழியர்களுக்கு அவ்வபோது மன அழுத்தம் ஏற்படும், ஆனால் தொடர்ந்து அப்படி மன அழுத்தம் இருந்தால் அருகில் உள்ள மருத்துவரை அணுக ஏற்பாடு செய்யுங்கள்


நன்றி


டாக்டர்.வி.யு.கார்த்திகேயன் எம்.டி.

 ஆலோசகர் மனநல மருத்துவர்

 இந்திரா மைண்ட் கிளினிக்

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி