உலகின் பருமனான கிளி

 

உலகின் பருமனான கிளி : நியூஸிலந்தின் 2020ம் ஆண்டின் பறவை ஆக தேர்வு

Kākāpō என்கிற உலகின் ஆகப் பருமனான கிளி, நியூஸிலந்தின் 2020ம் ஆண்டின் பறவை எனப் பெயரிடப்பட்டுள்ளது.அந்த 23 வயதுக் கிளியால் பறக்க முடியாது. பகல் நேரங்களில் அது மற்றவர் கண்ணில்படாமல் ஒளிந்துகொள்ளும்.அதுவே உலகின் ஆக அதிகமான எடைகொண்ட, ஆக அதிக ஆயுள்கொண்ட பறவையும் கூட.பச்சை நிறத்தில் இருக்கும் Kākāpō வகைப் பறவைகள் முற்றாக அழிந்துபோகும் அபாயத்தை எதிர்நோக்குகின்றன.1990களில் வெறும் 50ஆக இருந்த அவற்றின் எண்ணிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகளால் 213ஆக உயர்ந்துள்ளது.Kākāpō 60 வயது வரை உயிர்வாழும் என்று விஞ்ஞானிகள் நம்புவதாக The Guardian செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.




Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி