தீபாவளி மலர் 2020
தீபாவளி மலர் 2020
பீப்பிள் டுடே இணைய பத்திரிகையின்
தீபாவளி மலரை ( 2020)
14.11.2020
உங்களுக்கு
வழங்குகிறோம்
சென்ற 2019ம் வருடத்திலும்
இணைய பத்திரிகை தொடங்கிய 10 நாட்களுக்குள்
வழங்கினோம்
அப்போது ஒவ்வொரு பகுதியாக இலக்கியம். Aanmigam.கவிதை இப்படி
இந்த வருடம் புத்தகம் போல தொடர்ந்து வாசிக்கும் படி அமைத்துள்ளேன். நமது
பத்திரிகைகளின் பாரம்பரியம் போல தான் இந்த மலரிலும்
கவிதை. சிறுகதை. கட்டுரை. ஆன்மீகம். சமையல். நிழற்படம். ஓவியம். சினிமா, சிரிப்பு இப்படி அனைத்தும் இருக்கும்
எங்கள் இணைய பத்திரிகை சிறிய அளவில் தான் வளர்ந்து கொண்டு வருகிறது.
பிரபலங்கள் எழுத்துக்ளை பெறுவது கடினம்
உங்களை போல நண்பர்கள் வாசகர்கள் இவர்களின் படைப்புகளே
இந்த மலரின் சிறப்பு அம்சம். படைப்புகளை ஒரே மலரில் முழு மையாக கொடுக்க நினைத்தேன். அதற்கு இணையம் சரி பட்டு வரல. அனைத்தும் பதிவேற்றுவது கடினம். ஆகவே மூன்று மலர்களாக வழங்கியுள்ளேன்
பாருங்க. படியுங்க
நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள்
- உங்கள் உமாகாந்த்
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
கவிதை
ஆற்றல்
==========================
Syeda Farhana Ali (chittagong)
==========================/
சமையல் பக்கம்
தீபாவளி காலா ஜாமூன்
வீட்டிலேயே செய்ய
இனிப்பில்லாத கோவா - 1/4 கிலோ,
மைதா - 60 கிராம்,
ஆப்ப சோடா - 1 சிட்டிகை,
ஏலக்காய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்,
ஜாதிக்காய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை :
சர்க்கரையில் 600 மி.லி தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஜீரா காய்த்து வைக்கவும். 1/2 மணி நேரம் ஜீரா (பாகை) ஆற வைக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் பால்கோவா, சோடா, மைதாவை ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து கொஞ்சம் நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
5 நிமிடம் கழித்து, சிறு சிறு உருண்டைகளாகச் செய்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த உருண்டைகளை போட்டு பொன்னிறத்தில் வறுக்க வேண்டும்.
வறுத்த உருண்டைகளை சூடாக இருக்கும் ஜீராவில் சேர்த்து ஊறவைக்க வேண்டும்.
பூசணிக்காய் அல்வா
தேவையான பொருள்கள்:-
பூசணிக்காய் - 300 கிராம் பால் - 500 மி.லி வெல்லம் - 400 கிராம் முந்திரி - 15 திராட்சை - 15 பாதாம் - 15 நெய் - 250 கிராம் குங்குமப்பூ - 1 சிட்டிகை ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன் உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:- பூசணிக்காயைத் தோல் நீக்கி நன்றாகத் துருவி, அதன் சாற்றைப் பிழிந்து சக்கையை மட்டும் எடுத்துக் கொள்ளவும். சிறிது பாலில் குங்குமப்பூவைக் கலந்து வைக்கவும். பாதாமைப் பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் நெய்விட்டு, அதில் பூசணிச் சக்கையைப் போட்டு நன்றாக வதக்கவும். பின்பு சூடான பாலைச் சேர்த்து, மிதமான சூட்டில் வைத்துக் கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும். இடையிடையே நெய் சேர்த்து கொண்டே இருக்கவும். அதன்பின், தேவையான சர்க்கரை, உப்பு, பாலில் கரைத்து வைத்துள்ள குங்குமப்பூவைச் சேர்க்கவும். மற்றொரு கடாயில் சிறிது நெய் ஊற்றி திராட்சை, முந்திரியைப் போட்டு வறுத்து வைக்கவும். கடைசியாக அல்வா பதம் வந்தவுடன் (ஓரங்களில் நெய் வெளிவர ஆரம்பிக்கும்போது) ஏலக்காய்த்தூள், வறுத்த திராட்சை, முந்திரி, பொடித்த பாதாம் சேர்த்து கிளறி இறக்கவும். இப்போது சுவையான பூசணிக்காய் அல்வா ரெடி.
==============================================================================
சினிமா பக்கம்
தமிழ்த் திரையுலகில் தீபாவளி
முதலில் பண்டைய காலத்திலிருந்தே கொண்டாடப்பட்டு வரும் ஒரு பண்டிகையான தீபாவளி இந்து மக்களின் கலாச்சாரத்திலும், கொண்டாட்டங்களிலும் மிக முக்கியமானது என்றால் அது மிகையாகாது. இதன் முக்கியத்துவம் அன்றைய தெருக்கூத்து மற்றும் மேடை நாடகங்களிலும் கூட எடுத்தாளப்பட்டிருக்கிறது. தீபாவளி பண்டிகையன்றே மேடை நாடகத்தின் ஓரங்கமாகவோ, நாடகத்தின் கருப் பொருளாகவோ அமைந்திருந்ததும் நாம் அறிந்ததே.
தமிழ்த் திரையுலகை எடுத்துக் கொண்டால் தலைமுறை இடைவெளி இல்லாமல் அந்தந்த கால கட்டங்களில் தீபாவளியின் முக்கியத்துவம் அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பதையும் நாம் அறிவோம். நிச்சயமாக படங்களிலே இடம் பெற்ற ஒரு திருமணத்தின் தொடர்ச்சியாக தம்பதிகளின் தேன் நிலவு ஒரு இனிமையான காதல் பாடலுடன் அமைக்கப்பட்டிருக்கும். இதைப் போலவே திருமணத்தைத் தொடர்ந்து வரும் தம்பதிகளின் “தலை தீபாவளி” மிக ஜனரஞ்சகமாக அமைக்கப்ப்பட்டிருக்கும். அநேகமாக இங்கேயும் ஒரு இனிமையான பாடல் இடம் பெற்றிருக்கும்.
நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும் படங்களில் தீபாவளிப் பண்டிகை குடும்பத்தோடு கொண்டாடப்படும் விதம் மிக ரசனையோடு படமாக்கப்பட்டிருக்கும். “தலை தீபாவளி” என்றால் இன்னும் அதிக சுவையோடு, கிண்டல், கேலியுடன் வாய் விட்டுச் சிரித்து ரசிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும்.
ஐம்பதுகளின் ஆரம்பங்களில் இருந்தே பல புகழ் பெற்ற திரையுலக ஜாம்பவான்கள், சிறப்பாக மக்கள் திலகம், நடிகர் திலகம், காதல் மன்னன் உட்பட எல்லா நடிகர்களுமே அவர்களின் படங்களில் தீபாவளிப் பண்டிகை சம்பந்தமான காட்சிகளுக்கு தனி இடம் கொடுத்து நடித்ததை என்றுமே மறக்க முடியாது.
