தீபாவளி மலர் 2020 (3 )
பீப்பிள் டுடே இணைய பத்திரிகையின்
தீபாவளி மலரை ( 2020)
14.11.2020
உங்களுக்கு
வழங்குகிறோம்
சென்ற 2019ம் வருடத்திலும்
இணைய பத்திரிகை தொடங்கிய 10 நாட்களுக்குள்
வழங்கினோம்
அப்போது ஒவ்வொரு பகுதியாக இலக்கியம். Aanmigam.கவிதை இப்படி
இந்த வருடம் புத்தகம் போல தொடர்ந்து வாசிக்கும் படி அமைத்துள்ளேன். நமது
பத்திரிகைகளின் பாரம்பரியம் போல தான் இந்த மலரிலும்
கவிதை. சிறுகதை. கட்டுரை. ஆன்மீகம். சமையல். நிழற்படம். ஓவியம். சினிமா, சிரிப்பு இப்படி அனைத்தும் இருக்கும்
எங்கள் இணைய பத்திரிகை சிறிய அளவில் தான் வளர்ந்து கொண்டு வருகிறது.
பிரபலங்கள் எழுத்துக்ளை பெறுவது கடினம்
உங்களை போல நண்பர்கள் வாசகர்கள் இவர்களின் படைப்புகளே
இந்த மலரின் சிறப்பு அம்சம். படைப்புகளை ஒரே மலரில் முழு மையாக கொடுக்க நினைத்தேன். அதற்கு இணையம் சரி பட்டு வரல. அனைத்தும் பதிவேற்றுவது கடினம். ஆகவே மூன்று மலர்களாக வழங்கியுள்ளேன்
பாருங்க. படியுங்க
நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள்
உங்கள்
உமாகாந்த்
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
கவிதைகள்
1 .சுயநலம்
சுயநல போர்வை அணிந்தவர்களின்
சுயம் அறிந்தேன்....! அடிநெஞ்சம் அரிக்க கண்டேன்...!
உலகழிவின் முதல் ஆரம்பமோ இந்த இந்த சுயநலம்
இருந்திருக்க வாய்ப்பில்லை எனின் -
அழிந்திருக்குமே ஆயிரம் ஆண்டுகள் முன்பே...!
அழிந்திடும் பொருட்க்களுக்காய் அலைந்திடும்
மானிடர்களே என்றறிவீர் விலையில்லாத
உணர்வின் வலியை...!
உணர்வற்றவரே உணர்ந்து கொள்விரோ ஒருநாள்
உணர்வின் உன்னதத்தை...!
- இப்படிக்கு
உணர்வை புரிந்து கொள்ள ஒரு உண்மையான உறவிற்காய்
ஏங்கி நிற்கும் உறவற்றவள்....!
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
2 .என் ரகசிய ரசிகனே
ரசிகனை ரசிக்கும் ரசிகையாய் நான்...!
என்னுள் இத்தனை கோணங்களா???வியக்கிறேன்!!!
பிம்பம் சுமந்தவனோ பிரமிக்கிறேன்...!
நானும் கூட கண்டதில்லையடா
என்னுள் நீ கண்ட கோலங்களை…!
கண்ணோடு கூட கண் சேர்த்ததில்லை நான்
எப்படி கற்றாயடா கரு விழி பேசும் மொழிகளை
என் முனகளிலும் முந்நூறு மொழி சொல்கிறாய்…!
மூன்று விநாடி கூட முழுதாய் முடித்ததில்லை நான்…!
இருந்தும் இதம் பதமாய் எனை மொழிப் பெயர்க்கிறாய்…!
நீ ரசிப்பதில் ரசனைக்கும் கூட ரசனை சேர்க்கிறது…!
என் ரசனைகளையும் கூட ரசிக்கும் என் ரகசிய ரசிகனே..!
எனை உணர்வுகளின் தீவிரவாதியாக்குகிறாய்…!
ஆடை தாண்டி
தேகம் தாண்டி
எதை தேடுகிறது உன் விழி…!
என்னுள் இன்னும் என்ன இருக்கிறதென
எதிர் நோக்குகிறாய்...!
ஏகாந்தமாய் இருந்தவளை ஏன்
காந்தகமாய் கவர்கிறாய்...!
மெய்யோடு கலந்திருக்கும் உயிராய் மெலிர்கிறாய்...!
ரசிகையால் ரசிக்க செய்தவனே அறியாயோ என்
அவஸ்தைகளை..!
அல்லும் பகலும் நான் உன் அருகிலிருக்க தேடும்
காரணங்கள் கண்டதுண்டோ நீ...!
நான் காணும் போதே எனை கவர்ந்து போகிறாய்...!
நீ கவரத் தான் நான் கருவறைக் கண்டதோ..!
காலமேனும் கூறுமோ காதலை நான் காற்றோடு கலந்து
போகும் முன்..!
ரசித்தவள் ரசிப்பதையும் ரசிகின்றாயோ
என் ரகசிய ரசிகனே..!
எந்த ரசவாதம் கொண்டு எனை உனதாக்கினாய் சொல்...!
செல்லற்று இருந்தவளை
சொல் ஆள செய்தவனே மௌனம் களை…!
ஒரு மொழி சொல்...!
பிரியாநாயுடு
====================================================================
சிறுகதை
ஜன்னலோரம்
சிவநேசன் நாற்பதைந்து வயது மதிக்கத்தக்கவர். குடும்பத்துக்காக இது வரையிலும் ஓடாய் உழைத்துக் கொண்டிருக்கும் மனிதர். ஒரு நாளாவது ஓய்ந்து சாய்ந்து அக்கடா என்று ஒரு இடத்தில் அமைதியாய் உட்கார வேண்டும் என்று நினைப்பாரே தவிர எந்நேரமும் உழைப்புதான் அவரது தாரக மந்திரமாய் இருந்தது. அதனால் தானே இன்று அவர் தன்னுடைய மூன்று பிள்ளைகளையும் நன்றாக படிக்க வைத்து ஒரு நல்ல நிலையில் அமர்த்த முடிந்தது.
சிவநேசனின் முதல் பையன் விஷ்ணு ஒரு தனியார் கம்பெனியில் விளம்பர படம் வரையும் பணியில் இருக்கிறான். இரண்டாவது மகள் வைஷ்ணவி இப்போதுதான் திருமணம் முடித்துக் கொடுத்தார். மூன்றாவது மகள் செல்வி அவள் இப்போது மூன்றாம் ஆண்டு பொருளியல் கல்லூரியில் பயின்று வருகிறாள். அவர் மனைவி தங்கம், பெயருக்கேற்றார் போல் அவளது குணமும் சொக்க தங்கம் என்று தான் சொல்ல வேண்டும், அவரை திருமணம் செய்த நாளில் இருந்து இது நாள் வரையிலும் அவளுக்கென்று அவள் எதுவும் விரும்பி கேட்டதில்லை.கணவன் கொண்டு வந்து கொடுக்கும் வருமானத்திற்குள் குடும்பம் நடத்தி தன் பிள்ளைகளையும் நல்ல முறையில் வளர்த்து வந்தாள்.
