கந்தன் விளக்கம்
இன்று சூரசம்ஹாரம்🙏 🙏 🙏 *கந்தன் விளக்கம்
கந்தன் என்றால் கந்து+அன்= கந்தன், அதாவது, கந்து என்றால் யானையை கட்டிப்போடும் தூண். விளக்கமாக சொல்வதென்றால், எதற்கும் அடங்காமல் நான் தான் பெரியவன் என்ற மமதையில் தரிகெட்டுத் திரியும் மனதை அடக்கி இறைவன் என்ற தூணோடு சேர்த்து கட்டுதல் என்பதாகும். இதன் காரணமாகவே முருகப் பெருமானுக்கு கந்தன் என்ற பெயர் வந்தது.
சஷ்டி விளக்கம்.
அமாவாசைக்கு பின், வளரும் சந்திரன் பொதுவாகவே மந்தமாகவே இருக்கும். ஆனால், ஆறாம் நாளான சஷ்டி திதியில் மட்டும் அரை நிலவாகி வசீகரிக்கும் தோற்றத்துடன் இருக்கும். இதில் இன்னொரு அறிவியல் உண்மையும் மறைந்துள்ளது. அரைநிலவு நாளில், நிலவில் இருந்து வெளிப்படும் ஈர்ப்பு விசையானது சரிவிகித அளவோடு இருக்கும். இதன் காரணமாக இயற்கையும் எந்தவித சீற்றமும் இல்லாமல், கடல் கொந்தளிப்பு இல்லாமல், ஏகாந்தமாக அமைதியாக காணப்படும்
சம்ஹாரம்
இறைவன்பொதுவாக தேவர்களுக்கும், முனிவர்கள் மற்றும் ரிஷிகளுக்கும் துன்பம் விளைவித்து அட்டூழியம் செய்யும் அசுரர்களை, வதம் செய்து அவர்களை அழிப்பது தான் வழக்கம். அதற்கு மாறாக, முருகப்பெருமான் அசுரர்களுடன் போரிட்டு அவர்களை அழித்தொழிக்காமல், அவர்களை மன்னித்து தடுத்து தன்னுடனேயே ஆட்கொண்டதால் தான், அதனை சம்ஹாரம் என்று சொல்கிறோம். இதற்கு அர்த்தம் பகைவர்களையும் மன்னித்து அருள்பாலிப்பதே ஆகும்.
சம்+ஹாரம்=சம்ஹாரம். சம் என்றால் அழகு, அன்பு, சுத்தம், வெற்றி, நன்மை என பல அர்த்தம் உண்டு. சுருக்கமாக சொல்வதென்றால், இத்தனையையும் நமக்கு கொடுப்பது சம்ஹாரம் ஆகும். நம்மிடம் உள்ள தீய குணங்களையும், நான் என்ற அகந்தையையும் விட்டொழித்தால் தான் நமக்கு இத்தனை நன்மைகளும் கிடைக்கும்.
ஆகவே, சஷ்டி திருநாளில் விரதம் இருந்து, சூரசம்ஹாரம் நடைபெறும் நாளன்று, நான் என்ற அகந்தையை விட்டொழித்து, அழகன் முருகப்பெருமானிடம் இருந்து, அழகு, அன்பு, பிறப்பு, சுத்தம், நன்மை, வெற்றி என்ற சகலத்தையும் வேண்டிப்பெறுவோம். அதுமட்டுமில்லாமல், சிவனின் அம்சமான ஆறு முகத்தையும், அதாவது தத்புருஷம், அகோரம், வாமம், சத்யோஜாதம், ஈசானம். அதோமுகம் என ஆறு முகங்களையும் ஒரு சேர முருகப் பெருமான் வடிவில் வணங்கி அவன் அருள் பெறுவோம்.
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
Comments