இதில் ஜெமினி கணேசனின் “கல்யாணப் பரிசு” படத்தில் முதலில் வரும் அவரின் தலை தீபாவளியும், அப்போது இடம் பெறும் “உன்னைக் கண்டு நானாட” என்ற குதூகலம் மிக்க பாடலும், பிற்பகுதியில் வரும் தீபாவளியன்று பாடப்படும் “உன்னைக் கண்டு நான் வாட” என்ற சோகமான பாடலும் தலைமுறைகளைக் கடந்து இன்றும் பேசப்படுவது குறிப்பிடத்தக்கது. இதே போல் “மூன்று தெய்வங்கள்” படத்தில் இடம் பெற்ற, நடிகர் திலகத்தின் “தாய் என்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம்” பாடல் தீபாவளியின் சிறப்பை சமூக நலனோடு ஒப்பிட்டு அமைக்கப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றதும் மறக்க முடியாதது.
பொதுவாகவே திரைப்படங்களின் காட்சிகளுக்கு மெருகும், பொலிவும் ஏற்படுத்தி எல்லா ரசிகர்களையும் கவரவும், திருப்திப்படுத்தவும் தீபாவளிப் பண்டிகை சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்றியமையாதவை. திறமையான இயக்குநர்கள் தீபாவளி சம்பந்தப்பட்ட காட்சிகளை பார்க்கும் யாவரும், தங்களின் குடும்பத்தின் ஒரு நிகழ்வாகவே அனுபவித்து ரசிக்கும் வண்ணம் அமைத்திருப்பார்கள். அது இன்றுவரை தொடர்கிறது. எனக்குத் தெரிய, அப்போதெல்லாம் காட்சிகள் குறைவாக இருக்கும்போது தயாரிப்பாளர் இயக்குநரிடம் “யோவ், என்னையா குடி முழுகிப் போன மாதிரி கன்னத்திலே கைய வச்சுகிட்டு உட்கார்ந்திருக்கே, பேசாமே ஒரு தீபாவளி சீனை வச்சு ஒரு பாட்டு, டான்ஸுன்னு வேலைய முடிப்பியா!” என்று சொன்னதாக ஒரு இயக்குநர் பேட்டியில் சொன்னதை நான் கேட்டிருக்கிறேன்.
மொத்தத்தில், எத்தனை காலங்கள் சென்றாலும் நம் எல்லோருக்குமே தீபாவளிப் பண்டிகை புதியதுதான். அதே போல் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும், தமிழ்த் திரையுலகில் தீபாவளியும், அதன் முக்கியத்துவமும், புதிதாகவே இருக்கும் என்பதோடு, ரசிக்கவும் வைக்கும் என்பதில் மாற்றமிருக்காது.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
லோகநாதன் பி.எஸ்.
கொழும்பு, ஸ்ரீ லங்கா.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
சிறுகதை
தோழமை
(சிறுகதை)
ஏங்க உங்க பொண்ணு சொல்றதைக் கேளுங்க அவ ஸ்கூலுக்குப் போகணுன்னா மொட்டை போட்டுகிட்டுத்தான் போவாளாம் காலையில் இருந்து ஒரே அடம்
என்னடாம்மா ஏன் அப்படி சொல்றே ?
ப்ளீஸ் பா.... காரணம் கேட்காதே எனக்கு மொட்டை போட்டுவிடுங்க ....
என்னடி விளையாடுறியா எவ்வளவு நீளமாஇருக்கு தலைமுடி..... மகளின் அழுகைக் கண்டு மனம் கேட்காமல் முரளி மனைவியைச் சமாதானப்படுத்திவிட்டு மொட்டை போட்டு கூட்டிவந்தவன் மகள் இதுநாள் இல்லாமல் இன்று மிகவும் சந்தோஷமாக பள்ளிக்கு கிளம்புவதைக் கண்டு யோசனையுடன் அவனே அழைத்துச் சென்றான்.
பள்ளியின் கேட் அருகே நின்ற பையனைக் கண்டதும் வாடா கணேஷ் நாம கிளாஸூக்குப் போகலாம் என்று தோள் மேல் கைபோட்டு அழைத்துச் சென்றவள் முரளிக்கு கையசைத்து விட்டுப் போனாள்.