சிவநேசனிற்கு மனைவிதான் தங்கமாய் வந்தாளே தவிர பிள்ளைகள் என்று சொல்ல போனால் அவனுக்கு வாய்த்தவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் இருந்தது. பையன் என்னவோ வேலை செய்கிறானே தவிர குடும்பத்திற்கு என்று அவன் வாங்கும் சம்பளத்தில் வீட்டிற்கு தருவது வெறும் இரண்டாயிரம் மட்டுமே அவன் கையில் வாங்குவதோ பத்தாயிரம்,கேட்டால் எனக்கு தனிப்பட்ட முறையில் ஆயிரம் செலவு இருக்கும் அதெல்லாம் உங்ககிட்ட சொல்லிட்டு இருக்க முடியுமா..? என்பான்
. இரண்டாவது மகள் வைஷ்ணவியோ வீட்டில் பெற்றவர்கள் அவளுக்கு வரன் தேடும் முன்னரே அவள் தானாகவே ஒரு பையனைத் தேடிக் கொண்டு இவர் தான் உங்கள் வீட்டு மாப்பிள்ளை என்று அறிமுகப்படுத்தினாள். எல்லாம் கைமீறி போன பிறகு என்ன செய்ய முடியும் என்றும் , விசாரித்து பார்த்ததில் பையனும் நல்லவன் கேள்வி படவே அவள் விரும்பியவனுக்கே அவளை கட்டி வைத்தனர் பெற்றவர்கள்.
மூன்றாவது மகள் செல்வி இவள் மட்டும் தான் தந்தையின் கஷ்டம் அறிந்து வளர்பவள். "தாயை போல பிள்ளை நூலைப் போல சேலை" என்பார்கள் அது போல்தான் தன் அன்னையை போலவே இளைய மகளின் குணமும். கல்லூரி முடிந்து மாலை வீட்டிற்கு வந்ததும் பக்கத்தில் இருக்கும் சிறுவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து அதில் வரும் சிறிய வருமானத்தையும் கூட தன் தாயிடம் கொடுத்து விடுவாள். தனகென்று எந்த விதமான ஆசைகளுமின்றி தன் தாய் தந்தைக்காக வளர்ந்து வந்தாள் செல்வி.
சிவநேசனும் அவனது நண்பன் முருகேசனும் தினமும் அலுவலகத்திற்கு ஒன்றாகத்தான் செல்வார்கள்.எப்போதும் சிவநேசன் பேருந்து நிலையத்திற்கு முன்னதாகவே வந்து விடுவார் முருகேசன் சற்று தாமதமாத்தான் வருவார். இன்று வழக்கத்திற்கு மாறாய் முருகேசன் முன்னதாய் வந்து நிற்க சிவ நேசன் தாமதமாக வந்தார். என்னடா சிவா இன்னைக்கு இவ்வளவு தாமதமா வந்திருக்கே...? முருகேசன் எப்போதுமே தன் நண்பனை சுருக்கமாக சிவா என்று தான் அழைப்பார். இல்லைடா முருகேசா இன்னைக்கு செல்விக்கு கல்லூரில ஏதோ பணம் கட்டணும்னு சொன்னா அதான் கொஞ்சம் வெளியில் பணம் ஏற்பாடு பண்ணி கொடுத்துட்டு வர்றதுக்குள்ள நேரமாயிடுச்சி ஆமா நாம போற 1ம் நம்பர் போயிடுச்சா....?
இப்பத்தான் ஒன்னு போச்சு கொஞ்சம் பொறுடா பின்னாலேயே இன்னொருத்தன் வராமலேவா போயிட போறான். எப்படியும் நாம உட்கார்ந்து போக போறதுல்ல அப்புறம் என்னடா ? பேசிக் கொண்டிருக்கும் போதே பேருந்து நிறுத்ததில் பேருந்து வந்து நிற்க சரியாக இருந்தது
. இருவரும் அதன் ஜன்னலின் கம்பியை பற்றிய படியே அதில் பயணம் செய்யத் தொடங்கினார்கள். அதில் ஒரு முதியவர் ஜன்னலின் அருகே அமர்ந்துக் கொண்டு பயணம் செய்த படியே வந்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்து சில இளைஞர்கள் கிண்டல் செய்த படியே வந்தனர்.
காலையிலேயே வீட்ல சண்ட போட்டு வந்துட வேண்டியது இங்க வந்து எந்த வண்டிடா காலியா வருது அதுல ஒரு துண்ட போட்டு இடத்தை பிடிப்போம்னு காத்துகிடக்க வேண்டியது இடத்த பிடிச்சிட்டு கடைசில இறங்கறவரைக்கும் வீட்ல தூங்க முடியாத தூக்கத்தையெல்லம் இங்க தூங்க வேண்டியது இதே பொழப்பா போச்சுடா இந்த பெருசுங்களுக்கெல்லாம் என்று சித்து கிண்டல் செய்த படியே வந்தனர். ஆனால் இதை எதையும் அந்த முதியவர் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. பாவம் சின்ன பசங்க இந்த வயசுல பேசாம வேற எப்ப பேச போறாங்கஎன்று எண்ணிய படியே அவர் தன் விழிகளை சாலையோங்களில் இருக்கும் இயற்கை காட்சியில் செலுத்தினார்.
முருகேசனும் சிவாவும் இறங்க வேண்டிய இடம் வந்ததும், இருவரும் இறங்கிக் கொள்ளவே பேருந்து வேகமாக அவர்களுக்கு டாட்டா காமித்து முன்னே சென்றது
. டேய் முருகேசா ஒரு நாளாவது இந்த பேருந்துல ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்து பயணம் செய்துட்டு வரணமிடா... அதுல இருக்கற சுகமே தனிதான் டா... ஆனா அதுக்கு முன்னாடி என்னோட குடும்பத்துல இருக்கிற கஷ்டத்தையெல்லாம் சரி செய்ஞ்சிட்டு தான் அப்புறம் தாண்டா இதுக்கெல்லாம் ஆசைப் படனும். இப்ப எனக்கிருக்கிற கஷ்டத்துக்கு ஒரு இடத்துல உட்காரணும் அப்படிங்கிற நினைப்பே என் மனசுல வரக்கூடாது. என் சின்ன பொண்ண நல்ல படியா படிக்க வைச்சு, ஒரு நல்ல இடத்துல கல்யாணம் பண்ணி கொடுத்துடனும், அப்புறன் என் பையன், அவனுக்கும் ஒரு நல்ல தொழில் ஏற்பாடு பண்ணி கொடுத்துட்டேன்னா அப்புறம் என்னகென்ன கவலை தினமும் இந்த மாதிரி கூட்டமா வர்ற வண்டில வரனும் அவசியமே இல்லடா நான் வேலைக்கு போகனும் கூட அவசியம் இல்ல தினமும் காலியா வர்ற ஒரு பேருந்துல ஜன்னல் ஓரத்துல உட்கார்ந்துட்டு ஜாலியா சந்தோஷமா என் இஷ்டத்துக்கு வரலாம்.
ஏண்டா உனக்கு என்னைக்கும் இல்லாத திரு நாளா இன்னைக்கு இப்படி ஒரு ஆசை ? கவலைப் படாதேடா நீ நினைச்சதெல்லாம் கூடிய சீக்கிரமே நல்ல படியா நடக்கும்
. இப்ப நாம வந்த இந்த வண்டியில் பார்த்தில் அந்த வயசானவர, அந்த சின்ன பசங்க எவ்வளவுதான் கிண்டல் செய்தாலும், அவர் எப்படி அமைதியா ஜன்னல் ஓரத்தில உட்கார்ந்த்துட்டு மனசில எந்த விதமான கவலைகளும் இல்லாம, நான் மட்டும் தான் இந்த உலகத்தில் இந்த நிமிஷம் உண்மையான சந்தோஷத்தோட இருக்கேன் அப்படிங்கிற மாதிjரி என்ன ஒரு அமைதி அவர் முகத்துல நீ கவனிச்சியா ...?
