ஓடிடியில் முதலிடத்தை பிடித்த சூரரை போற்று.. இந்தியளவில் சாதனை
சுதா கொங்கரா இயக்கத்தில் முதன் முறையாக சூர்யா நடித்து வெளியான படம் சூரரை போற்று. கடந்த 12ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியான இப்படம் உலகளவில் பல சாதனைகளை செய்து வருகிறது.
மேலும் தற்போது வரை சிறந்த படம் என்று சிறந்த விமர்சனத்தை பெற்று வருகிறது. பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகளும் தங்களது விமர்சனத்தை சமூக வலைத்தளங்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஓடிடியில் இதுவரை வெளியான திரைப்படங்களிலேயே இப்படம் மிகசிறந்த படமாக இருக்கிறது என்றும் பலரால் பாராட்டப்பட்டு வருகின்ற நிலையில், இந்த வாரம் ஓடிடியில் ஒளிபரப்பட்ட படங்களில் சூரரை போற்று திரைப்படம் முதலிடத்தை பிடித்து சாதனை செய்துள்ளது.
மேலும் ஆர்.ஜெ. பாலாஜி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் 3ஆம் இடத்தை பிடித்துள்ளது.
Comments