கண்கள் பனித்தபடி அந்த பையனின் அம்மா அருகில் வந்து ரொம்ப நன்றி ஸார், வேதனைகளைக் கூட வேடிக்கையா பார்க்கிற சமூகம் இது ஆனா உங்க சைந்தவிக்கு ரொம்ப பெரிய மனசு. எம் பையனுக்கு கேன்சர் இப்போ சரியானாலும் ட்ரீட்மெண்ட்டால தலையில முடியெல்லாம் கொட்டிப்போய்....ஸ்கூல்லே எல்லாரும் கிண்டல் பண்றாங்க டீச்சர்கிட்டே சொல்லிட்டுப் போகலான்னு வந்தேன். அப்போ உங்க பொண்ணு நானும் மொட்டை போட்டு வர்றேன்டா அப்பறம் யாரு கிண்டல் பண்றான்னு பார்ப்போன்னு எம் பையனோட கண்ணீரைத் துடைச்சா... ஸ்கூலுக்கு கிளம்பவே பயந்த பையன் இன்னைக்கு தைரியமா கிளம்பி வந்தான்னா அதுக்கு காரணம் உங்க சைந்தவி. மீண்டும் ஒருமுறை கைகூப்பிவிட்டு நகர பேசுவதறியாமல் தன் மகளின் பெருந்தன்மையை நினைத்து மெய் மறந்து நின்றான் முரளி
--கமலகண்ணன்
###############################################################################
ஆன்மிகம்
சத்யநாராயண கதை
- ஸ்ரீமன் நாராயணனின் பெருமைகளை விளக்கும் ஒன்று! சத்யம் என்றால் உண்மை மேலும் நாராயணன் என்னும் பதம் பகவான் விஷ்ணுவை குறிக்கும். சத்யநாராயணன் உண்மை ஸ்வரூபமானவர் .அவரை வணங்கி பூஜை செய்வோருக்கு உரிய பலன் அருளுபவர். சத்யநாராயண கதையை கூறுவது இந்த பூஜையின் முக்கிய அம்சமாகும். சத்யநாராயண கதை பகவான் விஷ்ணுவை பூஜை செய்பவர்களுக்குக் கிடைக்கும் நற்பலன்களையும் , பூஜை செய்வதாக வேண்டிக்கொண்டு பின்னர் அதனை மறந்தோர்க்கு அமையும் சங்கடங்களையும் எடுத்துக் கூறுகிறது.
சத்யநாராயண கதை ஐந்து பாகங்களில் அமைந்துள்ளது. முதல் பாகம் சத்யநாராயண பூஜை முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட குறிப்பு ஸ்கந்த புராணத்தில் ரேவ காண்டத்தில் சொல்லப்பட்டதை குறிப்பிடுகிறது. அதில் நாரதர் பூமிக்கு வந்து மனிதர்கள் படும் அல்லல்களை கண்டு, மனம் துயருற்று ,பகவான் விஷ்ணுவிடம் சென்று தான் கண்டதை விவரித்ததைக் விவரிக்கிறது. விஷ்ணுவும் அதற்கு பதில் கூறும் போது, சத்யநாராயண பூஜையின் மகிமையை எடுத்துக் கூறி, அதை செய்யும் முறையினைச் சொல்லி உலக மக்கள் துயர் துடைக்க ஒரு வழி கூறினார். இப்படியாக சத்யநாராயண பூஜை செய்தவர் துன்பமின்றி வாழ்வார், வேண்டியது பெறுவார் என்பது நமக்கு முதல் பாகத்திலிருந்து தெரிய வருகிறது .