நானும் ஒரு காலத்துல ஜன்னல் ஓரத்துல உட்கார்ந்துட்டு போறவங்கள இப்படியெல்லம் கிண்டல் செய்தவன் தான். ஆனா இப்பத்தாண்டா தெரியுது அதனோட சுகம் எல்லாம். அந்த பொடியவர் மனசில கூட ஆயிரம் கவலைகள் இருக்கலாம் ஆனா அதுக்கெல்லாம் இந்த பயணம் ஒரு வடிகாலா இருக்கும்னு அவர் நினைக்காறார்.
ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்துட்டு, அந்த இயற்கைகாற்று, எத்தனை விதமான மனிதர்கள் சாலையோரங்களில், சுவர்களில் இருக்கும் வண்ண படம், நாம போற பேருந்த முந்தியடிச்சிட்டு போற பேருந்து இப்படி இன்னும் நிறைய விஷ்யங்கள் இருக்குடா ரசிக்க அப்ப நம்ம மனசில இருக்கற கவலைகள் எல்லாம் மறந்து போயிடும் முருகேசா... மனசே ரொம்பா லேசா ஆனா மாதிரி இருக்கும். கற்பனை பண்ணிப் பார்க்கும் போதே எவ்வளவு சந்தோஷமா இருக்கு இன்னும் பயணம் செய்து பார்த்தா எப்படி இருக்கும்.....? அது சரி உன்னோட கற்பனை சக்திய கொஞ்சம் நிறுத்தி வைடா அலுவலகம் வந்துடுச்சு. மீதிய சாயந்தரம் வச்சுக்கலாம் - என்ற படியே இருவரும் அலுவலகத்திற்குள் நுழைந்து தத்தம் பணியில் ஈடுப்பட்டனர்.
மாலையில் அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய தன் தந்தையிடம் சென்று செல்வி, அப்பா நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் என்றாள்.
என்ன டா... என்ன பேசனும் ....?
இல்லப்பா நான் சொல்ல போற விஷயத்தை கேட்டு நீங்க கோபபடக் கூடாது. எனக்கு இன்னும் மூணு மாசத்துல படிப்பு முடியப் போகுது. அதுக்கப்புறம் நான் வேலைக்கு போகலாம்ன்னு முடிவு பண்ணிருக்கேன்ப்பா.
அதுக்கு இப்ப என்னடா அவசரம் அதுக்குத்தான் இன்னும் மூணு மாசம் இருக்கே ....?
இல்லப்பா எங்க கல்லூரில ஒரு கேம்ப வச்சி அதுல தேர்வு செய்யறவங்கள எல்லாம் இலவசமா அவங்களே பெங்களூர்க்கு கூட்டிட்டு போறதா சொன்னாங்கப்பா அதுல என்னையும் தேர்வு செய்திருக்காங்கப்பா... நான் படிப்பு முடிஞ்சதும் உடனே பெங்களூர் போக வேண்டியது வரும். அதான் இப்பவே உங்ககிட்டயும் அம்மாகிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிடல்லாமேன்னு....?
எங்களுக்குன்னு இந்த வீட்ல ஆறுதலாவும், ஆதரவாவும் இருக்கிறது நீ மட்டும் தாண்டா இப்ப நீயும் எங்கள விட்டு இப்படி இவ்வளவு தூரம் போகனுமா சொல்லு..? ஏண்டா உனக்கு அப்பா இருக்கேன் நான் உன்னை நல்ல படியா வச்சு காப்பாத்துவேன்ங்கிற நம்பிக்கை உனக்கில்லையாடா ...?
அய்யோ அப்பா நான் அப்படி சொல்லலப்பா.. இவ்வளவு நாளும் எங்கள வளர்க்க நீங்க பட்ட கஷ்டம் போதும்ப்பா. இனி உங்கள உட்கார வச்சு காப்பாத்தனும்னு நினைக்கிறேன் அது தப்பா அப்பா...?
அப்படி இல்லடா... அதுக்கு நீ அவ்வளவு தூரம் போகனும்னு என்ன அவசியம்...? இங்கேயே ஒரு நல்ல வேலையா தேடிகிட்டு இருக்கலாமே..?
நீங்க சொல்றது சரிதான்ப்பா ஆனா இப்ப நான் போறது நிரந்தரம் கிடையாதுப்பா..எங்களுக்கு அங்கேயே பயிற்சி கொடுத்து அவங்க கம்பெனிலேயே ஒரு வேலையும் கொடுப்பாங்க. நாம ஒரு வருஷமோ அல்லது இரண்டு வருஷமோ காண்டாராக்ட் முடிஞ்சதும் திரும்பி வந்துடலாம்.
சரிம்மா நீ இவ்வளவு தூரம் சொல்ற போய்ட்டு வா... நீ சந்தோஷமா இருந்தா எங்களுக்கு அது போதும்.
சரிப்பா நான் நாளைக்கே எங்க மேடம் கிட்ட சொல்லிடறேன்.
நாட்கள் செல்ல செல்வியின் படிப்பும் முடிந்தது. அவளை வழியனுப்புவதற்காக சிவநேசனும், தங்கமும் ரயில் நிலையத்திற்கு வந்தனர்.
அம்மாடி அங்க போய்ட்டு அப்பாக்கு போன் பண்ணுமா. நேரா நேராத்துக்கு சாப்பிடு, உடம்ப பார்த்துக்கோ, தொ¢யாத ஊர், கொஞ்சம் ஜாக்கிரதையா இருடா என்று இருவரும் மாறி மாறி பெண்ணுக்கு சொல்லிக் கொண்டிருக்க ரயில் கிளம்புவதற்கு ஆயத்தமானது.
சரிம்மா... நான் அதெல்லாம் பத்திரமா பாத்துக்கறேன் நீங்க உங்க உடம்பையும் அப்பாவையும் பத்திரமா பார்த்துக்கோங்க சரியா..? நான் போய்ட்டு வர்றேன் போய் போன் பண்றேன். என்று சொல்லி புறப்பட்டு போய் இன்றோடு சரியாக ஒரு வருடம் ஆகிறது.
இந்த ஒரு வருடத்தில் செல்வியிடம் இருந்து நாள் தவறாமல் தினமும் அழைப்பு வந்து விடும் தொலைபேசியின் மூலம் இவர்களை தொடர்புக் கொண்டு தினமும் பேசுவாள். மாதா மாதம் அங்கிருந்து பத்தாயிரம் ரூபாய் தன் தந்தையின் பெயரால் வங்கியில் போட்டு விடுவாள்.
ஆனால் சிவ நேசனோ அதில் இருந்து இதுவரை ஒரு ரூபாய் கூட செலவு செய்ததில்லை எவ்வளவு தான் கஷ்டம் வந்த போதிலும் தன் வருமானத்திலும் கூட செல்விக்கென்று ஒரு சிறு பகுதியை அவள் திருமணத்திற்காக அவர் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறார். அதனால் அவள் அனுப்பும் பணத்தையும் கூட அவள் திருமணத்திற்கு உபயோக படுமே என்று விட்டு விட்டார்.
திடீரென்று ஒரு நாள் விஷ்ணு வந்து அப்பா, நான் சொந்தமா ஒரு கம்பெனி வைக்கலாம்னு இருக்கேன் எனக்கு அதுக்கு பணம் வேண்டும் என்று தந்தையிடம் கேட்க.
