அமெரிக்காவின் அவமானம்
: அமெரிக்காவின் அவமானம் என உலக நாடுகள் வேதனை தெரிவித்து உள்ளன.
டிரம்பை இரண்டாவது முறையாக பதவியில் அமர்த்தலாமா அல்லது அவருக்கு பதிலாக பிடனை பதவியில் அமர்த்தலாமா என்பதை தீர்மானிக்க வாக்காளர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை வாக்களித்தனர். சமீபத்திய தரவுகளின்படி, பிடன் 264 தேர்தல் வாக்குகளையும், டொனால்ட் டிரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளார். பிடனுக்கு 50.1 சதவீத வாக்குகள் கிடைத்துள்ள நிலையில், சமீபத்திய கணிப்புகளின்படி டிரம்பிற்கு 48.3 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.
தற்போது பெனிசில்வேனியா, விஸ்கான்சின், ஜார்ஜியா மற்றும் மிக்சிகனில் வாக்காளர் மோசடி நடத்துள்ளதாக கூறி, வாக்கு எண்ணிக்கையை நிறுத்த முற்பட்டுள்ளது டிரம்ப் தரப்பு. ஆனால், டிரம்ப் கூறும் குற்றச்சாட்டுகள் எதற்கும் ஆதாரம் இல்லை.
ஒரு அதிபராக தேர்தலில் நின்று தோல்வியுற்றால் தனக்கு பெருத்த அவமானம் என்று கருதுகிறார் டிரம்ப். ஜனநாயக அரசியலில் இது இயல்பானது என்பதை புரிந்துகொள்ள மறுக்கிறார்.
இதனிடையே வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி டிரம்ப் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமது மேற்பார்வையில் வாக்கு எண்ணிக்கையை நடத்த டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க தேர்தல் முடிவுகளில் தெளிவு இல்லாதது உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் என ரஷியா கூறி உள்ளது.
நியூயார்க் மற்றும் பிற நகரங்களில் நடந்த போராட்டங்கள் மற்றும் போராட்டக்காரர்கள் – போலீஸார் இடையே நடந்த மோதல் காட்சிகளை ரஷிய ஊடகங்கள் ஒளிபரப்பின.
லாஸ் ஏஞ்சலஸ், சியாடில், மற்றும் மினியபோலீஸில் நடந்த மோதல்கள் குறித்தும், போராட்டங்கள் குறித்தும் ஈரானின் அரசு வானொலி செய்தி வெளியிட்டது.
வன்முறை, துப்பாக்கிகள். இது வளர்ச்சி பெறாத அல்லது வளரும் நாடுகளில் தேர்தல் நடக்கும்போது நிகழும் நிகழ்வுகள் ஆகும். சுதந்திரமான நாட்டில், அதாவது அமெரிக்க தேர்தலில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழும் என்று நாம் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டோம்” என சீனாவில் கிளோபல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கென்ய செய்தித்தாளில் அமெரிக்காவின் அவமானம் என்ற பெயரில் தலைப்புச் செய்தி வெளியானது.
அமெரிக்க தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மிகுந்த குழப்பம் நிலவுவதாக துருக்கி ஊடகங்கள் சுட்டிக்காட்டின.
அமெரிக்கா மிகப்பெரிய அரசியல் மற்றும் நிர்வாக குழப்பத்தில் இருப்பதாக ஸ்பெயின் நாட்டின் எல் முண்டோ செய்தி வெளியிட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க செய்தித்தளமான டெய்லி மேவ்ரிக் அமெரிக்க தேர்தல் தொடர்பாக கார்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சுதந்திர தேவி சிலையின் கழுத்தில் டொனால்ட் டிரம்ப் கத்தி வைத்திருப்பது போன்று சித்தரிக்கப்பட்டிருந்தது.
டொனால்ட் டிரம்பின் போட்டியாளரான ஜோ பைடன் தேர்தலில் முன்னிலை வகிப்பதாகவும் சில ஊடக செய்திகள் கூறுகின்றன.
டிரம்பின் வெற்றி தலிபனின் வெற்றியா? பிடனின் வெற்றி, ஆப்கானிஸ்தானில் குடியரசு தொடரும் என்பதற்கான அறிகுறியா?” என ஆப்கானிஸ்தானின் ராஹே மடனேயட் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது
Comments