இரண்டாம் பாகம் பகவான் விஷ்ணுவே பிராமணர் உருவம் தரித்து ஒரு அந்தணர் வீடு சென்று அவருக்கு சத்யநாராயண பூஜையின் பெருமையை எடுத்து சொன்ன கதையை சொல்கிறது. அந்த அந்தணர் தன் வீட்டில் பூஜை செய்து பல வளங்கள் பெறுவதை கண்டறிந்த ஒரு விறகுவெட்டி தானும் அப்பூஜை செய்து பலன் அடைந்தான்
. மூன்றாம் பாகம் ஒரு குழந்தை இல்லா வியாபாரியின் கதையைச் சொல்லுகிறது. குழந்தை இல்லாத ராஜா சத்யநாராயண பூஜை செய்வதைக் கண்ட வியாபாரி தானும் பூஜை செய்து ஒரு பெண் குழந்தை பெற்று, அவளுக்கு கலாவதி எனப் பெயரிட்டான். தான் சத்யநாராயண பூஜை செய்ய வேண்டிய தேதியை அவள் திருமணம் வரை தள்ளி வைத்தான். அவள் திருமணத்திற்குப் பிறகும் அவன் பூஜையை செய்யவில்லை. அவனின் இந்த அலட்சியத்திற்கு தண்டனை கொடுக்க கடவுள் தீர்மானித்தார். அவனையும் அவனது மருமகனையும் அரசனின் காவலர் செய்யாத திருட்டுக்கு குற்றம் சுமத்திக் கைது செய்தனர். வீட்டில் வறுமை. மகளும், மனைவியும் வழி தெரியாமல் தவித்தனர். ஒரு நாள், கலாவதி தெருவில் பிச்சைஎடுக்கச் செல்லும் போது, ஒரு வீட்டில் சத்யநாராயண பூஜை செய்வதைப் பார்த்தாள். வீடு வந்து தன் தாயிடம் சொல்ல அவளும் தாங்கள் சத்யநாராயண பூஜை செய்ததை மறந்து போனதை உணர்ந்தாள். அவள் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்து பூஜை செய்யும்போது தன் கணவரும் ,மருமகனும் திரும்பி வரக் கண்டாள். சத்யநாராயண பூஜையை செய்ததால் அவர்களின் குடும்பத்திற்கு நன்மை கிடைத்தது.
நான்காம் பாகத்தில் வியாபாரியின் கதை தொடர்கிறது. வியாபாரி திரும்பியதை கண்ட சந்தோஷத்தில் கலாவதியும், தாயாரும் சத்யநாராயண பூஜையின் பிரசாதத்தை உண்ண மறந்தார்கள். இதனால் கோபம் கொண்ட நாராயணர் அவர்களின் கப்பல்களை கடலில் மூழ்கடித்தார்.தம் தவறை உணர்ந்து அவர்கள் பிரசாதத்தை உண்டவுடன் அவர்களுக்கு தாங்கள் செய்த பூஜையின் மகிமையும் பிரசாதத்தின் மகிமையும் புரிந்தது.
ஐந்தாம் பாகத்தில் நாம் சத்யநாராயண பூஜையை அலட்சியம் செய்த ஒரு அரசனை பற்றி அறிகிறோம். சில கிராமத்தவர்கள் இந்த பூஜை செய்த போது, அந்த அரசன் அதனை மதிக்கவில்லை. அதன் விளைவாக பல இன்னல்களை அனுபவித்தான். பூஜையின் பெருமை அறிந்து பகவானை வேண்டிய போது, இன்னல்களில் இருந்து விடுபட்டான். சத்யநாராயண கதை இவ்வாறாக பூஜையின் பெருமை, பிரசாதத்தின் மகிமை, பூஜை செய்ய மறந்தால் விளையும் கேடு இவற்றை தெளிவாக எடுத்துரைக்கிறது.
=============================================================================
1.பகவதி அம்மன் கோயில் ,திருச்சூர்
ராசேந்திரன்
2, kacheepuram Jain temple
ராமசந்திரன்
3.Thennangur pandurangan temple
மகாதேவன்
////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
அரிய புகைப்படங்கள்
________________________________________________________________________________
Comments