ஏண்டா என்னவோ நீ அவர்கிட்ட கொடுத்து வச்சத கேக்கற மாதிரில்ல கேட்டுட்டு இருக்க. இப்படி திடீர்னு வந்து ஒரு கம்பெனி வைக்க பணம் கேட்டா அவ்வளவு பணத்துக்கு அவர் எங்கடா போவார்....? என்று தங்கம் ஆவேசமாய் கேட்க
. ஏன் உங்க பொண்ணு செல்வி இருக்காளே அவ தான் மாசா மாசம் உங்க புருஷன் பேர்ல பணம் போட்டுட்டு இருக்காளே எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைக்கிறிங்களா..? அதுல இருந்து எடுத்து கொடுக்க சொல்லுங்க..... நான் ஒண்ணும்இனாமா கேட்கல கம்பெனி ஆரம்பிச்சு ஒரே வருஷத்துல வர்ற லாபத்துல உங்க கிட்ட வாங்கின பணத்த வட்டியோட திருப்பி கொடுத்துருவேன்.
ஏண்டா பெத்தவங்ககிட்ட பேசற மாதிரியாடா பேசற நீ ? அப்படி கடனா வாங்கிறவன் வெளிய வாங்க வேண்டியதுதானேடா ஏண்டா எங்கிட்ட வந்து கேக்கற...? உங்களால தர முடியுமா முடியாதா...?
வெளில என்ன நம்பி எவன் இவ்வளவு பணம் சும்மா கடனா தர்றான். எதாவது பத்திரம் இருக்கா, அது இருக்கா இது இருக்கான்னு கேக்கறானுங்க....? சொந்த வீடா கட்டி வச்சிருக்கீங்க பத்திரத்தை அடமானமா வச்சி கடன் வாங்க...?
இல்லடா அது நான் என் பொண்ணு கல்யாணத்துக்காக சேர்த்து வச்சிட்டு இருக்கேன்,அதுல இருந்து என்னால யாருக்கும் ஒரு பைசா கூட தர முடியாது. என்று இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே தரகர் வந்து இடைமறித்தார்.
அய்யா நான் தரகர் வந்திருக்கேன். நம்ம பொண்ணுக்கு வரன் பாக்க சொல்லிருந்திங்க ஒரு நாலு இடம் கொண்டு வந்திருக்கேன் பாக்கறிங்களா...?
வாங்க தரகரே உட்காருங்க... தங்கம், அய்யாக்கு சாப்பிட எதாவது கொண்டா. அப்புறம் சொல்லுங்க எல்லாம் நல்ல இடம் தானே, என் பொண்ணு குணத்துல மகாலட்சுமி,அவ போற இடத்துல நல்ல படியா இருக்கணும்
. நீங்க சொன்னதையெல்லாம் மனசுல வச்சுட்டுதான் உங்க பொண்ணுக்கு நல்ல இடமா கொண்டு வந்திருக்கேன் நீங்க பார்த்து எந்த இடம் சரின்னு சொல்றீங்களோ அதையே நாம பேசி முடிச்சிடலாம். என்று தான் கொண்டு வந்த ஒவ்வொரு பையனின் விவரங்களைப் பற்றி சொன்னார்.
இதுல விக்னேஷ்ன்ற பையன் ரொம்ப பொருத்தமா இருக்கற மாதிjரி இருக்கு தரகரே எதுக்கு நீங்க ஜாதகத்த கொடுத்துட்டு போங்க நாங்க பார்த்துட்டு சொல்றோம்.
அ ட அட என்ன பொருத்தம் பார்த்திங்களா இந்த பையன் வீட்ல கூட ரெண்டு மூணு பொண்ணுங்க போட்டோவ காமிச்சேன் ஆனா இவங்க நம்ம பொண்ணு போட்டோவ பார்த்து தான் ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்னாங்க. நீங்களும் அதே மாதிரி இந்த பையனத்தான் பிடிச்சிருக்குன்னு சொல்றீங்க, அவங்க ஏற்கனவே ஜாதகம் எல்லாம் பார்த்துட்டாங்க இருந்தாலும் உங்க திருப்திகாக ஒரு தடவை நீங்களும் பார்த்திட்டு ஒரு நல்ல நாள் சொல்லுங்க நாம மேற்கொண்டு அடுத்த விஷய்ங்கள பேசலாம். அப்ப நான் கிளம்பறேன்.
சரிங்க ரொம்ப நல்லது நாங்க பார்த்துட்டு உங்களுக்கு சீக்கிரமாவே தகவல் சொல்றோம். இரவு சாப்பிட்டு முடித்ததும். சிவ நேசனிடம், அவர் மனைவி, ஏங்க மூத்தவள எப்படியோ அவ ஆசைப் பட்டவனுக்கே கல்யாணம் பண்ணிக்கொடுத்தாச்சு, இப்ப நம்ம சின்னப் பொண்ணுக்கும் கல்யாண ஏற்பாடு பண்ணிட்டு இருக்கோம், ஆனா நம்ம பையன் விஷ்ணுக்கு மட்டும் எதுவுமே பண்ணாம விட்டுடோமேங்க...? பய்த்தியக்காரி அவனும் என் பிள்ளைத்தாண்டி அவன அப்படியே சும்மா விட்டுடுவேனா என்ன..? செல்வி கல்யாணத்துக்காக எப்படி பணம் சேர்த்து வச்சிருக்கேனோ அது மாதிரி தான் விஷ்ணுவோட எதிர் காலத்துக்கும் அவன் பேர்ல பணம் போட்டு வச்சிருக்கேன். என்று வங்கி கணக்கு புத்தகத்தை எடுத்துக் காட்ட,
அப்ப ஏங்க காலையில அவன் பணம் கேக்கும் போது இல்லன்னு சொல்லிட்டீங்க...?
எல்லாம் காரணமாத்தான், அவன் கேட்டதும் நான் உடனே கொடுத்துட்டா அவனுக்கு அந்த பணத்தோட அருமை தெரியாது. நாளைக்கு முருகேசங்கிட்ட கொடுத்து அவன் மூலமா இந்த பணத்தை கடனா கொடுக்க சொல்லிருக்கேன். அப்படின்னா அவனுக்கும் கொஞ்சம் பொறுப்பு வரும், இத்தனை நாளா ஊதாத் தனமா சுத்திட்டு திரிஞ்சவன் இப்பத்தான் புத்தி வந்து பொறுப்பா இருக்கான் அதை நானே கெடுத்தா மாதிரி இருக்க கூடாது.
இதை நீங்களே அவங்கிட்ட சொல்லி கொடுத்திருந்தா அவன் இன்னமும் சந்தோஷப் பட்டிருப்பானே அதை விட்டுட்டு ஏங்க இப்படி..?
பெரியவங்க ஒரு பழமொழி சொல்வாங்க, “மூத்தவங்க பேச்சு முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்” அப்படின்னு, அது மாதிரித்தான் நான் இப்ப என்ன சொன்னாலும் அது அவனுக்கு புரியாது, ஆனா கண்டிப்பா ஒரு நாள் புரிஞ்சிப்பான்,என்று தன் தந்தை தாயிடம் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்ட விஷ்ணு அப்போது தான் உணர்ந்தான் தான் இவ்வளவு நாள் பெற்றவர்களை மதிக்காமல் போனது எவ்வளவு பொ¢ய தவறு செய்திருக்கிறோம் ஆனாலும் அதை மறந்து தனக்கு ஒரு நல்லது செய்யத்தானே இந்த பெற்ற மனசு துடிக்கிறது. இதைத்தான் "பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு"என்பார்கள் போலும் என்று தன் அறைக்கு சென்று படுத்துறங்கி மறு நாள் புது மனிதனாக மட்டுமில்லாமல் தன் பெற்றவர்களுக்கு புது பிள்ளையாகவுன் எழுந்தான். முருகேசன் வீட்டிற்கு பணம் கொடுப்பதற்காக வர, விஷ்ணு தன் தாய் தந்தை கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டான்.
