இகிகய் பகுதி ( 3)
இகிகய் பற்றி தொடர்ந்து நிறைய தெரிந்து வந்து கொண்டிருக்கிறோம்.இகிகய் சம்பந்தமாக சென்ற தொடரில் புத்தகங்கள் சிலவற்றை பார்த்தோம்.அப்புத்தக்கத்தில் இகிகாய் தொடர்பாக சில குறிப்புகள் இருக்கின்றன.அக்குறிப்புகள் பற்றி பார்ப்போம்.
அக் குறிப்புகளில் ஒன்று தான் "திளைத்திருக்கு நிலை".
சுற்றி இருக்கும் அனைத்தையும் மறந்து நிகழ்காலத்தில் அதாவது இக்கணத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது தான் திளைத்திருக்கும் நிலை.
புரியும் படியாக சொன்னால், வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருக்கும் போது ஒருவரின் மனநிலை எதை மட்டும் நோக்கி இருக்குமோ அது தான் அந்நிலை.
நமக்கு பிடித்த காரியங்களை நாம் நேசித்து செய்யும் போது எவ்வித கவனச்சிதறலின்றி செய்து முடிக்க முடிந்ததை அனைவரும் உணர்ந்து இருப்பீர்கள்.அப்படி ஒருமுறை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் உணர்ந்து இருப்பீர்கள் என்றால் உங்களது இகிகயை கண்டுபிடிக்க திளைத்திருக்கும் நிலை
உதவும்.
நாம் நம்முடைய கவலைகளை மறந்துவிட்டு ஒரு வேலையில் ஈடுபட எது நம்மைத் தூண்டுகிறது?
நாம் எப்போது உச்சக்கட்ட மகிழ்ச்சியில் திளைக்கிறோம் ?
இப்படியான கேள்விகள் நாம் நமது இகிகயை கண்டுபிடிக்க உதவும்.
திளைத்திருக்கும் நிலையை அடைவதற்கு ஏழு நிபந்தனைகளை உண்டு டிபால் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஓவன் ஷாஃபரின் கூறுகிறார்.
* என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து வைத்திருத்தல்.
*அதை எப்படிச் செய்வது என்பதைத் தெரிந்து வைத்திருத்தல்.
*அதை எவ்வளவு சிறப்பாகச் செய்து என்று தெரிந்து வைத்திருத்தல்.
*எங்கே செல்ல வேண்டும் என்பதைத் தெரிந்து வைத்திருத்தல்
*எதிர்ப்படக் கூடிய முக்கியச் சவால்களை முன்கூட்டியே உணர்ந்திருத்தல்.
*தேவைப்படுகின்ற திறமைகளை முன்கூட்டியே உணர்ந்திருத்தல்
*கவனச்சிதறல்களிலிருந்து விடுபட்டிருத்தல்.
சரி, திளைத்திருக்கும் நிலையால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
* ஆரம்பத்தில் சொன்னவாறே நம்மளுடைய இகிகயை அடைவதற்கு பெரியளவில் உதவுகிறது.
*திளைத்திருக்கும் நிலையை உருவாக்கின்ற செயலில் நாம் அதிக நேரத்தை செலவிட முடிகிறது.உதாரணமாக, எழுதுபவர்கள் எழுதுவதில் தங்களது திளைத்திருக்கும் நிலையை உணரும் போது வழக்கத்தை விட நான்கு ஐந்து பக்கங்களையும் புதுவிதமான கருத்துக்களையும் எழுத முடிகிறது.
*திளைத்திருக்கும் நிலையால் தேவையற்ற பதட்டம் குறைகிறது
*மனத்தடைகள்,மன அழுத்தம் நீங்குகிறது.
*மனம் அலைபாயாது ஒரு பாதையில் பயணிக்கிறது.
*நேரத்தின் அவசியம் புரிகிறது.
திளைத்திருக்கும் நிலையை அடைவதற்கு மூன்று விஷயங்கள் கையாளப்படுகிறது.
*கடினமான வேலையைத் தேர்ந்தெடுத்தல்
*தெளிவான மற்றும் உறுதியான நோக்கங்களை கொண்டிருத்தல்
*ஓரே விஷயத்தில் கவனத்தைக் குவித்தல்
இம்மூன்றையும் பின்பற்ற முதலில் இவற்றை செயல்முறைப்படுத்த வேண்டும்.
நம் கவனத்தைச் சிதறடிக்காத ஒரு சூழலை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.அடுத்தக்கட்டமாக ஒவ்வொரு கணமும் நாம் எதைச் செய்து கொண்டிருக்கிறோமோ அதை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
வாழ்க்கையை வாழ மனிதர்கள் பணத்தைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் சற்று நிறுத்திவிட்டு இக்கணத்தில் நாம் என்னச் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை சிந்தித்துவிட்டு இக்கணம் நமக்கு எவ்வித மகிழ்ச்சியை அளிக்கிறது அல்லது இக்கணம் மகிழ்ச்சி தருகிறதா ? இல்லையா ? என்பதை உணர்ந்து பணத்தைத் தேடி ஓடுங்கள்.
- கீர்த்தனா பிருத்விராஜ்
Comments