அனைத்து புனிதர்கள் தினம்
இன்று கிருஸ்துவர்களுக்கு "அனைத்து புனிதர்கள் தினம் " (All saints day)...
கத்தோலிக்க, மற்றும் ஆங்கிலிக்கன், ஆர்தொடாக்ஸ் , லுத்திரன் சபையினர் இதை அனுசரிக்கிறார்கள்....புனிதர்கள் என்றால் அவர்களும் பெரும்பாலும் பாவிகளாக வாழ்ந்தவர்களே..ஆனால் பரிசுத்த வாழ்க்கை வாழவேண்டும் என வைராக்கியத்தோடு இறுதி மூச்சு வரை போராடி இறைவனை கண்டவர்கள்..நாமும் அப்படி பரிசுத்த வாழ்க்கை வாழ வேண்டும் என முயற்சித்தால் ,நாமும் புனிதர்களே ...பேதுரு எனப்படும் பீட்டர் ,சாவுக்கு பயந்து இயேசுவை யாரென்றே தெரியாது என மறுதலித்தவர்..ஆனால் பிறகு அதே இயேசுவுக்காக தனது உயிரையே துணிந்து அளித்தவரானார்... இயேசுவை பின்பற்றுபவர்களை கொல்வதே தனது லட்சியம் என வாழ்ந்து அதை செய்துவந்த பவுல் பின்னர் இயேசுவுக்காகவே தனது உயிரையே அளித்தவரானார்...இப்படியாக பல புனிதர்கள்.... இத்தாலி, ஆஸ்திரியா, பிரான்ஸ், ஜெர்மனி ,போலந்து போன்ற பல நாடுகளில் இன்று அரசு விடுமுறை.....
பல்வேறு நூற்றாண்டுகளில் பல்வேறு விதங்களில் கொண்டாடப்பட்டு வந்த இத்திருநாள் எட்டாம் நூற்றாண்டில் திருத்தந்தை மூன்றாம் கிரகரியின் காலத்தில் நவம்பர் முதல் தேதியன்று கொண்டாடப்பட்டது. திருஅவையால் புனிதர் பட்டம் அளிக்கப்பட்ட புனிதர்கள் பலர் இருக்கும் போதிலும் இவ்வகை அங்கீகாரம் பெறாமல்இ ஆனால் புனித வாழ்வு வாழ்ந்த பலரை நினைவு கூறும் வண்ணம் இவ்விழா கொண்டாடப்படுது.
Comments