என்னை மன்னிச்சிடுங்கம்மா நீங்களும் என்னை மன்னிச்சுடுங்கப்பா. நீங்க நேத்து பேசினதெல்லாம் கேட்டேன் நான், இனிமே ஒழுங்கா வேலை செய்ஞ்சி உங்கள நான் காப்பத்தறேன்ப்பா.நீங்க இனிமேல் வேலைக்கெல்லாம் போக வேண்டாம்.
நீ மனசு மாறினதே எங்களுகு ரொம்ப சந்தோஷமா இருக்குடா. எனக்கு அது போதும் செல்வி கல்யாணத்துக்கு தனியா இருந்து நான் என்ன பண்ண போறேனோன்னு யோசிச்சு இப்ப எனக்கு இரண்டு கை இல்ல நாலு கை இருக்கு எனக்கு அது போதும்டா. அதை பார்த்த முருகேசனும், தன் நண்பனின் வாழ்க்கையில் இனி மகிழ்ச்சி மட்டுமே என்று சந்தோஷத்துடன் கிளம்பினார்.
கல்யாணத்தை பற்றி செல்வியிடம் பேசி மாப்பிளையின் புகைப்படதையும் அனுப்பி வைத்தார். செல்விக்கும் பையனை மிகவும் பிடித்து போனது. அடுத்த மூன்று மாதங்களில் கல்யாணம் என்று நிச்சயக்கப் பட்டது.
மறு நாள் எப்போதும் போல் அலுவலகத்திற்கு கிளம்பினார். சிவநேசன் எப்போதும் போல் பேருந்து நிறுத்ததிற்கு வந்த பிறகு தான் நினைவிற்கு வந்தது இன்று முருகேசன் விடுமுறை சொன்னது. தான் மட்டுமே தனியா செல்ல வேண்டும் என்றும். என்றும் இல்லாமல் இன்று பேருந்து விரைவாக வந்து விட்டது மட்டுமில்லாமல், காலியாகவும் இருந்தது.
அதில் ஜன்னலோர இருக்கையும் இருந்தது. சிவநேசன் அந்த பேருந்தில் ஏறி அந்த ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து, தன் பார்வையை வெளிப்புறம் செலுத்தியப் படியே தன்னுடைய மனக் கண்களை அமைதியாய் மூடியபடியே பயணம் செய்ய ஆரம்பித்தார்.
அவர் மனதில் தன் செல்ல மகளுக்கு அவர் ஆசைப் படி ஒரு நல்ல இடத்தில் வாழ்க்கை அமையப் போகிறது. தன்னுடைய மகன் மனம் மாறி இன்று நல்ல நிலையில் வந்து விட்டான். நாளை தானே இல்லையென்று போனாலும் கூட தன் மனைவிகென்று யாரும் ஆதரவு இல்லாமல் போய் விடக்கூடாதென்று அவர் இறந்து விட்டால் தன் மனைவிக்கு போய்ச் சேரும் என்று போட்டு வைத்திருந்த இன்சூரன்ஸ். அதனால் அவருக்கு இப்போது அவர் மனைவிப் பற்றிய கவலையும் இல்லாமல் போனது. நிம்மதியாக, தன்னுடைய நீண்ட நாள் ஆசையாக இருந்த ஜன்னலோர பயணத்தை தன் கண்களை இறுக மூடிய படியே பயணம் செய்தார்.
பேருந்து ஓரிடத்தில் போய் நின்றது. அதில் அனைவரும் இறங்கிட சிவ நேசன் மட்டுமே கண்களை மூடிய படியே அமர்ந்திருந்தார். பேருந்தின் நடத்துனர் அவர் அருகே சென்று சார்,,, சார் கடைசி இறக்கம் வந்துடுச்சு இறங்குங்க என்று அவரி தோளைத் தட்டி எழுப்பிட சிவ நேசனின் உடல் மட்டுமே சாய்ந்தது. சிவ நேசனின் உடல் மட்டுமே அந்த பேருந்தில் இருந்து இறக்கப் பட்டது ஆனால் அவா¢ன் ஆத்மாவோ தினம் தினம் அந்த ஜன்னலோர இருக்கையில் பயணம் செய்து கொண்டுதான் இருந்தது.
--நித்யஸ்ரீ
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
என் பிரமச்சரியத்தை
கலைக்கிறது
கவிதை
உன் இதழில்
என் இதழ்
பட்டுவிடுமென
மறைத்துக் கொண்டாயா..
எனக்கான நீயாய்
நான் நினைந்திருக்கும்போது
உன் செவ்விதழ்
நனைந்திடுமே
என் முத்தத்தின்
சத்தத்தில்...
துள்ளிக் குதிக்கும்
மீன்களாய்
உன் இரு
விழிகளும்
நீந்துகின்றன
எனது இதயத்தில்..
உனது பார்வைக்குள்
தோன்றும்
விரசமும் கிளர்ச்சியும்
என் பிரமச்சரியத்தை
கலைக்கிறது..!!
பில்மோர் பாலசேனா
(சுபாங், மலேசியா)
============================================================================
சேஷாத்திரி
ஈஸ்வர்
aleppy lake
இளங்கோ
roof garden
வின்சன்ட்பால்
Maanjolai Hills
சூரியநாரயணன்
***********************************************************************************************************************
கட்டுரை
**அப்படி என்னதாங்க இருக்குது இந்த கிரிக்கெட்ல
எனக்கு கிரிக்கெட்டில் ஈடுபாடு அதிகமாக இருக்க காரணம் என் தந்தையார்தான்.
நான் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டருந்தபோது அப்போது நடக்கும் டெஸ்ட் மாட்சுகளை ரேடியோவில் வர்ணனையை கேட்டு வெள்ளை பேப்பர்களில் பென்சிலால் ஸ்கோர் எழுதுவார்
ஒவ்வொரு பாட்ஸ்மேன் அடித்த ரன்கள் எத்தனை விக்கட்டுக்கள் ,எத்தனைவென, எனக்கு ஒன்றும் அப்போது புரியவில்லை, சர்தேசாய் ,என்ஜீனியர் பட்டாடி , போர்டே,பிரசன்னா .,பேடி சந்திரசேகர் வெங்கட்ராகவன் இப்படி அன்ன்றைய பிரபலங்கள்.
அப்பாவுடன் கூட இருந்து எல்லாம் பார்த்து வர்ணணை கேட்டு எனக்கும் கிரிக்கெட் பிடித்துபோய்விட்டது
கிரிக்கட் வர்ணணையில் கெய்க்வாட், லாலா அமர்நாத், ஆனந்தராவ் ( தாசபிரகாஸ்) ரிச்சி பெனாட் இப்படி பல வர்ணணையாளர்கள் பிரபலம்
ரேடியோவுக்கு பிறகு டிரான்சிஸ்டர் அப்புறம் பாக்கெட் டிரான்சிஸ்டர்
அப்போது சுரேஸ்வரய்யா, நம்ம பாலுஅலகண்ணன்
இந்த கால கட்டத்தில் கவாஸ்கர் விஸ்வநாத் சோல்கர் கிர்மானி
கபில்தேவ் என பிரபலங்கள்
பாக்கெட் டிரான்சிஸ்டரை காதோடு அழுத்தி கேட்டுக்கொண்டே போவார்கள், போற வர்வங்க என்ன ஸ்கோர் என கேட்டவுடன் அதற்கு பதில் சொல்வதும் ஒரு உற்சாகாம்‘
இப்ப எப்படி மொபைல காதுல நுழைக்கிறமோ அதபோல.
கல்லுரி வாழ்க்கையில் வகுப்பறையில் பாடம் நடந்து கொண்டிருக்கும்போதே எனது நண்பர் ஒருவர் வயிற்றுக்குள் பாக்கட் டிரான்சிஸ்டரை மறைத்து வைத்து கொண்டு அவர் அணிந்துள்ள புல் கை சர்ட் உள் வழியாக இயர் போன் வயர்கள் மூலம் சென்று காதுக்குள் ,இயர் போன் காதை கையில் மூடிக்கோண்டு போன் மூலம் ஸ்கோர் கேட்டு துண்டு சிட்டு எழுதி எல்லா மாணவர்களுக்கும் பரப்ப மாணவர்களும் தெரிந்து டென்சானாக இருந்ததும் சேம கலக்கல் நினைவுகள்
அப்புறம் கருப்பு வெள்ளை டிவி ,..துர்தர்சன் மட்டும்தான். உலக கோப்பை இறுதி போட்டி பார்த்து குதித்தது . கபில்தேவ் நீங்க கிரேட்டுங்க
அப்புறம் வண்ணபெட்டிகள். இப்ப எல் இ டிக்கள் இன்று ஆண்ட்ராய்ட் ,ஐ பேட்
இப்ப தோனி டென்டுல்கர் கோலி அஸ்வின்
நான் ஆபிசர் இல்லாத சமயம் அவர் ரும்க்கு
சென்று திருட்டுதனமாக பார்த்ததும் ஒரு நாள் மாட்டிக்கொண்டாலும் அதே ஆபிசர் அப்புறம் நட்பு கரம் நீட்டி இருவரும் ஒன்றாக ரசித்ததும் நினைவலைகள்
இப்ப நாம ஏன் நீங்க கூட கிரிக்கெட் ஸ்கோரை இங்கே பேஸ்புக்ல அப்டுடேட் பண்றதும் ஒரு உந்துதல் .ஆர்வம்தான் ,கிரிக்கெட் மாட்சப்ப
டிவி இருக்கும் அந்த கடைக்கு முன்னால் ஒரு கூட்டமே இப்பவும் ரசித்து கொண்டுதான் இருக்கிறது
அப்படி என்னதான் இருக்குதுங்க இந்த விளையாட்ல
,இந்தியா ஆடும்போது இந்தியா ஜெயிக்கனும்னு ஒரு வெறி எல்லாருக்கும் ஏற்படுகிறதே அது ஒரு அதிசயம்தான், மற்ற விளையாட்டுகளை விட மிக அதிக உற்சாகம் இருக்கிறது இந்த சமயத்தில் ஒன்று பட்ட மக்களாக நாம மாறுகிறோம்
காலங்கள் மாறின ,காட்சிகள் மாறின
50 ஓவர்கள் மாட்ச்,ட்டி 20, பகலிரவு
இப்போ ஐப்பி எல் என
ஆனாலும் இந்த ரசனை மாறவில்லை
எனக்கு பிறகு என் மகனும் இந்த விளையாட்டில் அதில் மிகுந்த ஈடுபாடு. இந்தியா தோற்றால் அன்றைக்கு சாப்பிடவே மாட்டான் ,எல்லார் மேலேயும் எரிந்து விழுவான்
சென்ற மாதத்தில் அவன் சென்னை மெரினா கடற்கரையில் அங்கிருந்த இந்த சிறுவர்களை படம் பிடித்தபோது அவர்கள் முகத்தில்தான் எத்தனை ஆனந்தம் .நமக்கும்தான்
#கிரிக்கெட் அப்படி என்னதாங்க இருக்குது இந்த கிரிக்கெட்ல
புகைப்படம் : முரளிகிருஷ்ணகுமார்
--உமாதமிழ்
நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
கட்டுரை
14.11.2020
குழந்தைகள் தினம்
குழந்தைகளிடம் இருந்து கற்றுக் கொள்ள
குழந்தைகளிடம் இருந்து கற்றுக் கொள்ள பெற்றோர்களுக்கு நிறைய இருக்கிறது.அப்படியென்ன உள்ளதென்றால் பெற்றோர்களும் குழந்தைகளாக இருந்து தான் பெரியவர்களாகி இன்று ஒரு குழந்தைக்கு தாயாகவோ தந்தையாகவோ மாறி இருக்கிறார்கள் என்பதை தான் கற்றுக் கொள்ள வேண்டும்.
குழந்தைகளின் உலகம் எப்போதும் சுவாரஸ்யம் நிறைந்தவை.பட்டாம்பூச்சியின் அழகைக் கூட கையில் ஏந்தி ரசிக்க வேண்டுமென்று ஆசைப்பட மாட்டார்கள்.அதன் போக்கில் அதாவது பறக்கும் பட்டாம்பூச்சியை தான் விரும்புவார்கள்.
இப்படியாக வாழ்க்கையை வாழ வேண்டுமென்று தான் குழந்தைகளாக இருந்து பெற்றோர்களாக மாறியவர்களும் எதிர்பார்த்து இருந்து இருப்பார்கள்.நீங்கள் குழந்தையாக இருக்கும் போது உங்களின் எதிர்பார்ப்பு சரியென்றால் இன்று உங்களது குழந்தையின் எதிர்பார்ப்பும் சரி தானே.
எதிர்பார்ப்பு சரியென்று ஒத்துக் கொள்ளும் பெற்றோர்களுக்கு,
* முதலில் உங்கள் குழந்தைகளை பிற குழந்தைகளிடம் ஒப்பிடும் பழக்கத்தை நிறுத்துங்கள்.
* வேலை முக்கியம் தான் இப்போது இருக்கும் சூழ்நிலையில் பணம் என்பது மனிதனின் மிகப்பெரிய தேவை தான் ஏற்றுக் கொள்ளக்கூடியவை தான்.இருப்பினும் பெற்றோர்களே நாளை நீங்கள் தேடும் போது குழந்தைகள் பெரியவர்களாகி விடுவார்களே.அப்போது தூக்கி கொஞ்ச வேண்டுமென்று நினைத்தால் கூட முடியாதே.ஆகவே, வாழ்க்கையை குழந்தைகளுடன் இக்கணத்தில் வாழுங்கள்.
* அப்துல்கலாம் ஐயா அவர்கள் சொல்லுவார் வீட்டில் பெற்றோர்கள் தொலைக்காட்சி பார்ப்பதை குறைத்து கொண்டு புத்தகங்களை வாசியுங்கள் என்று.உங்களைப் பார்த்து குழந்தைகள் வாசிக்க தொடங்கும் என்பார்.
* சக மனிதனை சக உயிரை எவ்வாறு மதிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுக்கும் பொறுப்பு பெற்றோர்களுக்கு தான் உண்டு.ஏனென்றால், குழந்தைகளின் முன்னர் மற்றவரையோ அல்லது உங்களது மனைவியோ இழிவாக நடத்தினால் அந்தக் குழந்தையின் மனதில் இப்படி தான் மற்றவரை நடந்து வேண்டுமென்று பதிந்து விடும்.
* நிறைய இடங்களில் ஆண் குழந்தைகள் வளர்ந்து திருமணமாகி ஒரு பெண்ணிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்று தெரிவதில்லை.பெண்ணின் உணர்வுகளை புரிந்துகொள்ளாது வாழ்க்கை துணையை வீட்டிற்கு வேலைச் செய்ய வருபவர்களை போன்று நடத்தும் அவலமும் நடைபெறுகிறது.காரணம் பெற்றோர்கள் தான்.
* நல்ல கல்வி கெட்ட கல்வி என்று எதுவுமில்லை.படிக்கிற குழந்தை எங்கிருந்தாலும் படித்து விடும் என்பது போல தான் நல்ல சூழலை மட்டும் நீங்கள் அமைத்துக் கொடுங்கள் அவர்கள் படித்து விடுவார்கள்.
* பெற்றோர்களே குழந்தைகள் உங்களிடம் மனம் திறந்து பேசுவதற்கு வாய்ப்புகளை அமைத்து தாருங்கள்.
* குழந்தைகள் தெரிந்தவர்கள் உறவினர்கள் இப்படி யார் வீட்டிற்கு சென்றாலும் அவர்கள் மீது உங்களின் கவனம் சிறியளவில் இருந்துகொண்டே இருக்க வேண்டும்.
* சக மனிதனை மதிக்க வேண்டுமென்று கற்றுக் கொடுக்கும் பெற்றோர்கள் செய்யும் தவறு என்னவென்றால் குனிய குனிய கொட்டு வாங்கு என்றே பழக்கப்படுத்தி விடுகிறார்கள்.
உன்னைத் தவறான முறையில் ஒருவர் அணுகினால் அவர் பெரியவர்களாக இருந்தாலும் சரி சிறியவர்களாக இருந்தாலும் சரி திருப்பி அடி என்றே கற்றுக் கொடுக்க வேண்டும்.
* நாளை நடப்பது பற்றியும் உங்களது கனவுகளை பற்றியும் அவர்கள் மனதில் திணிக்காதீர்கள்.அவர்களை கொஞ்சம் ஓய்வாக வாழ விடுங்கள்.இனிப்பான வாழ்க்கை அமையும்.
* நிதானமாக பொறுமையாக வாழப் பழக்கப்படுத்துங்கள்.ஒரு செயலில் இறங்கும் போது ஆயிரம் முறை யோசிக்க தயார் செய்யுங்கள்.இறங்கிய பின்னர் வரும் சவால்களை எதிர்கொள்ள பழக்குங்கள்.
* இப்போது சொல்லும் இந்த குறிப்பு தான் மிகமுக்கியமான ஒன்று என்று நினைக்கிறேன்.
"தோல்வியை ஏற்றுக் கொள்ள உங்களால் முடிந்த உதவியை ஆறுதலை குழந்தைகளுக்கு தாருங்கள்.வெற்றி என்பது தோல்வியின் விளிம்பில் நிற்கும் கொடி போன்று தான்.அடுத்து முறை கொடியை பிடித்து விடலாம்"
* தெளிவான சிந்தனையை நேர்மறை எண்ணங்களை உண்டு பண்ணுவதற்கு சிறப்பான சூழ்நிலை சந்தர்ப்பங்களை அமைத்துக் கொடுங்கள்.
ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமான மகிழ்ச்சி.அவர்களை வாழ விடுங்கள்.நல் வாழ்க்கை அமையும்.
குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்
- கீர்த்தனா பிருத்விராஜ்
-^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
சமையல்
செட்டிநாடு இறால் பிரியாணி
செட்டிநாடு இறால் பிரியாணி
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - 2 கப்
இறால் - அரை கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
பிரியாணி இலை - ஒன்று
எண்ணெய் - தேவையான அளவு
மராத்தி மொக்கு - ஒன்று
லவங்கம் - 3
சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை, புதினா - ஒரு கைப்பிடி
கறிமசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
தயிர் - ஒரு மேசைக்கரண்டி
பட்டை - சிறு துண்டு
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
மஞ்சள் தூள் - சிறிது
பிரியாணி மசாலா - அரை தேக்கரண்டி
அன்னாசிப்பூ - பாதி
ஏலக்காய் - 3
செய்முறை :
இறாலை சுத்தம் செய்து அதில் மஞ்சள் தூள், உப்பு, தயிர், சிறிது மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய், அன்னாசிப்பூ, சோம்பு தூள், லவங்கம், மராத்தி மொக்கு, பிரியாணி இலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாயை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் பிரியாணி மசாலா, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கறிமசாலா தூள் சேர்த்து வதக்கிய பின்னர் தக்காளி, கொத்தமல்லி, புதினாயை சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வெந்ததும் இறாலைச் சேர்த்து ஒரு முறை பிரட்டி விடவும். அதிகம் வதக்கக் கூடாது.
அடுத்து அதில் 2 கப் அரிசிக்கு 3 1/4 - 3 1/2 கப் நீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
நன்றாக கொதி வந்ததும் அரிசியை சேர்த்து மீண்டும் ஒரு கொதி விடவும். பின் மூடி அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். முக்கால் பதம் வெந்ததும் தம்மில் போடவும்.
சுவையான செட்டிநாடு இறால் பிரியாணி தயார்.
நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள்
##################################################################################
நன்றி கல்கி
ஆனந்தவிகடன்
/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
திரைப்பக்கம்
இவன் ஒரு அதிசயம்’
கமல்ஹாசன் இவர் ஒரு அதிசயம் என கூட சொல்லலாம்
இவன் என்றவுடன் நமக்கு மிக நெருக்கமாகிறார்
என்னை நடிகர் கமல்ஹாசன் எப்படி
கவர்ந்துள்ளார் என்பதை குறித்த ஒரு அலசல்
இந்த பதிவில் அவர் நடித்துள்ள பாத்திரமே மட்டுமே என்னுடைய பார்வையில் அலசப்படுகிறது.
படத்தை பற்றி அல்ல
‘சப்பாணியின் சரித்திரம் ‘
முதலாவதாக அவரின் 16 வயதினிலே படம்
இங்கு நான் பதிவிட்டுள்ள கமலின் படத்தை பாருங்க.
உங்களுக்கு இது நிர்வாணமாக தோன்றுகிறதா.
நிச்சயமாக இருக்காது.
இன்றிருந்து(15.11.2014 ) 43 வருடங்களுக்கு முன்னோக்கி செல்லுங்க.
கமலுக்கு வயது அப்போது 23.
இந்த படம் வெளிவந்த ஆண்டு 1977.
அந்த 23 வயதினலேதான் அவர் சில நல்ல படங்களில் நடித்துகொண்டு இருந்தார் .முண்ணணிக்கு வரும் நேரம்.
நான் இந்த ஸ்டில்லை அப்போது பார்த்தவுடன் அசந்து போனேன்.இப்படி ஒரு பாத்திரமாவென .
இந்த ஸ்டில் ஒட்டு மொத்த தமிழகத்தில் உள்ள கிராமங்களில் வசிக்கும் இளைஞனை சுட்டிக்காட்டியதாக என் மனதில் பட்டது
,இன்றும் இது போல பலர் உடுத்த உடையின்றி வசித்து வருகின்றனர் ..நமது தேசத்தந்தை காந்தி அவர்கள் இதற்காதான் எல்லோருக்கும் முழு உடை கிடைக்கும் வரை நான் சட்டை அணிவதில்லை என கதர் துண்டினை மேலாடையாக அணிந்தார் .
படிப்பறிவே இல்லாத இளைஞன் இவன்.
அந்த கிராமத்திலுள்ள அத்தனை மக்களுக்கும் வயிற்றுபசிக்காக அடிமை போல வேலை செய்து வரும் காசுகளில் சாப்பிடுபவன்.
தன்னை பற்றி சிந்திகக்க தெரியாத வேகுளி.
இவன் பெயர் சப்பாணி
இவர் அறிமுக காட்சியில் நடந்து வரும்கோணல் நடை.
.பல மாதங்களாக வெட்டப்படாத தலை முடி.
மூக்கிலே வளையம் .
இடுப்பில் ஒரு கோவணம்.
ஆனல் இவன் ஆண்டி அல்ல.
அன்றைய சூழ்நிலையில் ஒரு முண்ணனி நடிகர் தனது 23 வயதில் இப்படிப்பட்ட ஒரு கதா பாத்திரத்தில் நடித்தது மிகப்பெரியஆச்சரியம்
பெரிய அதிசயம்.
இன்றைய கதாநாயகர்கள் இப்படி நடிப்பார்களா .
அன்றே அவர் தனது பாத்திரத்தை உணர்ந்து அந்த பாத்திரத்தில் தன்னை ஐக்கியமாக்கிக்கொண்டுதான் இந்த படத்தில் நடித்தார் என்றால் அது மிகையாகாது.
இவரின் இந்த நடிப்பிற்கான இன்வால்மெண்ட என்ன மிகவும் கவர்ந்தது.
இந்த கதாபாத்திரம் ஒட்டு மொத்த தமிழக கிராமத்து இளைஞனின் அவல நிலையை படம்பிடித்துக்காட்டியது .
இப்படிப்பட்டவர்களுக்கு அரசு என்னசெய்தது .இவர்களுக்கு வேண்டிய
பள்ளி படிப்பினையும் மற்றும் கொத்தடிமைகளாக இருக்கும் அவர்களுக்கு அரசு என்ன செய்தது போன்ற கேள்விகள் நமக்கு எழுந்தது
இந்த பாத்திரம் தமிழக கிராம மக்களின் ஒரு எழுச்சியாக என்னால் அன்று காண முடிந்தது.
அப்படத்தை பார்த்தவர்கள் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா.
இவர்களது தேவை நாம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற சிந்தனையையும் சப்பாணி தூண்டினான் என்றே சொல்லவேண்டும்.
நாம் இருக்கும் நகரம்தான் உலகம் என நினைத்தவர்களுக்கு இதற்கு மேலேயும் இப்படிப்பபட்ட ஒரு கிராம உலகம் இருக்கிறது என்பதை
இந்த சப்பாணி சொன்னான்.
‘சந்தைக்கு போனும் ,ஆத்தா வையும் காசு கொடு’ என கமல் பேசும் வெகுளிப்பேச்சு
‘ஆத்தாவுக்கு எல்லாமே இவன்தான் ‘என பரட்டை பேசும் போதும் அதற்கு உள் அர்த்தம் தெரியாமல் வெகுளியாக இருப்பதும்
மயிலு நிர்க்கதியாக விடப்பட்டபின் அவளை காப்பாற்றி பேசும் வசனம் ‘ஆத்தா ஆடு வளர்த்துச்சி, கோழி வளர்த்துச்சி, ஆனா, நாயை மட்டும் வளர்க்கலியே’
மயிலு அவனை ஒரு மனிதனாக மாற்றிய பின் தன்னை கேலிபேசியவர்களை அடித்து ‘இது எப்படி இருக்கு’ என கேட்பதும் ,இறுதியில் தன்னை கல்யாணம் செய்து கொள்ள விரும்பிய மயிலுவை களங்கப்படாமல் காப்பாற்றுவதற்ககாக பரட்டையை கொலை செய்து சிறைக்கு செல்லும் வரை
கமல் ஒரு புது அதிசயம் படைத்தார்’
,வில்லனாக அறிமுகமாகி கதாநாயகனாக மாறிக் கொண்டிருந்த கமலஹாசன் இத்திரைப்படத்தில் கவர்ச்சியற்ற ஒரு பாத்திரத்தில் நடித்ததன் மூலம், எத்தகைய குணச்சித்திரத்தையும் தாம் ஏற்று நடிக்க வல்லவர் என நிரூபித்தார். கமலஹாசனின் நடிப்பாற்றல் விசுவரூபம் எடுத்தமைக்கு இப்படமே அடிக்கல் நாட்டியது என்றால் மிகையாகாது இந்தப் படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை கமல்ஹாசன் தானாகவே விரும்பிச் சென்று பெற்று நடித்தார் என்பதுதான் மிகச் சிறப்பானது.. அவர் மட்டும் “என்ன… கோவணத்தைக் கட்டிக்கிட்டு நான் நடி்ககணுமா?” என்று யோசித்திருந்தால், அந்தப் படம், இன்றைக்கு இந்த அளவுக்கு பேசப்பட்டிருக்குமா என்பது சந்தேகம்தான்..
,இந்தப் படத்தின் கதையை பாரதிராஜா தன்னிடம் முதல்முதலாகச் சொன்ன நேரத்தையும், அதன் பின் நடந்தவைகளையும் பற்றி கமல்ஹாசன், நடிகை ஆண்ட்ரியாவின் வீடியோ ஆல்பம் வெளியீட்டு விழாவில் பாரதிராஜாவை மேடையில் வைத்துக் கொண்டே பேசினார்.
கமல் பேசும்போது “ இங்ககூட பிரசாத் லேப்பில், இந்தப் பையன மாதிரி சுருட்டை முடியோடு ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டர் வந்து என்கிட்ட கதை சொன்னார். அப்போ நான் தொடர்ந்து ஷூட்டிங்ல நடிச்சிட்டு ரெஸ்ட் இல்லாம, உடம்பு சரியில்லாம.. வாந்தி எடுத்துட்டுப் படுத்திருந்தேன். அப்போ என் வயிற்றைத் தடவிக்கிட்டே ‘மயிலு’ன்னு ஒரு கதையை சொன்னார். இவர்தான்.. ‘மயிலு’ கதை என் மனதில் அப்படியே பதிஞ்சுடுச்சு. அந்த ‘மயிலு’தான் பின்னாடி ‘பதினாறு வயதினிலே’ன்னு படமாக வந்தது. அப்போ இவர்கிட்ட நாலஞ்சு கதைகள் இருந்தது. கொஞ்சநாள் கழித்து திரும்பவும் என்கிட்ட கதை சொல்ல வந்தாரு. ரெண்டு, மூணு கதையைச் சொல்லிட்டு சரியில்லாம, இன்னொரு கதையை ஆரம்பிச்சாரு. ‘என்ன மயிலு கதையா?’ன்னு கேட்டேன். ஆச்சரியமா பார்த்துட்டு, ‘உங்களுக்கு எப்படித் தெரியும்..?’னு கேட்டார். அந்தக் கதையின் பாதிப்பு அப்படி..!அன்னிக்கே முடிவு செஞ்சிருந்தேன். நிச்சயமா இந்தப் படத்துல நாமதான் நடிக்கணும்னு.. அதுதான் நடந்துச்சு..” என்றார்.
நல்ல கதைகளைத் தேடிப் பிடித்து, விதவிதமான கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்பது உண்மையான ஒரு கலைஞனி்ன் விருப்பமாகத்தான் இருக்கும்.. அந்த வரிசையில் கமல், ஒரு உண்மையான கலைஞன் என்பதில் சந்தேகமேயில்லை..
-உமாதமிழ்
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
Comments